Friday, 3 April 2009
Vinnaithaandi Varuvaaya
Is Gautam Vasudev Menon running out of ideas? Look at some of the snaps from the photoshoot of his upcoming film Vinnaithaandi Varuvaaya. The first 2 snaps from the bottom are similar to Alaipayuthey, the third from Minsara Kanavu and the last from Kaakha Kaakha. What is Gautam trying to say? Is he conveying a message that Vinnaithaandi Varuvaya is a breezy romantic entertainer in the lines of the movies mentioned above? No idea.
நரகம்
ஒரு நாளைக்கு 20 சிறைவாசிகள் ஜிம்பாப்வே சிறைகளில் பசியினால் இறக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு அதுவும் மக்காசோள கஞ்சி. சத்துணவு இல்லாமல் கைதிகள் நகரக்கூட முடியாமல் இருக்கிறார்கள். சில பேருக்கு வாயை திறந்து சாப்பிட சத்து இல்லை (எலும்பு முட்டுகிறது...).
நூற்றுக்கணக்கான பேருக்கு காசநோய் (TB) , AIDS. இருப்பதிலே கொடுமை அங்கே உள்ள தனிமை சிறை, அங்கே உள்ள பல கைதிகள் பசியிலும் தனிமையில் வந்த மனச்சிதைவினாலும் மரணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சர்வதேச உதவிகள் கிடைக்குமா கிடைத்தாலும் அது சிறைக்கைதிகளை சென்று அடையுமா என்று தெரியவில்லை.
அடுத்த முறை உணவை வீணாக்கும் முன் யோசியுங்கள்.
படத்தில் ஜிம்பாப்வே சிறை கைதி ஒருவர்.
Thursday, 2 April 2009
அதிகார நந்தி - கபாலி கோவில்
இறைவன் மேல் பூமாரி பொழிய கருடன் தயாராகிறார்
கருடன்
அதிகார நந்தி
மயிலை கபாலி கோவில் பங்குனி விழா துவங்கிவிட்டது. இன்று அதிகார நந்தி. காலை ஆறு மணிக்கு கபாலீஸ்வரரை தரிசித்தேன்.ஆறு மணிக்கு கார் பார்க்கிங்கில் இடம் இல்லை.ஒரு மாதிரி சமாளித்து கிடைத்த இடத்தில நிறுத்தினேன்.வழக்கம் போல் நல்ல கூட்டம்.எழுத்து சித்தர் பாலகுமாரன் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். அவருக்கு வணக்கம் சொன்னேன். சிரித்தபடி சென்றார். நல்லி குப்புசாமி அவர்கள் தான் கோவில் நிர்வாக குழு தலைவர். அவரும் குடும்பத்துடன் வந்திருந்தார்.
பொதுவாக ஸ்வாமி கோவிலை விட்டு வெளியே வரும் வரை வெளியூர் கலைஞர்கள் வாசிக்க கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர-தவில் கோஷ்டி அனுமதிக்க மாட்டார்கள்.கபாலி கோவிலும் இதற்கு விதிவிலக்கில்லை. வெளியே வந்தவுடன் வெளியூர் கோஷ்டி ஒன்று மாட வீதி அதிர மல்லாரி வாசித்தது. எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று கேட்க நினைத்து மறந்துவிட்டேன்.கற்பகாம்பாள் மெஸ்ஸில் பொங்கல் சாப்பிடலாம் என்று சென்றால் நல்ல கூட்டம். திரும்பி வந்து காரை எடுத்துக்கொண்டு ஆபீஸ் வந்து சேர்ந்தேன்.
Monday, 30 March 2009
India=USSR?
இந்திய இன்னுமொரு soviet union-ஆக மாறிவிடும் அபாயம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
பலம் பெற்று வரும் மாநில கட்சிகள், பலம் குறைந்த தேசிய கட்சிகள் என ஒரு சாம்ராஜ்யம் வீழ்வதற்கு என்ன என்ன தேவைப்படுமோ அத்தனையும் நடந்து கொண்டு இருக்கின்றன.
USSR - 1917 - 1989
India - 1947 - ??
மேற்கண்ட செய்தி வராமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.
இவ்வாறு நடந்தால் நக்சலைட்டுகள் பலம் பெற்று தடி எடுத்தவன் தண்டல்காரன் ஆகக்கூடிய நிலை வரலாம். இங்கே தமிழ்நாட்டில் ஈழ ஆதரவாளர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும். அகண்ட பாரதம் மாதிரி அகண்ட தமிழகம் (தமிழ்நாடு + ஈழம்) உருவாக இன்னும் வசதியாக கனவு காணலாம்.
மேலும் தென்தமிழ்நாடு வடதமிழ்நாடு என்று பிரிக்காமல் இருந்தால் சரிதான்.
எதற்கும் தமிழர்கள் பெங்களுரு போவதற்கு passport எடுத்துக்கொள்ளுங்கள்!
Earth Hour
Now, who can observe this? Residents of countries that enjoy uninteruppted electricity can participate in this since switching off lights for 1 hour to save energy out of the 8760 hrs during the year is perfectly fine. But it doesn't make any sense for someone like me residing in Puzhudhivakkam near Chennai where TNEB(Tamilnadu Electricity Board) observes Earth Hour for most of the time during the year.
So when my friend told me that in Canada the energy consumption theme is known as "Flick Off" i said here in Chennai the theme is "Fuck Off".
அத்வானியின் யோசனை
Advani Challenges PM to a live TV Debate