Friday, 12 February 2010

மீண்டும் பட்டங்கள்

இன்று OMR a.k.a ராஜீவ் காந்தி சாலை முழுதும் அந்த பகுதியை கடந்து செல்லும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த சுவரொட்டியில் இருந்த பட்டங்கள்.

நம்பிக்கை உதிரமே(உதிரம் அப்படின்னா ரத்தம். நம்பிக்கை ரத்தம் அப்படின்னா என்ன?)
சுழலும் சூரியனே
பூலோக சூரியனே
உயர்ந்த உள்ளமே
எழுச்சி நாயகனே
அஞ்சுகத் தாயின் அருட்கொடையே(போனால் போகட்டும் என்று இது ஒன்று மட்டும் கலைஞருக்கு)
நாளைய தமிழகமே
சாதனை நாயகரே(கவுண்டமணி பாஷையில் சொன்னால், "அய்யா அப்படி என்ன சாதனை செஞ்சாரு?")
இலக்கணம் மாறாத இலக்கியமே(கொய்யால, இதெல்லாம் ஓவரு)
விடியலே

அந்தம்மாக்கு இவங்கள விட புகழ்ச்சி பிடிக்கும் ஆனா அவங்களுக்கு கூட கட்சிக்காரங்க இவ்வளோ பட்டம் எல்லாம் கொடுக்கல. இவங்க விட்டா "துணை முதல்வர் பட்டமளிப்பு குழு" அப்படின்னு ஆரம்பிச்சு என்ன பட்டம் கொடுக்கலாம்னு அறிவாலயத்துல உட்கார்ந்து யோசிப்பாங்க போல.

ஏற்கனவே பாராட்டு விழான்னு ஒரு கேலிக்கூத்து வாரத்துக்கு ஒரு முறை நடக்குது. தமிழ்நாட்ல இருக்கிற எல்லா சினிமா மற்றும் இலக்கிய அமைப்பும் பெரியவருக்கு விருது கொடுத்தாச்சு. சோ சொல்ற மாதிரி, "ஒருத்தர் எவ்வளோ தான் பாராட்டு வாங்குவாரு. அலுக்கவே அலுக்காதா?". தமிழ்நாட்டோட தொழில் வளர்ச்சி கடந்த ஆண்டுல பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை விட கம்மியாம். கொசு கடில தமிழ்நாடே அவஸ்தைப்படுது. திருநெல்வேலில மர்ம காய்ச்சல் வந்து ஜனங்க சாவறாங்க. நேத்து ஒரே நாள்ல அங்க அஞ்சு பேரு அந்த காய்ச்சலுக்கு பலியாயிருக்காங்க. ஆனா, அரசுக்கு அதை பத்தி எல்லாம் எந்த கவலையும் இல்ல. முதல்வர்கள் மாநாட்டுக்கு பிள்ளைய அனுப்பி வெச்சிட்டு இவரு இங்க சினிமாகாரங்க கூட உட்கார்ந்து டான்ஸ் பாத்துட்டு இருக்காரு. என்னத்த சொல்ல?

Tuesday, 9 February 2010

Jaya TV Carnatic Music Idol

கர்நாடக இசை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. American Idol, Indian Idol போல கர்நாடக இசை திறமை உள்ளவர்களை ஊக்குவிக்க ஜெயா டிவி "Carnatic Music Idol" என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறது. இந்நிகழ்ச்சி தினமும் காலை 7:30-8:30 மணி வரை ஜெயா டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

நெய்வேலி சந்தானகோபாலன், கணேஷ் & குமரேஷ், காயத்ரி கிரீஷ், திருச்சூர் ராமசந்திரன், சாருமதி ராமசந்திரன், சித்ரவீணை ரவிகிரன் என்று "படே படே" நடுவர்கள். இன்று பாலமுரளி அவர்கள் வேறு இணைந்து கொண்டார். நடுவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் மிகத் திறமையான மற்றும் இளமை ததும்பும் பாடகர்கள்.இது மற்ற கர்நாடக இசை நிகழ்சிகள் போல் இல்லை.கடினமான "சுற்றுக்களை(Rounds)" கொண்டது.நேரம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.