Friday, 28 March 2008

கேப்பையும் கேவுறும் -6

அரசியல்
------------
வட மாவட்டங்கள் என்று சொல்லப்படும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களைக் கொண்ட பகுதியில்தான் அதிகபட்சமாக 85 தொகுதிகள் உள்ளன.

காவிரி டெல்டா மாவட்டங்களும் பொதுவாக வட மாவட்டங்கள் என்ற பிரிவுக்குள்ளேயே சேர்க்கப்படுவதால் இவைதான் தமிழ்நாட்டின் ஆட்சியைத் தீர்மானிப்பதாக உள்ளன(43 தொகுதிகள்) (http://tamil.sify.com/kalachuvadu/fullstory.php?id=14181644).

இப்படி தமிழ் நாட்டின் தலைவிதியை நிர்னயிப்பதாக இருப்பது வட தமிழகம்தான் என்பதை ஒரு சராசரி தமிழ்க்குடிமகன் ஒப்புக்கொள்வானா?

நான் பார்த்து,பழகிய வரை வேலூர் மற்றும் திருவண்ணாமலை நகரகங்களில், தேர்தலிற்கு பிறகு தொடரும் அரட்டைகளில் புழங்கும் முக்கியமான வாக்கியங்களுல் ஒன்று, "............கட்சிக்கு சௌத்ல நல்ல செல்வாக்குப்பா, அதனாலதான் ஜெயிச்சாங்க" இதை கேட்டு அழுவதா, சிரிப்பதா என்றே எனக்கு தெரியாது, எனக்கு தெரிந்து, யாருமே ஆட்சி அமைந்தது, தர்மபுரி,திருவள்ளூர் மாவட்டங்களில் ........கட்சி அதிக இடம் ஜெயித்ததினால்தான் என்று சொன்னதே இல்லை.

இதே போல் ஆந்திராவிலும் நிலை இருக்கிறது.அங்கே புறக்கணிக்கபட்ட மாவட்டங்கள் மிகப்பெரிய நிலப்பரப்பு (வட மாவட்டங்களை விட மிக அதிகம்) கொண்டவை.

ஆனாலும் அங்கே ஒரு விழிப்புணர்வு வந்து குறைந்த பட்சம் அவர்கள் இந்த சில மாவட்டங்கள் வளர்ச்சி அடையாதவை என்று புரிந்து கொண்டுள்ளார்கள்.
யோசித்து பார்க்கையில், ஆந்திரத்து தெலிங்கானாவும், தமிழகத்தின் வட மாவட்டங்களும் ஒரே மாதிரி ப்ரச்சினைகளை கொன்டுள்ளவை.அங்கே ப்ரச்சினையின் கடுமை அதிகம்.

என்ன வித்தியாசம் என்றால், ஒரு தனி மாநிலம் கேட்டு , அந்த மாநிலத்தை நிர்வாகம் செய்வதை,முதலமைச்சராக ஒருவர் வருவதை, தனியாக சட்டபேரவை இருப்பதை கற்பனை செய்ய தெலிங்கானா மக்களுக்கு தைரியம் இருக்கிறது.

வட மாவட்டத்து மக்களுக்கு அந்த தைரியம் இல்லை, ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியே 2005ல் தான் உதயமானார் என்றால் சொந்த மாநிலத்திற்கு எங்கு செல்வது?

80-களில் வட தமிழகத்தில் ஒரு ஜாதி கட்சி உருவானது, முதலில் ஒரு ஜாதி சங்கமாக இருந்து பின்னர் ஒரு ஜாதி கட்சியாக உருமாறியது.
வட தமிழகத்தில் இருந்து வந்த முதல் குரல், மிகவும் துரதிர்ஷ்டவசமாக, அது ஒரு பிராந்திய கட்சியாக இல்லாமல் சாதீய கட்சியாக இருக்கிறது.

ஆனாலும் அது ஒரு குரலாக ஒலித்தது, ஒலித்து கொண்டு இருக்கிறது.

அதாவது,ஒரு சாதிய கட்சி எதிர்பாரமல் தோன்றி அது வட தமிழகத்தின் குரலாகவே மாறிவிட்டது. ஆனாலும், இன்று வரை அது வட தமிழகம் என்ற சொல்லை சொன்னதே இல்லை. நான் இந்த கட்டுரையில் எழுதி உள்ளதை கூட அது மேடை போட்டு சொன்னதில்லை.

8 comments:

வெட்டிப்பயல் said...

கலக்கல்.. கலக்கல்...

நீங்க சொல்லாம விட்ட நிறைய விஷயங்களும் இருக்கு. அதை நான் எழுதறேன்... அதுல முக்கியமானது கோவில்கள். அதைப் பத்தி நிச்சயம் நான் எழுதறேன்.

Gokul said...

வெட்டிப்பயல்,

நன்றி, இதைப்பற்றி நீங்களும் நிறைய எழுதணும்! என் என்றால் உங்கள் blog-கிற்கு விருந்தினர் அதிகம் அதனால் இந்த topic நிறைய பேருக்கு எட்டும்.

Thanks
Gokul

kkrn said...

Kaveri Delta area never considered itself as north Tamilnadu. They are mostly identifying themselves with south Tamilnadu and general belief is Central Tamilnadu. Ofcourse there are considerable Vanniyar immigirants in Nagai District. if you check out them their natives are mathuranthakam, chengalpattu area. Culturally Central TN natives are close south TN not to north. North TN starts from Chidambaram. Kollidam river is geological , cultural, linguistic barrier or Border. I am living Border area , we never said we are north TN, but referring place beyond kollidam river as north TN. Please dont drag Delta area in to your north TN .

Gokul said...

Dear KKRN,

Thanks for the comments.Yes culturally Delta districts are taken as Northern Tamilnadu, but here I am telling in the "Vote politics" point of view and the proof is an analysis in www.sify.com. It may be wrong also.

//Please dont drag Delta area in to your north TN//

Definitely I didn't and won't. But it is definitely not south Tamilnadu.

Gokul said...

Sorry in my previous comment, I mean to say "Culturally Delta districts are NOT considered as North tamilnadu".

kkrn said...

Sorry mr. Gokul,

What you said in your "keppai kevaru" is nothing but truth. Even i dont like to be part of north TN. It is really unbelievable. No one want to identify themselves with under developed area, i am not exception. my comment just reiterated your thoughts about north TN. Anyway sorry my comment especially "Dont drag my place in to your north". hahaha en ulle irunthu vantha vaarthai thaan athu. North Tn entraal kevalam entra ennam en ulleyum vithaikkappattu irukkirathu paarunkalen...

Gokul said...

Dear kkrn,

Its okay, anyways what you've said is true, even I am from Delta area or southern/western tamilnadu, I'd say the same comment, or even worse comment!

"Idhu vidhaikka pattu irukkiradhu". One more thing here Backwardness is not only in Economy, its even worst, its in mentality & culture.

mani said...

I beg to differ from you. I am a native of kumbakonam and I have many relatives that are in the northern bank of kollidam river like karaikurichi pazhur and jayankondam. And I know many villages like neerathanallur cholapuram and tirupanandal which are interconnected with north of river. Mayiladuthurai kumbakonam belt is culturally affilated with northern belt. Tiruvarur thanjavur and nagapattinam belt is the one that is culturally closer to south TN. This is also one of the reason kumbakonam and mayiladuthurai is neglected by their respective districts. Dialects may differ as you say. Caste also plays a major factor because mayiladuthurai kumbakonam belt is dominated by vanniyars and thanjavur nagapattinam belt is dominated by kallars.