சென்ற வாரம் எஸ்.ரா பங்கேற்ற மதன்'ஸ் திரைப்பார்வை நிகழ்ச்சியில் கர்ணன் ரீ-ரிலீஸ் மாபெரும் வெற்றியடைந்துள்ளதை சுட்டிக்காட்டி இதை போல வேறு எந்த படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டால் வெற்றியடையும் என்று கேட்டிருந்தார் மதன். இதோ என் வரிசை:
ஹரிதாஸ்
மன்னாதி மன்னன்
மலைக்கள்ளன்
திருவிளையாடல்
உத்தமபுத்திரன்
அதே கண்கள்
துணிவே துணை
பாசமலர்
நீர்க்குமுழி
சர்வர் சுந்தரம்
உலகம் சுற்றும் வாலிபன்
காதலிக்க நேரமில்லை
படகோட்டி
வஞ்சிக்கோட்டை வாலிபன்
பராசக்தி
காஞ்சித் தலைவன்
மகாதேவி
பாமா விஜயம்
Monday, 23 April 2012
Tuesday, 10 April 2012
205 கோடி
2007 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மேற்கொண்ட பயணங்கள் - 12
தென் ஆப்பரிக்க பயணம் ஒன்று இன்னும் மிச்சம் உள்ளது
ஏர் இந்தியா தனி விமானத்தில் சென்ற பயணச் செலவு - 169 கோடி
உடன் பயணித்தவர்கள் - பெரும்பாலும் குடும்பத்தினர் மட்டுமே
பூட்டான் செல்ல சிறிய ரக ஜெட் தனி விமானம்
தங்குமிடம், உள்ளூர் பயண செலவு,தினசரி பெற வேண்டிய படிக்காசு(Allowance), இதர செலவுகள் - 36 கோடி
இதெல்லாம் நம்ம ஜனாதிபதி பிரதிபா பாடீலோட வெளிநாட்டு பிரயாண செலவு கணக்கு. இன்னும் நாலு மாசம் இருக்கு இவங்க அஞ்சு வருஷம் முடிக்க. இந்த வாரம் தென் ஆப்பரிக்க பயணம் கெளம்பறாங்க. பிரதீபா பாடீல் என்ன தகுதி அடிப்படையில ஜனாதிபதி ஆனாங்க அப்படினே இன்னும் தெரியல. ஏதோ ஒரு காலத்துல இந்திரா காந்தி வீட்ல வேலைக்காரியா இருந்தாங்க அப்படின்னு எல்லாம் கூட புரளி ஒடிச்சு. 205 கோடி செலவுல வெளிநாட்டு பயணம்.
சரி, இந்த ஊருக்கு எல்லாம் போய் இவங்க என்ன செஞ்சாங்க? இந்தியாவுக்கு இதனால என்ன பிரயோஜனம்? ஒன்னும் புரியல. ஒரு பக்கம் ரயில்வே பட்ஜெட்ல ஒரு ரூபா ஏறினதுக்கு அவ்வளோ பிரச்சனை ஆனா இதையெல்லாம் கேக்க ஆள் இல்லை. பூட்டான் செல்ல தனி விமானம் அதுவும் சிறிய வகை ஜெட்.
"சூரியன்" படத்துல கவுண்டர் சொல்லுவார், "டெல்லிக்கு லாரில போற நாய் தானடா நீ, எப்போ போனா என்னனு?". அது தான் ஞாபகம் வருது.

Thursday, 5 April 2012
இந்திய காண்டாமிருகங்கள்
" Ionesco வின் Rhinoceros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகம் வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும்
திடும் என்று புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் Incongurity யும் அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா ஆப்ரிக்க
வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கிவிடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்! "
இது மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது. இதை நான் படித்தது சாரு நிவேதிதா சுஜாதா மறைவுக்கு எழுதிய அஞ்சலியில்.இதற்கான அர்த்தம் எனக்கு நேற்றுவரை உறைக்கவில்லை. டெல்லியில் நடந்த
ஒரு சம்பவமும் அதை தொடர்ந்து நான் என் நண்பர்களுடன் பேசிய போதுதான் தெரிந்தது.
அதாவது இந்தியாவில் ஜனநாயகம் ஜனநாயகம் என்று ஒரு வஸ்து பெயரளவில் இருக்கிறது இல்லையா?அதற்க்கும் ஒரு ஆபத்து.இந்திய ராணுவத்தின் முக்கியமான இரண்டு army units டெல்லியை நோக்கி 'அணிவகுத்து' வர ஆரம்பித்தது இந்த வார ஆரம்பத்தில்.
இந்த சம்பவத்தின் உண்மையான அர்த்தம் என்ன? அவை ஏன் வந்தது என்பதெல்லாம் இன்னும் மர்மமே (ராணுவம் பதில் சொல்லிய பிறகும்). ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்பு இருக்கும் விளைவுகள் ..அதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றுபவை ..ஆனால் இது பற்றி நண்பர்களுடன் பேசும்போது அதன் உண்மையான அர்த்தமே விளங்கியது , எனக்கு கிடைத்தது கீழ்கண்ட பதில்கள்
ராணுவம் டெல்லி நோக்கி வந்ததா? ஓஹோ..
ராணுவம் டெல்லியில்தானே இருக்கும் , பிறகு எப்படி டெல்லிக்குள் வரும்!
ராணுவம் டெல்லியை நோக்கி வந்தால் என்ன? யார் யாரோ வர்றாங்க , ராணுவம் வரக்கூடாதா?
ரெண்டே ரெண்டு army units தானே வந்தது , அதுக்கு போய் எதுக்கு அலட்டிக்கணும்?
முடியலை ...
நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்!

Subscribe to:
Posts (Atom)