Friday, 30 January 2009

ஆறு இந்திய அரசர்கள்

இந்திய அரசர்களுள் பின்வரும் ஆறு அரசர்கள் மட்டுமே தங்களது வாழ்க்கையில் எந்த போர்க்களத்திலும் தோற்றது இல்லை.

1. அசோகர்

2. சமுத்திர குப்தர்

3. கரிகால பெருவளத்தான் (சங்க காலம்)

4. முதலாம் நரசிம்ம வர்மன்.

5. ராஜ ராஜ சோழன்

6. ராஜேந்திர சோழன் (I)

ஆக ஆறு மன்னர்களுள் நான்கு பேர் தமிழர்கள் .... !

உயிர் இத்தனை மலிவா?



ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் நேற்று முத்துக்குமார்(படத்தில் உள்ளவர்) என்ற இளைஞர் சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளித்து கொண்டார். மக்கள் கூட்டம் புழங்கும் சாஸ்திரி பவனில் காலை பத்து மணிக்கு ஒருவர் எப்படி தீக்குளித்து கொண்டார் என்று புரியவில்லை. தடுக்க ஒரு ஆள் கூடவா இல்லை? இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று நமது அரசியல் கட்சி தலைவர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று அவருக்கு ஹீரோ அந்தஸ்து கொடுத்து விட்டார்கள். உடலை பெற்று கொள்ள வந்த அவரது உறவினர்களிடம் செய்தியாளர்கள் பேச காவல்துறை அனுமதிக்கவில்லை.

நிஜமாகவே இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணம் கொடுத்து அரசியல் கட்சிகள் எதாவது இதை செய்ய சொன்னதா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் முத்துக்குமார் எடுத்த முடிவு பைத்தியக்காரத்தனமானது. தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமார் படித்த வாலிபர் என்றே பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. முத்துக்குமார் குடும்பத்தை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. ஆனால், இறந்து போன முத்துகுமாரை நினைத்தால் ஆத்திரம் தான் வருகிறது.