தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பரிணாம வளர்ச்சியாகத்தான் நான் சீமானை பார்க்கிறேன். நான் சீமானின் பேச்சு வந்தமைக்கு எப்போதும் ரசிகன் இங்கே நான் சொல்வது அவரது கருத்து பற்றிய விமர்சனமே.
Video:
https://www.youtube.com/watch?v=SRHuv7vWrWY
இந்த பேச்சில் 11:38 - 12:20 வரைக்குமான உரைக்கு மட்டும் இந்த பதில்.
சீமான் மிகச்சிறப்பாக பேசுகிறார் அவர் பொய் பேசவில்லை ஆனால் பாதி உண்மையை பேசுகிறார் அது பொய் பேசுவதை விட ஆபத்தாய் ஒரு வித போலி அறிவார்ந்த தன்மையுடன் (Pseudo Intellectualism) இருக்கிறது . Disingenuous என்பது இன்னொரு பதம்..
அவர் குடியரசு தலைவர் பற்றி பேசுகிறார் . குடியரசு தலைவர் ஒரு அலங்கார பதவி . அது பண்டைய 'அரசர் ' பதவியை போன்றது ஆனால் அவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. அவர் 'குடி அரசர்' ஆனால் மக்களாட்சியில் அரசர் என்ற பதவி அதிகாரத்துடன் இருக்க கூடாது அதே சமயம் ஆளும் கட்சியின் கேபினெட் இல்லாத சமயங்களில் (மற்றும் ஒரு அரசு வரும் வரை) குடியரசு தலைவர் அதிகாரத்துடன் இருப்பார் ஆனால் கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது.அதாவது புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது, அதற்கு நிதி ஒதுக்க முடியாது , சட்டங்களை இயற்ற உத்தரவு போட முடியாது.
Under the draft constitution the President occupies the same position as the King under the English Constitution. He is the head of the state but not of the Executive. He represents the Nation but does not rule the Nation. He is the symbol of the Nation. His place in the administration is that of a ceremonial device on a seal by which the nation's decisions are made known.
DR. B.R.Ambedkar
(https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D#%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)
இப்படி இருக்கும் ஒரு பதவிக்கு ஒரு தேர்தல் தேவையா ? அதனால் என்ன பயன்? அதன் மூலம் இந்தியாவிற்கு என்ன மாற்றங்களை கொண்டு வர முடியும். அப்படி ஒரு தேர்தல் நடந்து இருந்தால் இதே சீமான் 'எந்த முடிவும் எடுக்க முடியாத பதவிக்கு தேர்தல் ஒரு கேடா ?' என்று கேட்டு இருப்பார்.
ஆனால் இந்த கூட்டத்தில் இது ஒரு புரட்சிகர கேள்வி.
இந்த பேச்சில் 10:50 - 11:25 வரைக்குமான உரைக்கு இந்த பதில்.
அதே போல் மாநிலங்கவை உறுப்பினர் .. நாம் தேர்ந்து எடுக்கும் உறுப்பினர்களே மாநிலலங்களவை உறுப்பினரை தேர்ந்து எடுக்கின்றனர் அது தேர்ந்தெடுத்த அரசுக்கு மக்கள் கொடுக்கும் அதிகாரம் . சில சமயம் பிரதமர் / கேபினெட் உறுப்பினர்கள் விரும்பும் அங்கத்தினர் தேர்தலில் வெற்றி பெற இயலவில்லை என்றாலும் அவர்களை பதவியில் உட்கார வைக்கும் அதிகாரம். அது உண்மையில் 'நிபுணர்களை' பதவியில் உட்கார வைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது (துறை சார் நிபுணர்களால் குவார்ட்டர் பிரியாணி சரியாக பங்கு வைக்க முடியாது என்பதால்).அப்படி கேவலமான உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பது பிடிக்கவில்லை என்றால் தாராளமாக அந்த கட்சிக்கு ஒட்டு போடாதீர்கள் , எம்.எல்.ஏ இல்லாத பட்சத்தில் அவர்களால் யாரையும் ராஜ்ய சபாவிற்க்கு அனுப்ப முடியாது.
இந்த கூட்டத்தில் இது இன்னொரு புரட்சிகர கேள்வி.
