பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - சோனியா என் சோனியா
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - சோனியா என் சோனியா
அமைச்சர் பதவி என்னும், பணத்தோடு அதிகாரம் அடங்கிய பொருள் கேட்டு
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - சோனியா என் சோனியா
அழகிரி அரியணை ஏற இயலுமா? இல்லை மாறன் தான் மந்திரியாக முடியுமா?
உண்மையை நான் அறியாததா?
நீ பெரும்பான்மை வெற்றி பெற்ற உண்மையை நான் அறியாததா?
இந்த கிழவனின் நிலை கண்டு இத்தாலி நெஞ்சமே இரங்கிடு
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - சோனியா என் சோனியா
அத்தனை எம்.பியும் உன் இடத்தில்
நான் பதவியை கேட்பது எவ்விதத்தில்?
அத்தனை எம்.பியும் உன் இடத்தில்
நான் பதவியை கேட்பது எவ்விதத்தில்?
வெறும் இருபத்தி ஏழே என் இடத்தில்
ஆனால் இருநூறுக்கும் மேல் உள்ளது உன் இடத்தில்
காபிநெட்டா? துணை பொறுப்பா?? பல முறை நினைத்தென்னை தவிக்க வைத்தாய்
அழகிரியா? கனிமொழியா? யாருக்கு எதுவென்று துடிக்க வைத்தாய்
பதவிக்கு அலைந்திடும் பரதேசி வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய் மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - சோனியா என் சோனியா
அமைச்சர் பதவி என்னும், பணத்தோடு அதிகாரம் அடங்கிய பொருள் கேட்டு
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - சோனியா என் சோனியா