Friday, 10 April 2009

தொலைந்து போனவர்கள்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் சுஜாதா ஒரு வசனம் எழுதியிருப்பார். "மரணத்தை விட கொடுமை என்ன தெரியுமா? மறக்கப்படுவது" என்று. எவ்வளவு உண்மை. சமீபத்தில் மறைந்த நடிகர் நாகேஷ் அவர்கள் கூட, புகழின் உச்சியில் இருந்த போது அவரை தேடி வந்தவர்கள் அவரது அந்திம காலத்தில் அவரை கண்டுக்கொள்ளவில்லை என்று வருந்தியதாக செய்திகள் படித்தேன். தமிழ் திரையுலகில் ஓரளவு பெயர் வாங்கி ஒரு கட்டத்தில் ஓசையே இல்லாமல் திடீரென்று காணாமல் போன சிலரை பற்றிய பதிவு இது.

பாக்யராஜ்
=========
சகலகலா வல்லவர். இவரை போல் திரைக்கதை அமைக்க இன்றும் ஆள் இல்லை என்பார்கள். பாக்யா என்ற பெயரில் வார இதழ் நடத்தி அதிலும் வெற்றி கண்டார். சுந்தரகாண்டம் திரைப்படத்திற்கு பின் ஏனோ இவர் நடித்த/தயாரித்த/இயக்கிய எந்த படமும் வெற்றி பெறவில்லை. முருங்கக்காயை இவர் அளவுக்கு யாரும் மார்க்கெட்டிங் செய்யவில்லை.

மோகன்
=======
சில்வர் ஜூபிளி நாயகன் என்று பெயர் பெற்றவர். 25 சில்வர் ஜூபிளி படங்கள் கொடுத்த ஒரே நடிகர். கமல்/ரஜினி கூட அத்தனை படங்கள் கொடுக்கவில்லை. பல படங்களில் பாடகராக மைக் பிடித்து நடித்ததால் "மைக்" மோகன் என்று அழைக்கப்பட்டார். ஒரு முறை கமல் சொன்னார் "நல்ல வேளை நண்பர் மோகன் வந்து என்னிடமிருந்து மைக்கை வாங்கினாரோ நான் பிழைத்தேன். இல்லையென்றால் நான் மைக் கமல் என்று பெயர் வாங்கியிருப்பேன் என்றார்".

ஹீரோவாக கொடி கட்டி பறந்த போது நெகடிவ் ரோல் செய்தவர்(நூறாவது நாள்,விதி). மௌன ராகம் தான் கடைசியாக அவர் நடித்து பெயர் வாங்கிய படம். அதன் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இசைக்கு இளையராஜா, பின்னணி குரலுக்கு S.N.சுரேந்தர் என்று ஒரு சூப்பர் காம்பினேஷன் வைத்து வெற்றி பெற்றார். சமீபத்தில் சுட்டபழம், அன்புள்ள காதலுக்கு என்று சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் படங்கள் ரிலீஸ் ஆன அதே வேகத்தில் பொட்டிக்கு போய்விட்டன.

ராமராஜன்
=========
கமல், ரஜினிக்கு பிறகு ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர். உண்மையை சொல்லவேண்டும் என்றால் பி,சி சென்டர்களில் இவர் படங்களுக்கு இருந்த வரவேற்பை பார்த்து கமலுக்கும் ரஜினிக்கும் சில காலம் பேதி கண்டது. இவருக்கும் பெரிய பக்கபலம் இளையராஜாவின் இசை. அதை தவிர கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை. கடைசியாக என்ன படத்தில் நடித்தார் என்றே நினைவில் இல்லை. நடிகை நளினியுடன் இருபது ஆண்டுகள் வாழ்ந்து பின் விவாகரத்து பெற்றார். ராமராஜனை விட நளினி இப்போது பிரபலம். டிவியை அணைத்த பின்பு கூட அவர் முகம் தெரிகிறது.

ராம்கி
=====
இவர் ராமராஜன், மோகன் அளவுக்கு பிரபலம் இல்லை. ஆனால், இவருக்கும் கொஞ்சம் ரசிகர்கள் இருந்தார்கள். இணைந்த கைகள், சின்ன பூவே மெல்ல பேசு, செந்தூர பூவே போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார்.கடைசியாக, குஷ்பூ மற்றும் ஊர்வசியுடன் இரட்டை ரோஜா என்ற படத்தில் நடித்தார்.

