சில நாட்களுக்கு முன்பு, கமலின் அடுத்த படம் பேரரசுவுடன் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தி படித்த அதிர்ச்சியில் உருவான கற்பனை உரையாடலை தான் நீங்கள் இப்போது படிக்க போகிறீர்கள்.
(இடம்: கமல் ஆபீஸ். சந்தானபாரதியும், r.s.சிவாஜியும் மர்மயோகியில் இரண்டே நிமிடம் திரையில் வரப்போகும் தங்களின் role என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி உட்கார்ந்து இருக்கிறார்கள். அப்போது கமலிடம் கதை சொல்ல பேரரசு வருகிறார்.)
பேரரசு: வணக்கம் சந்தானபாரதி சார், எப்படி இருக்கீங்க?
சந்தானபாரதி: உலக நாயகனே, எதாவது படத்துல பேரரசு மாதிரி guest role பண்ண சொன்னாங்களா? எதுக்கு இந்த வேஷம்? ஆனா சும்மா சொல்லக்கூடாது, பார்க்க பேரரசு மாதிரியே இருக்கீங்க.
பேரரசு: சார், நான் நெஜமாவே பேரரசு தான்.
சந்தானபாரதி: ஐயோ, நீ எங்கப்பா இங்க வந்த? இளைய தளபதி ஆபீஸ் அப்படின்னு நெனைச்சு இங்க வந்துட்டியா?
பேரரசு: இல்ல சார், நான் கதை சொல்ல வந்தேன்.
சந்தானபாரதி: கதை சிவாஜிக்கா இல்ல எனக்கா? ஒபெனிங் சாங் எல்லாம் நல்ல பெரிசா வைப்பா. அப்படியே, எதாவது ரேப் சீன் வைப்பா எனக்கு படத்துல. தசாவதாரத்துல, அசின் ரேப் சீன் உண்டு உண்டுன்னு சொல்லி கமல் ஏமாத்திட்டாரு.
பேரரசு: சார், நான் கதை சொல்ல வந்தது கமல் சாருக்கு. சார் இருக்காரா?
R.S.சிவாஜி: ஒ அப்படியா? சரி, உலக நாயகன் உள்ள வர டைம் தான். நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
(மர்மயோகி கெட்டப்பில் கமல் தனது மகள் ஸ்ருதியுடன் உள்ளே வருகிறார்)
பேரரசு: வணக்கம் கமல் சார். கதை விஷயமா discuss பண்ண வர சொல்லி இருந்தீங்க.
கமல்: மர்மயோகிக்கு அப்பறம் என்ன படம் அப்படின்னு எல்லாரும் கேக்கறாங்க. அதான் இப்போவே கதை கேக்க ஆரம்பிச்சுட்டேன். மர்மயோகி 2015 Dec 16 முடிஞ்சுடும். நம்ம படத்தை Dec 17 ஆரம்பிக்கலாம். சரி, கதைய சொல்லுங்க.
பேரரசு: சீன் by சீன் சொல்லட்டுமா இல்ல நாட் மட்டும் சொல்லட்டுமா?
கமல்: மெக்சிகோ நாட்ல Lionel Appuchi அப்படின்னு ஒரு பையன் சமீபத்துல "sameeros சல்பேட்டா உள்ள விட்டா அப்பீட்டானு" ஒரு படம் எடுத்து இருக்கான். விருமாண்டி மாதிரி 3 dimensional screenplay. அந்த மாதிரி ஒரு கதை சொல்லுங்களேன்.
பேரரசு: (சற்றே பீதியுடன்) அந்த படம் நம்ம assistants எல்லாம் பாத்துட்டு நல்ல இருக்குன்னு சொன்னாங்க. நான் இன்னும் பார்க்கல. விஜய்க்காக ஒரு கதை பண்ணேன், அதை உங்களுக்காக மாத்தி இருக்கேன். அதை சொல்லவா?
கமல்: (வெறுப்புடன்)சரி சொல்லுங்க.
பேரரசு: இது ஒரு கிரைம் கலந்த, தங்கச்சி சென்டிமெண்ட் நிறைந்த, தாய் மகன் உணர்ச்சிகள் உள்ள ஒரு பாசக்கார அண்ணனோட தம்பிய பற்றிய கதை. நீங்க தான் தம்பி role பண்றீங்க.
கமல்: கதை குழப்பமா இருக்கு ஆனா நல்லா இருக்கு. இப்போ எல்லாம் ஹாலிவுட்ல இந்த மாதிரி stories தான் பண்றாங்க அதனால நம்ம மக்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். ஆனா எனக்கு ஏன் தம்பி role?
பேரரசு: வயசுக்கேத்த role பண்ணலாம் அப்படின்னு யோசிக்கறீங்களா சார்? அப்போ அண்ணன் கேரக்டர் பண்றீங்களா? நான் வேணும்னா கதைய அண்ணன் ரோலை base பண்ணி மாத்திடறேன்.
கமல்: அது இல்லங்க, தங்கச்சி, தாய், மகன், அண்ணன், தம்பி இந்த எல்லா ரோல்லும் நான் பண்ணிடுவேன். எதுக்கு மத்த ஆர்டிஸ்ட் போட்டு செலவு பண்ணனும்? by the way, படத்துல எதாவது தியரி இருக்கா?