இதற்கு வாய் பிளக்க சில பேர்.
ஒரு கட்சியை திட்டலாம் (பா .ஜ .க , தி.மு.க அ தி மு க போல) அது ஒரு அரசியல் பேச்சு ஆனால் அதே வேகத்தில் அமைப்பை குறை கூறும்போது கொஞ்சம் யோசித்து கூற வேண்டும்.
Our Thoughts
A blog maintained by Vasu and Gokul.
Thursday 28 March 2019
Monday 4 March 2019
இஷா யோகா - தமிழ் போராளிகள்
இஷா யோகா மேல் தமிழ் இணைய போராளிகளுக்கு என்ன கோபம்?
வேறு ஒன்னும் இல்லை அது இந்தியதை சொல்கிறது..இந்து மதம் என்னும் பண்பாட்டு வெளியை உறுதி செய்கிறது ..தமிழ் தேசியம் இந்திய தேசியத்திற்கு எதிரானது என்று பகிரங்கமாக கூவும் இந்த மாநிலத்தில் அது கண்ணை உறுத்துகிறது ..இல்லை என்றால் 'உபவாச ஜெபத்திற்கு' பொங்காதவர்கள் இதற்கு பொங்குவது ஏன்? சும்மா காடு மலை என்று உதார் விட வேண்டாம் பொதுவாக இணைய போராளிகள் இடம் ஆள் பார்த்துதான் பொங்குவார்கள் ...அவர்களுக்கு தெரியும் வைகுண்டராஜன் வேறு, ஜக்கி வாசுதேவ் வேறு, மேல்மருவத்தூர் சாமியார் வேறு என்று. அவர்கள் நீதி ஆளுக்கு தகுந்த மாதிரி மாறுபடும்.
வேறு ஒன்னும் இல்லை அது இந்தியதை சொல்கிறது..இந்து மதம் என்னும் பண்பாட்டு வெளியை உறுதி செய்கிறது ..தமிழ் தேசியம் இந்திய தேசியத்திற்கு எதிரானது என்று பகிரங்கமாக கூவும் இந்த மாநிலத்தில் அது கண்ணை உறுத்துகிறது ..இல்லை என்றால் 'உபவாச ஜெபத்திற்கு' பொங்காதவர்கள் இதற்கு பொங்குவது ஏன்? சும்மா காடு மலை என்று உதார் விட வேண்டாம் பொதுவாக இணைய போராளிகள் இடம் ஆள் பார்த்துதான் பொங்குவார்கள் ...அவர்களுக்கு தெரியும் வைகுண்டராஜன் வேறு, ஜக்கி வாசுதேவ் வேறு, மேல்மருவத்தூர் சாமியார் வேறு என்று. அவர்கள் நீதி ஆளுக்கு தகுந்த மாதிரி மாறுபடும்.
Thursday 1 January 2015
இந்தியத் தத்துவம்
நண்பர் ஒருவர் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் "Indian Philosophy" புத்தகம் இரண்டு பாகங்களையும் ஆறு மாதம் முன்பு பரிசளித்தார். நேற்று தான் முதல் பாகத்தை படிக்கத் துவங்கினேன். அற்புதமான ஆங்கிலம். ராதாகிருஷ்ணன் அவர்களை ஆசிரியர் நாள் தவிர ஒரு போதிலும் நாம் நினைப்பதில்லை. அவர் எவ்வளவு பெரிய மேதை என்பதை விக்கிபீடியா படித்து தெரிந்து கொண்டேன்.
புத்தகத்தின் முதல் சில பக்கங்களிலேயே எத்தனை ஐரோப்பியர்கள் இந்திய தத்துவத்தை ஆராய்ந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு அவர்கள் பெயர்களையும் தருகிறார் ராதாகிருஷ்ணன். Monier Williams என்ற பெயரை பார்த்தவுடன் ஜெயமோகன் நினைவு வந்தது. வெண்முரசு நூல் வெளியீட்டு விழாவில் அவரை சிலாகித்து பேசினார் ஜெயமோகன்.முழு நூலையும் படித்து விட்டு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு சில மாதங்கள் ஆகலாம்.
Subscribe to:
Posts (Atom)