முரளி
======
காலேஜ் ஸ்டுடென்ட் பாத்திரத்தில் ரொம்ப நாள் நடித்தார். ஒரு கட்டத்தில் கால மாற்றத்தை உணர்ந்து மல்டி-ஹீரோ படங்களில் நடித்தார். ஆனாலும், சோபிக்க முடியவில்லை. இப்போது இவர் மகன் "பாணா" என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

பிரதாப்
=======
தமிழ் சினிமாவில் ஹீரோவிற்கு பைத்தியம் பிடிப்பது போன்ற கதாபாத்திரம் என்றால் கூப்பிடு பிரதாப்பை என்பார்கள். லூசு வேடங்களுக்கு அவ்வளவு பொருத்தமாக இருப்பார். சமீபத்தில் மணிரத்னத்தின் குரு படத்தில் மாவட்ட ஆட்சியாளர் பாத்திரத்தில் தோன்றினார்.உலக சினிமா பற்றி நல்ல ஞானம் உள்ளவர் என்று எங்கோ படித்தேன். வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன் போன்ற படங்களின் இயக்குனர். நடிகர் திலகம் சிவாஜி, மோகன்லால் என்ற இரு துருவங்களை வைத்து படம் எடுத்த ஒரே இயக்குனர். படத்தின் பெயர் யாத்ரா மொழி.

Wednesday, 8 April 2009

Advani Vs Mallika Sarabhai

BJP’s Prime Ministerial candidate L.K. Advani who recently challenged incumbent Premier Manmohan Singh to a televised debate has got a taste of his own medicine. Advani has now been invited by danseuse Mallika Sarabhai, who is contesting against him as an independent candidate at the Gandhinagar parliamentary constituency in Gujarat, to an open debate.

If Advani believes in practicing what he preaches, he should accept Sarabhai’s challenge. Advani might be the Prime Minister-in-waiting, he might be a national leader, but he is first a Member of Parliament. Thus, his primary responsibility is towards his constituency. The people of Gandhinagar have every right to know what he has done for them during the four terms that he has represented the constituency.

Sarabhai has posed five questions to Advani, all of which pertain to his performance as an MP:

1. How many and what kind of questions have you raised in the Lok Sabha about Gandhinagar in the last five years?

2. What efforts have you made towards opportunities for education and livelihood generation in rural areas of the constituency?

3. Why have you not spoken out against violence and atrocities against women in Gujarat and specifically in Gandhinagar?

4. Despite being an MP representing Gandhinagar for two decades why have not shown any concern towards local issues of the constituency as well as the State?

5. Have you used your funds under MPLAD (Member of Parliament Local Area Development) scheme to benefit the deprived and underprivileged in your constituency?

Critics might ask what Sarabhai’s contribution to Gandhinagar is, but it should be remembered that she was not an MP for 20 years, like Advani. Besides, the questions she has posed are what every voter would want to ask his representative.

It remains to be seen if Advani will take up Sarabhai’s challenge. If he does, he will set a healthy trend which can be emulated across the country, if he does not, Advani will prove that he is no better than others of his ilk.

With election campaigning becoming increasingly communalised and personalised, the real issue, that is, the contribution of an MP to his constituency had got sidetracked. Sarabhai deserves to be congratulated for bringing the debate back to the basics.

Source: MSN

Tuesday, 7 April 2009

Chidhu..


ஹோம் மினிஸ்டர் சிதம்பரத்தை ஷூவால அடிசுட்டங்காப்பா .... 1984 - riots பத்தின கேள்விக்கு congress minister பதில் சொல்லாம ஜகா வாங்கிட்டதுனால போட்டு தாக்கிட்டார் ஒரு சிங்.. Singh is King...

இருப்பதிலேயே சுமாரான ஒரு decent-னா சிதம்பரம் மேலே shoe அடிச்சது தப்புன்னாலும் ஒரு Jagadish Titler-ஐ வெளியே விட்டதுக்கு ஒரு காங்கிரஸ் மந்திரிக்கு அடி விழுந்தது சரிதான்.

ஹ்ம்ம் பிரச்சனை என்னன்னா அந்த சிங் பழைய இந்திய cricket team மாதிரி , கொஞ்சம் ஸாதுவான ஆளு கிடைச்ச வெச்சு வாங்கிடுவார் போல..இவ்வளவு நாள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாருன்னு தெரியலை....

சிதம்பரத்துக்கு செருப்படின்னா, நரேந்திர மோடி , லாலு பிரசாத் , குமாரசாமி , கருணாநிதி , கருணாகரன், பால் தாக்கரே , தேவே கவுடா, ராஜ் தாக்கரே , மறைந்த ஹர்ஷத் மேதா , வீரபாண்டி ஆறுமுகம் , அழகிரி , parliment-ல வெறும் கூச்சல் போட்ட சுமார் 400 எம்.பிக்கள் மாதிரியான ஆளுங்களுக்கு என்ன treatment?

Monday, 6 April 2009

முகவை குமார்

முகவை குமார் 1973 ஆம் ஆண்டு சிறிலங்காவின் கண்டி நகரில் பிறந்தார். அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு அவர் குடும்பம் புலம் பெயர்ந்தது. சிறு வயதிலேயே அரசியல் ஈடுபாடு கொண்ட குமார் தன் தாத்தா சுப.தங்கவேலன் பொதுமக்களுக்கு செய்த நற்பணிகளை கண்டு தானும் அது போல் செய்ய உறுதி கொண்டார்.

இதற்கு முதல்படியாக திரைப்பட துறையில் சேர்ந்த அவர், நாயகன்,தளபதி போன்ற படங்களின் மூலமாக மக்களை நல்வழிப்படுத்தினார். 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட்ட அவர், மக்கள் காவலன் மு.க.அழகிரி துணையோடு அங்கு பெரும் வெற்றி பெற்றார்.முகவை குமார், சிவகுமார் மற்றும் ரித்தீஷ் என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.