பேரரசு: தியரி இப்போ எதுவும் பிளான் பண்ணல சார். வேணும்னா நீங்க தியரி எக்ஸாம் எழுதற மாதிரி ஒரு சீன் வெச்சுடலாம் சார். உங்க அண்ணன் நீங்க பரிட்சைக்கு போக பஸ் டிக்கெட் காசு கொடுக்க மாட்டேன்னு சொல்றாரு. அப்போ உங்களை பத்து மாசம் சுமந்து பெத்த தாய், தான் கட்டியிருக்கற சேலையை வித்து உங்களுக்கு பஸ் காசை தர்றாங்க. உங்க அம்மாவா புது புது அர்த்தங்கள் கீதா மேடத்தை போடலாம் சார். இந்த சீனுக்கு சி சென்டர் இளைஞர்கள் கிட்டேந்து விசில் பறக்கும். தாய்மார்கள் எல்லாம் அழுவாங்க.
கமல்: (கடுப்புடன்)நான் சொன்னது அது இல்ல, தசாவதாரம் படத்துல வருமே, "Chaos Theory" அந்த மாதிரி எதாவது?
பேரரசு: ஒ அதுவா சார், அந்த மாதிரி இல்ல ஆனா "உலக நாயகனே" பாட்டு மாதிரி ஒண்ணு வெச்சு இருக்கேன். நானே எழுதினது, ரெண்டு லைன் பாடி காட்டட்டுமா சார்?
கமல்: பாடி தொலைங்க.
பேரரசு: நல்ல நோட் பண்ணிகிங்க சார், இந்த பாட்டு " B & C" செண்டர்ல சூப்பர்ஹிட் ஆகும். மியூசிக் ஸ்ரீகாந்த் தேவா பண்றாரு. இந்த பாட்ட சுருதி தங்கச்சிய பாட வெச்சுடலாம் சார்.
"பரமக்குடி ஆளுடா, நான் சொல்லுறத கேளுடா
சுத்தமாக இல்லாட்டி சொறி சிரங்கு வரும்டா ".
(கமல் செம கடுப்பாகிறார்)
பேரரசு: அடுத்த வரில ஒரு philosophy சொல்றோம் சார்,
"போதை போன பின்னால தெளிவு வரும்டா
வாழ்க்கை பாதை உனக்கு புரியனுன்னா அறிவு வரணும் டா"
பேரரசு: எப்படி சார் இருக்கு, லிரிக்ஸ்? இந்த பாட்டுல மட்டும் நீங்க 15 வேஷத்துல வரீங்க சார். சுருதி தங்கச்சி, உனக்கு தான் மியூசிக் தெரியும் இல்ல? சட்டுன்னு ஒரு மெட்ட போட்டு இத பாடு ஆத்தா.
கமல்: (இடைமறித்து) பதினஞ்சு வேஷமா, எப்படி?
பேரரசு: மொத்தம் அஞ்சு philosophy வருது சார் பாட்டுல. ஒன்னுக்கு மூணு வேஷம். உதாரணமா, போதையா இருக்கற மாதிரி ஒரு வேஷம், அதே போதைல வாந்தி எடுக்கற மாதிரி ஒரு வேஷம், அப்பறம் போதை தெளியற மாதிரி ஒரு வேஷம். எப்படி சார்?
கமல்: (மிரட்சியுடன்) சரி அதெல்லாம் விடுங்க, கிளைமாக்ஸ் சொல்லுங்க.
பேரரசு: சார், இப்படி ஒரு கிளைமாக்ஸ தமிழ் சினிமா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. உங்க தங்கச்சிய வில்லன் கடத்திட்டு போய் வெச்சு இருக்கான். அப்போ உங்க தங்கச்சி சாப்பிட வில்லனோட அடியாள் மட்டன் பிரியாணி வாங்கி தரான். அத சாப்பிடற உங்க தங்கச்சிக்கு பேதி ஆகுது. இத கேட்ட நீங்க தமிழ்நாட்ல இருக்கற எல்லா ஆட்டையும் வெட்ட ஆரம்பிக்கறீங்க. அப்படியே வெட்டிட்டு வரப்போ உங்க தங்கச்சி மகனை பார்கறீங்க. அவன் கேக்கறான் "மாமா, எப்போ நிறுத்த போறீங்க இத" அப்படின்னு? அதுக்கு நீங்க "அவங்களை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் அப்படின்னு சொல்றீங்க. அவன் யாரைன்னு கேக்கறான். நீங்க "கசாப்பு கடைகாரனைனு" சொல்றீங்க. அவன் உடனே, "மாமா, இவ்வளோ ஆட்டை வெட்டிடீங்களே, நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா அப்படின்னு கேக்கறான்?" தெரியலப்பா அப்படின்னு சொல்லிட்டு மண்ணுல உழுந்து அழறீங்க. அப்போ நான் ஸ்க்ரீன்ல வந்து ஒரு பஞ்ச் டயலாக் சொல்றேன். அது என்னனா, "இவன் பொறந்தது பரமக்குடி, பிடிச்சது காஜா பீடி, தீபாவளிக்கு வெடிச்சது குருவி வெடி ஆனா வாழ்க்கை பூரா இவனுக்கு கெடைச்சது எல்லாம் சவுக்கடி". சொல்லி முடிச்ச உடனே A film by Perarasu அப்படின்னு போடறோம்.
(கமல் தெறித்து ஓடுகிறார்)