இன்று கொடி பறக்குது படத்தின் 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு' படத்தின் பாடலை கேட்டு கொண்டு இருந்தேன். இசை:ஹம்சலேகா ..ஆனால் பலர் இளையராஜா என்றே நினைத்திருப்பர். ஹம்சலேகா, சந்திரபோஸ், மரகதமணி (கீரவாணி) போன்றோர் ஜொலிக்காமல் போனதற்கு காரணம். அவர்கள் இசையை மக்கள் இளையராஜா இசை என்று நினைத்ததே. பாடல்கள் அற்புதமாக இருந்தாலும் , அது இளையராஜா இசையிலிருந்து வேறுபடவில்லை, அதனால் Hero Worship உச்சத்தில் இருந்த தமிழகத்தில் இளையராஜாவை அசைக்க முடியவில்லை.
சில உதாரணங்கள்
ரஜினியின் மனிதன் - இசை சந்திரபோஸ்
பார்த்திபனின் புதிய பாதை - இசை சந்திரபோஸ்
பாலச்சந்தரின் அழகன் - இசை மரகதமணி(கீரவாணி)
பாலச்சந்தரின் ஜாதி மல்லி - இசை மரகதமணி
பாரதிராஜாவின் கொடி பறக்குது - இசை ஹம்சலேகா
பாரதிராஜாவின் வேதம் புதிது - இசை தேவேந்திரன்
இளையராஜா இசையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசையை தந்த ரஹ்மானே கடைசியில் வெற்றி பெற்றார்.
Wednesday, 7 May 2014
Monday, 5 May 2014
மெல்ல பேசும் கள்ளப் பார்வை...
இன்று தற்செயலாக உலகம் சுற்றும் வாலிபன் படப்பாடலான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' கேட்டேன். அதில் வரும் ஒரு வரி என்னை உலுக்கி விட்டது..
மெல்ல பேசும் கள்ளப் பார்வை ஜாதிப்பூவின் மென்மை
நான் வாழ்வில் காதலித்தது இல்லை..ஆனால் காதலிக்கவில்லையே என்று ஏங்க வைத்துவிட்டது இந்த வரி.
இதுதான் கவிஞரின் (வாலி) வெற்றி போல..
மெல்ல பேசும் கள்ளப் பார்வை ஜாதிப்பூவின் மென்மை
நான் வாழ்வில் காதலித்தது இல்லை..ஆனால் காதலிக்கவில்லையே என்று ஏங்க வைத்துவிட்டது இந்த வரி.
இதுதான் கவிஞரின் (வாலி) வெற்றி போல..
Subscribe to:
Posts (Atom)