இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வழக்கம் போல் அர்னாப் ஹய் பீபீயில் கத்திக்கொண்டு இருந்தார் , என்ன விஷயம் என்று பார்த்தால், நாடாளுமன்றத்தில் பேப்பர் ஸ்ப்ரே அடித்த காட்சியும், பிறகு ராஜ்ய சபாவில் அதன் செக்ரெட்ரி ஜெனெரலை பார்த்து அசிங்க அசிங்கமாக பேசிக்கொண்டே அவர் கையில் இருக்கும் பேப்பரை வலுக்கட்டாயமாக பிடுங்கும் காட்சியும், ஜம்மு காஷ்மீரில் எம் எல் ஏ ஒருவர் சபை மார்ஷலை அடிக்கும் காட்சியும் , உபி யில் சட்டையை கழட்டி போராட்டம் பண்ணும் இரு எம் எல் ஏ பற்றிய காட்சிகளையும் காட்டிக்கொண்டு இருந்தனர். வழக்கப்படி அர்னாப் ஒரு செத்த பாம்பை (காங்கிரஸ் கட்சி பிரமுகர்) அடி அடி என்று வெளுத்து வாங்கி கொண்டு இருந்தார்.
இதில் அந்த காஷ்மீர் எம் எல் ஏ கலந்து கொண்டு மிக தெளிவாக அர்னாப் சொல்வதை ஒரு கணம் கூட காது கொடுத்து கேட்காமல் , ஏறக்குறைய உருதுவில் தனி ஆவர்தனம் நடத்திக்கொண்டே இருந்தார், ஒரு கட்டத்தில் ஆனானப்பட்ட அர்னாபே வேறு வழியில்லாமல் செத்த பாம்பிடம் திரும்பி அடிக்க ஆரம்பித்தார் (செத்த பாம்புதான் அர்னாப் பேச இடம் கொடுத்தார் , ஆங்கிலத்திலும் பேசினார்).
அந்த தெலுகு மனவாடுகள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவேயில்லை. அவர்களை கலந்து கொள்ள வைக்கவும் முடியாது.
இந்த மனவாடுகள் போலதான் தமிழ், கர்நாடக , பீகார் , உ பி , வங்காள , மற்றும் பல மாநில கட்சிகளின் எம் எல் ஏ - க்கள் எம் பி கள் இருக்கின்றனர் , இந்தியாவை ஆட்சி செய்வது இவர்களே , பணம் குவிவதும் இவர்களிடமே.. இவர்கள் தவறியும் டைம்ஸ் நவ் போன்ற விவாத மேடைகளுக்கு வர மாட்டார்கள், வர வைக்கவும் முடியாது.
மேலும், இவர்கள் அனைவரும் அடுத்த எலக்ஷனில் ஜாம் ஜாமென்று மீண்டும் எம். பியாக வருவார்கள் , அதாவது, மிளகு ஸ்ப்ரே அடித்தது, அதிகாரியின் கையில் இருந்த தீர்மானத்தில் நகலை பறித்தது எல்லாமே அந்த எம்.பி இல்லை, அதற்கு பின்னால் அவரை தேர்ந்தெடுத்த , அவைக்கு அனுப்பிய ஒரு தொகுதி இருக்கிறது.ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர், அவர்கள் உண்மையிலேயே அவர்கள் எம்.பியிடம் விசுவாசம் கொண்டோ , பணம் வாங்கி கொண்டோ , மற்ற வழியில் ஆதாயம் கொண்டோ, ஒட்டு போட்டோ , போடாமலோஅந்தந்த எம்பிக்களை அவைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். அர்னாபும், அந்த மக்களின் மனநிலை பற்றி, ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பது பற்றி கேட்கவே போவதில்லை.
Those MPs are just the mirrors of Morally corrupt average Indian, and that moral corruption of that aam aadhmi will never be questioned and the reason behind the moral corruption will never be explained by Mr. Arnab Goswami..He will always fight with Mirror image and we are safe watching the mirror image.
(மூன்றாவது படம் , ஹைதராபாதில் உள்ள மனவாடு எம்.பி சி.எம் ரமேஷ்காருவின் இல்லு)