கடந்த மூன்று வாரங்களாக இந்திய பத்திரிகைகளில் தலைப்பு செய்திக்கு அடுத்தபடியாக இரண்டு வலைப்பதிவுகளை பற்றி தான் அதிகமான செய்திகள் வந்திருக்கு. ஒன்று அமிதாப்பச்சனின் வலைப்பதிவு, மற்றொன்று ஷாருக்கானை தனது "நாய்" என்று பகடி செய்துள்ள அமீர்கானின் வலைப்பதிவு. வலைப்பதிவை நன்றாக மார்க்கெட்டிங் செய்தது யார் என்று பார்த்தால் "அமீர்கான்" தான்.
அமிதாப் பச்சன் சபையில் சொல்ல முடியாத பல விஷயங்களுக்கு வடிகாலாக தன் வலைபதிவை உபயோகப்படுத்துகிறார். தன்னையும் ஷாருக்கானையும் ஒப்பீடு செய்து யார் பெரியவன் என்று கூற முயன்றார். அதற்கு எதிர்ப்பு வலுக்க, நான் அந்த மாதிரி நினைத்து சொல்லவில்லை என்று மறுநாளே வலைப்பதிவில் மன்னிப்பு கோரினார். ஷாருக்கான் மீது தான் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் தான் பெரியவன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை என்றார்.இதற்கு நடுவே ஒரு பத்திரிக்கை அமிதாப் 115 கோடி வாங்கிக்கொண்டு வலைப்பதிவு நடத்துகிறார் என்று செய்தி வெளியிட, வலைப்பதிவில் அந்த பத்திரிகையை ஒரு பிடி பிடித்தார்.
நேற்று ஷோபா டே அமிதாப் பச்சன் மற்றும் அவர் குடும்பத்தின் cannes பட விழா பங்கேற்பு (குறிப்பாக ஐஸ்வர்யா ராயின் ஆடை பற்றி) ஒரு செய்தி வெளியிட, அவரும் பச்சனின் வலைப்பதிவில் வாங்கிக்கட்டி கொண்டார். இதை தவிர shatrughan sinha மீது தாக்குதல், சர்கார் ராஜ் புகைப்படங்கள் என்று ஏகப்பட்ட மார்க்கெட்டிங் உள்ளது அமிதாப் பச்சனின் வலைப்பதிவில்.
ஆனால், இதையெல்லாம் மிஞ்சி ஷாருக்கான் தன் காலை நக்குவார் என்றும் தான் அவருக்கு பிஸ்கட் கொடுப்பதாகவும் தனது வலைப்பதிவில் அமீர்கான் செய்தி வெளியிட, இந்தியாவே பதறி விட்டது. பிற்பாடு தான் புரிந்தது அமீர்கான் வளர்க்கும் நாயின் பெயர் ஷாருக் என்றும் அமீர்கான் வீடு வாங்கிய பொது அந்த வீட்டை விற்றவர் ஷாருக்கையும்(நாய்) சேர்த்து விற்று விட்டார் என்று. மொத்தத்தில், அமீர்கான் இந்த ஒரு வலைபதிவின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க செய்ததால் மிகச்சிறந்த மார்க்கெட்டிங் நபர் என்ற தகுதியை பெறுகிறார்.
குறிப்பு: இன்று காலை MSN செய்தியின் படி சல்மானும் வலைப்பதிவு துவங்கியுள்ளார்.
Friday, 23 May 2008
Monday, 19 May 2008
Hi....
ஏன் blog-ல் எழுதவில்லை என்று கேட்டு இருக்கும் எனது ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு :-) ,
மனைவியும் குழந்தையும் நான் இருக்கும் united kingdom வந்து சேர்ந்துட்டாங்க, மூன்று நாளா தூக்கமே இல்லை (குழந்தை அழுகை அய்யா...). Officela வேற front and back ஆப்பு, so நம்ம Blog-ல் எதுவும் எழுத முடியலை.. catch you soon...
வாசு மத்யமாவதியை அலசி இருக்காரு, நல்லா இருக்கு இது மத்த ராகங்களுக்கும் தொடர்ந்தால் நம்மளை மாதிரி கர்நாடிக் மியூசிக் விருப்பம் உள்ள ஆனா சுத்தமா தெரியாத ஜீவன்களுக்கு உபயோகமா இருக்கும். vasu please continue your good work.
Bye for now!

Subscribe to:
Posts (Atom)