Sunday, 9 January 2011

ஞானி வலைத்தளம்

எழுத்தாளர் ஞானி குறித்து நான் கூற வேண்டும் என்பதில்லை . ஆனால் இதை படிக்கும் எவரேனும் ஞானியின் வலைதளத்தை பற்றி தெரியாமல் இருந்தால் தெரிவிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை , அவரது வலைத்தள முகவரி www.gnani.net.in. அவரது புகழ் பெற்ற ஒ பக்கங்களை படிப்பதற்கு முதலில் ஒரு user account ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

சாரு - ஆயிரம் ரூபாய் ஆபாசம்

வெகு நாட்களாக இது மனதில் தோன்றி கொண்டே இருந்தது , சாரு தனது எழுத்தில் இப்போதெல்லாம் மிக மிக அதிக விலையில் தான் வாங்கியவற்றை குறிப்பிட்டு கொண்டே இருக்கிறார், முன்பு ஜட்டி , இப்போது பேனா! இப்போது LAMY என்ற பேனாவை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறாராம்.(சாரு எழுதுகிறார் "விலை மலிவுதான் - ஆயிரம் ரூபாய்")

இதன் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார் ? என்னால் ஆயிரம் ரூபாய் குடுத்து பேனா வாங்க முடியாது, அதற்கான வசதி இல்லை, அவரது எழுத்தை படிக்கும் முக்கால்வாசி பேர் ஆயிரம் ரூபாய் குடுத்து பேனா வாங்க மாட்டார்கள் .. பிறகு ஏனிந்த பீற்றல் , ஆபாசம்? என்னால் இரண்டாயிரம் குடுத்து ஜட்டி வாங்க முடியும், ஆயிரம் குடுத்து பேனா வாங்க முடியும் என்று? ஒன்று பணம் இல்லை என்று புலம்ப வேண்டியது, அல்லது பணம் இருக்கிறது என்று அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க வேண்டியது. Shock Values மூலமாகவே வாழ்வதில் தப்பில்லை அது ரசிக்கும்படி இருக்க வேண்டும்.


அவர் தன் புத்தகங்கள் விற்கவில்லை அல்லது விற்கிறது என்று சொல்லலாம் , அது அவரது உரிமை. இப்படி படிப்பவர்களிடம் ஆபாசமாக அலட்டிக்கொள்ள கூடாது. கலாநிதி மாறன் தன் சேனலில் ஒரு பேட்டி வைத்து, தனது வீட்டின் மதிப்பு 100 கோடி , பேனா 3000 ரூபாய் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அப்படி இருக்கிறது இது.

அய்யா , கடந்த பத்து ஆண்டுகளில் நீங்கள் அடைந்த முன்னேற்றம் அபாரமானது , அதற்கான உங்கள் திறமையை மதிக்கிறேன்! உங்களின் உழைப்பை / நீங்கள் குடுத்த விலை மதிக்கிறேன் , அதற்காக பணம் வந்தவுடன் இப்படி குடை பிடிக்கலாமா  , எந்த ஒரு "Rags to Riches" மனிதரும் இப்படி தம்பட்டம் அடிக்க மாட்டார்.