Friday, 20 May 2011

பஞ்ச் பாண்டி





செய்தி: தன்னை கைது செய்து சிறையில் அடைக்கப்போகும் செய்தி கேட்டவுடன் அழுத கனிமொழியை முதலில் தேற்றியவர் ஆ.ராசாவின் மனைவி

ஐயோ..ஐயோ..ஐயோ..யக்கா, உன்னைய நம்பித்தான என் ராசாவ அனுப்பிச்சேன்..இப்போ உன்னையவே உள்ள போட்டாங்களே..நான் என்ன செய்வேன்..

Thursday, 19 May 2011

தேசிய திரைப்பட விருதுகள் - 2011

இன்னைக்கு அறிவிச்ச இந்த பட்டியலை பாருங்க

சிறந்த நடிகர் ௦- ஆடுகளத்துக்காக தனுஷ்(மலையாள நடிகர் சலீம் குமாருடன் விருதை பகிர்ந்து கொள்கிறார்)
சிறந்த இயக்குனர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த துணை நடிகர் - தம்பி ராமையா (வடிவேலுவுடன் காமெடி செய்வாரே. மைனா படத்துக்காக விருது என்று நினைக்கிறேன்)

என்னப்பா நடக்குது நாட்டுல? அஜய் தேவ்கன் எவ்வளோ நல்ல நடிச்சாரு "Once upon a time in Mumbai" படத்துல, இஷ்கியா படத்துல நசுருதீன் ஷா, "Raajneethi" படத்துல மறுபடியும் அஜய் தேவ்கன், மனோஜ் பாஜ்பாய், இப்படி எத்தனையோ பேரு. தனுஷ் நல்ல நடிக்கறாரு ஆனா தேசிய விருது வாங்கற அளவுக்கு தகுதியான நடிப்பா? சைப் அலி கான் "Hum Tum" படத்துக்காக தேசிய விருது வாங்கினப்போ அவங்க அம்மா ஷர்மிளா தாகூர் தான் விருது கமிட்டி தலைவர். அதனால தான் அவருக்கு விருது அப்படின்னு நிறைய பேச்சு. இப்போ என்ன சொல்வாங்க?