Friday, 4 November 2011
குழி முன்னேற்ற கழகம்
இந்தியாவில் தி.மு.க/அ.தி.மு.க மாதிரி சொகுசான கட்சிகள் வேறு எங்கயும் பார்க்க முடியாது. இதில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்கட்சிக்கு வேலையே வெக்கரதில்லை , வந்த சில மாதங்களிலேயே தனக்கு தானே குழி தோண்ட ஆரம்பிச்சு, 4 3/4 வருஷங்கள்ல ஒரு பிரமாண்ட குழியை தோண்டிஅடுத்த தேர்தல் வந்தவுடன் அதில் கவுந்தடிச்சு தம் கட்டி படுத்துக்க வேண்டியதுதான் , பிறகு வந்த மற்றொரு முன்னேற்ற கழகம் பக்கத்தில் இந்த குழிக்கு நாலடி (அதாவது நாலு மாசம்) இடைவெளி விட்டு ஒரு பெரிய குழி தோண்ட ஆரம்பிக்கலாம். அப்போ எதிர்கட்சி முன்னேற்ற கழகம் என்ன பண்றது? ........ அஞ்சு வருஷம் நல்ல தூங்கலாம் இல்லன்னா புது குழி வெட்டறத வேடிக்கை பாக்கலாம். லைப்ரரியை மாத்த போறேன் அப்படின்னு குழியை தோண்ட ஆரம்பிச்சு இருக்காங்க .. இனிமேல் போர்க்கால அடிப்படையில் பணிகள் பூர்த்தியாகும், இதற்கென ஜெயலலிதா (சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யபடாமல் இருந்தால்) தனி குழுவை நியமித்து வெரட்டி வெரட்டி வேலை வாங்க போறாங்க. குழி எத்தனை அடி அகலம் , எத்தனை அடி நீளம் குறிப்பா எத்தனை அடி ஆழம் அப்படின்னு தெரியலை ...இன்னும் 4 3/4 வருஷம் பொறுத்துக்குங்க மொத்தமா அளந்து பார்த்திடலாம்.
வருங்கால முதல்வர் ஸ்டாலின் வாழ்க..
Sunday, 30 October 2011
நண்பன்
நண்பர் ஒருவர் மேலே உள்ள புகைப்படத்தை முகநூலில்(Facebook) கொடுத்து இதை பற்றி எதாவது பதிவு எழுதும் எண்ணம் உள்ளதா என்று கேட்டிருந்தார். அவருக்காக இது.
புகைப்படத்தை பார்த்தவுடன் தோன்றுவது, "இந்த படத்தின் தோல்விக்கு காரணம் விஜய் தான் என்று ஸ்ரீகாந்தும், ஜீவாவும் கை காட்டுவது போலவும், இல்லை இல்லை இவங்க ரெண்டு பேரும் தான் என்று விஜய் சொல்வது போலவும் உள்ளது". கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படம் எடுக்கிறார்கள். அதன் வெற்றி, தோல்வியை பற்றி நாம் பேசத்
தேவையில்லை இருந்தாலும் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு இந்தியத் திரைப்படம் என்பதால் அதை தமிழில் எடுக்கும் போது மூலப் படத்தின் Originality பாழாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.
வெற்றிக்கு முக்கியக் காரணம் அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. அபிஜத் ஜோஷியுடன் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்தவரும் அவரே. பொதுவாக படத்தொகுப்பாளருக்கு இயக்குனரின் பார்வை இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். 3 Idiots படத்தை பொறுத்தவரை அதன் தொகுப்பாளரும் ராஜ்குமார் ஹிரானி தான். இயக்குனரே படத்தை எடிட் செய்வது காட்சிகளுக்கு வலு கொடுக்கிறது. Rashomon, Seven Samurai போன்ற படங்களை இயக்கிய உலக புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனரான அகிரா குரோசவா தன் படத்தொகுப்பாளருடன் பல நாட்கள் படதொகுப்பறையில் நேரத்தை செலவிடுவார் என்று படித்திருக்கிறேன்.
ஷங்கர் கைதேர்ந்த இயக்குனர். அவர் கலையில் நமக்கு சந்தேகம் இல்லை. இருந்தாலும் அமீர் கானால் அமரத்துவம் பெற்ற ராஞ்சோ பாத்திரத்தை விஜய் செய்கிறார் எனும் போது விஜய்யின் பழைய படங்களை பார்த்தவர்கள் என்கிற முறையில் நம்மை பீதி பற்றிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை. சாத்தூர்(Chattur) வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என்று படித்த போது அதே பீதி பன்மடங்கு அதிகமாக தொற்றிக்கொண்டது. ஓமி வைத்யா என்ற நடிகர் அந்த பாத்திரத்தை மூலப் படத்தில் செய்திருந்தார். இயக்குனரால் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கதாப்பாத்திரம்.
ராஞ்சோ மிஷின்கள்(Machines) பற்றி தன் பேராசிரியருக்கு விளக்கும் காட்சி, படிப்பது எப்படி என்று ராஞ்சோ கல்லூரி முதல்வரான போமன் இரானிக்கும் சக மாணவர்களுக்கும் அளிக்கும் விளக்கம், வயிறு புண்ணாக சாத்தூர்(Chattur) சிரிக்க வைக்கும் பலாத்கார் காட்சி போன்றவற்றை ஷங்கர் தமிழில் எப்படி செய்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். தமிழில் கல்லூரி வாழ்வை மையமாக கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும்(தலைவாசல், நம்மவர், காதல் தேசம் ஆகியவை சில உதாரணங்கள்) அவற்றில் காதல், வன்முறை போன்றவையே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டது. 3 Idiots முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கல்லூரிகளையும் நம் கல்வி முறையையும் சாடியது. நம்மில் பலர் மனதில் நினைப்பதை திரையில் காட்டியதே அதன் அமோக வெற்றிக்கு காரணம். இளைய தளபதி குறித்த பயம் இருந்தாலும் நானும் நண்பனுக்காக காத்திருக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)