Wednesday, 13 January 2010

இந்த வார சிறந்த விஷயங்கள்

இந்த வார சிறந்த திட்டு வாங்கியவர் கர்நாடக முதல்வர் எடியுரப்பா (சிறந்த திட்டு முன்னாள் முதல்வர் தேவ கௌடா).

இந்த வார அதிர்ச்சி , பன்றி காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து வாங்கச்சொல்லி வற்புறுத்திய WHO நிறுவன அதிகாரிகள் விஞ்ஞானிகள் , மருந்து கம்பனிகளிடம் இருந்து வாங்கிய லஞ்சம்.


இந்த வார சிறந்த அரசாங்கம்  : கிராமங்களில் ஏறி குளங்களை தூர் வார வைத்திருக்கும் பணத்தை இலவச டி.வீக்கு குடுக்கும் தமிழக அரசு (தலைமை தணிக்கை துறை அதிகாரி சொல்லியது).


இந்த வார சிறந்த டீம்: இந்திய ஹாக்கி டீம்.


இந்த வார சிறந்த போட்டோ: அணில் அம்பானியும் முகேஷ் அம்பானியும் , Economic times-விழாவில் கை குடுத்து கொள்ளும் காட்சி, வடிவேலு பாஷையில சொன்னா "சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு ....."