முகவை குமாரின் புகழ் பெற்ற தத்துவ பாடல் "இருந்தாக்க அள்ளிக்கொடு இல்லாட்டி சொல்லிக்கொடு நம்ம வழி நல்ல வழி தான்" அன்றைய இளைஞர்களை தூங்கவிடாமல் செய்ததை நீங்கள் உங்கள் தாத்தாக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பின்குறிப்பு: இப்போது நீங்கள் படித்தது 2075 ஆம் ஆண்டு S.S.L.C பொதுத்தேர்வில் கேட்கப்படவுள்ள J.K.Ritheesh பற்றிய கேள்விக்கான பதில்

Sunday, 5 April 2009

Happy Birthday Vasu

Hi Vasu,

Wish you many more Happy Returns of the Day!

-Gokul

49-O

ஞானியின் ஒ பக்கங்களை பல பேர் அறிவார்கள். பார்லிமென்ட் தேர்தல் அருகில் வர ஞானி 'யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை' எனத்தெரிவிக்கும் '49-O' என்ற option-ஐ பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார்.

ஆனால் இதனை பயன்படுத்தினால் என்ன ஆகும் , என்ன நன்மை கிடைக்கும் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்கு ஒரு செய்தி தெரியலாம் அதாவது இத்தனை பேர் நம்மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்று , அது அவர்களுக்கு நன்றாகாவே தெரியும் இப்போது கூட.

எனவே 49-O என்பது எதிர்ப்பை காண்பிக்கும் சரியான வழி அல்ல. நமது ஓட்டுக்கள் எல்லாம் செல்லாத ஒட்டுக்களாகும் கதி தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை, அதன் மூலம் மாற்றம் கொண்டு வர முடியவே முடியாது.

மேலும், ஞானி எழுதுவது அச்சு ஊடகத்தில் (printing media), நமக்கே தெரியும் ஓட்டுப்போடும் பெரும்பான்மையான மக்கள் வாசிப்பவர்கள் அல்ல என்று, எனவே அவர்களுக்கு இந்த 49-O கொஞ்சம் ஓவர்.

எனவே இப்போது தேவை,

1. படித்தவர் எல்லோரும் ஓட்டுப்போட வேண்டும்.
2. இருப்பதிலேயே நல்லவர்களாக பார்த்து ஓட்டுப்போட வேண்டும்.

இரண்டுமே முக்கியம். முதல் விஷயமே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும் இரண்டாவது விஷயம் பற்றி யோசிக்கும்போது நமக்கு பல கேள்விகள் வரலாம் 'யார் அந்த 'இருப்பதிலேயே' நல்லவர் என்று.

ஒருவர் தன் மகளையோ மகனையோ கல்லூரியில் சேர்ப்பதற்கு எத்தனை பேரை விசாரிக்கிறார்கள், ஒரு வேலை வாங்குவதற்கு எத்தனை பேரிடம் கேட்கிறார்கள், ஒரு வீடு கட்டுவதற்கு, வீட்டை ரிப்பேர் செய்வதற்கு, ஒரு செல் போன் வாங்குவதற்கு, வெளியூரில் தங்குவதற்கு, என பல தகவல் பரிமாற்றம் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது, எனவே நம் தொகுதியில் இருக்கும் இருப்பதிலேயே நல்லவர் (அவர் சுயேட்சையாக இருந்தாலும்) எவர் என விசாரித்து , பத்திரிக்கைகளை படித்து, போஸ்டர்களை பார்த்து , தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து அவருக்கு ஓட்டுப்போட வேண்டும்.

அந்த நல்ல வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் என்பதில்லை ஒரு நல்ல சுயேச்சை வேட்பாளர் ஒரு பார்லிமென்ட் தொகுதியில் 25,000 வோட்டுகள் வாங்கட்டும் (அதே தொகுதியில் வெற்றிபெற்றவர் 3 லட்சம் வோட்டுக்கள் வாங்கினால்!), இதே போல் முதலில் படித்தவர் அதிகம் கொண்ட தொகுதிகளிலாவது சுயேச்சை வேட்பாளர் குறிப்பிடத்தகுந்த வோட்டுக்களை வாங்கட்டும், அப்போது தெரியும் மாற்றம், அரசியல்வாதிகளுக்கு இந்த 25,000 வோட்டுகள் முக்கியம் அதனை பெற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், இதனை பயன்படுத்தி மேலும் பல நல்ல வேட்பாளர்கள் காலத்தில் குதிக்க வேண்டும், இப்போதுள்ள பா.மா.க மாதிரி அணி மாறியாவது இந்த 'நல்ல வேட்பாளர்கள்' பதிவிகளை கைப்பற்ற வேண்டும்.

இதுவே மற்றம் பெற ஒரே வழி.

Think Think.

ஒரு நியாயமான அரசியல்வாதியின் கோபம்!