சமீபத்தில் வாசு குடுத்த சுஜாதாவின் திருக்குறள் - ஒரு எளிய உரை என்ற நூலை படித்தேன். சிறு வயதில் இருந்து திருக்குறள் படித்து இருந்தாலும் (நன்றி: மனப்பாட பகுதி) அவற்றின் அதிகப்படியான திணிப்பு ஒரு வகையில் அதனை வெறுக்க காரணமாக இருந்தது.
இப்போது பல வருடங்கள் கழித்து இந்த எளிய உரையை படிக்கும்போது "திருக்குறளுக்கு இவ்வளவு எளிய உரை எழுதி என்னை போன்றவர்களையும் படிக்க வைத்த சுஜாதா அவர்களின் மேதமையை புகழ்வதா அல்லது குறளில் உள்ள கருத்துகளுக்காக வள்ளுவரை புகழ்வதா" என்று தெரியவில்லை. இருவரையும் புகழும் அருகதையும் எனக்கில்லை என்றும் தெரிகிறது.
பல குறள்கள் புகழ் பெற்று இருந்தாலும், அறிமுகம் ஆகாத சில வைரங்களும் இருக்கத்தான் செய்கின்றன...எனக்கு பிடித்த சில குறள்கள்
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
பொருள்: அரசன் தன்னை சுற்றிலும் உள்ளவர்களை ஒரு சமமாக பார்க்காமல் அவரவர் தகுதிக்கு ஏற்ப கவனித்தால் அவர்கள் நிலைத்து நிற்ப்பார்கள்.
இது இன்றும், எந்த முதல் அமைச்சருக்கும், அமைச்சருக்கும், எந்த அதிகாரிக்கும், முதலாளிக்கும், எந்த மேனேஜருக்கும் பொருந்தும் சொல்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்(து)
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
பொருள்: விவேகமுள்ளவர்கள் பகைவரை பார்த்த உடனே எகிற மாட்டார்கள் . மனத்தில் அடக்கி தக்க சமயத்துக்கு காத்திருப்பார்கள்.
இது பற்றி கொஞ்சம் சிந்தித்து பார்த்தாலே போதும், நம்மை சுற்றி உள்ளவரிடையே இதற்கு உதாரணம் கிடைத்து விடும்.மேலும் விவரங்களுக்கு சோனியா காந்தியை அணுகவும்.
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
பொருள்: பணத்தால் செய்யக்கூடியதைச் செய்யாதவனின் சொத்து நிலைக்காது.எது பணத்தால் செய்யக்கூடியது? நண்பனோ ,உறவினரோ மிகுந்த பணமுடையாய் இருக்கும் சமயம்
செல்வந்தனின் பணம் அதற்கு உதவ வேண்டும். எல்லோரும் கூடும் சமயத்தில் செல்வந்தனின் பணம் உதவ வேண்டும், பஞ்ச காலத்தில் உதவ வேண்டும், நெருக்கடியான காலகட்டத்தில் உதவ வேண்டும். இதை செய்யாதவனின் சொத்து நிலைக்காது என்கிறார் வள்ளுவர். இதில் சொத்து என்பதை செல்வந்தனின் மகிழ்ச்சி அல்லது மதிப்பு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தெரிந்து தெளிதல் என்னும் அதிகாரத்தில் இப்படி கூறுகிறார்,
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நானற பழி
"பொருள் : உறவுகள் இல்லாதவரை நம்ப கூடாது. பற்று இல்லாததால் பழிக்கு அஞ்ச மாட்டார்கள்"
...................