கோகுல்,
உன் தசாவதாரம் கட்டுரை ஒரு தலை பட்சமாக உள்ளது என்பது என் கருத்து. எனவே அதற்கு எதிர்வினையாக சில கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.
தசாவதாரத்தின் விளம்பரத்திற்கு முக்கிய காரணம் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தானே தவிர கமல் இல்லை. ஏவிஎம் போலவே திரைபடங்களை இன்று மார்க்கெட்டிங் செய்வதில் ஆஸ்கார் பிலிம்ஸ் பெயர் பெற்ற நிறுவனம். உதாரணம் அந்நியன், சித்திரம் பேசுதடி, டிஷ்யூம், தம்பி, வேட்டையாடு விளையாடு போன்றவை. ௨006 வருடத்தின் பல வெற்றி படங்கள் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தால் மார்க்கெட்டிங் செய்யப்பட்டவை. ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்த்ரனின் சகோதரர் ஜாக்கி சானுக்கு அறிமுகமானவர் என்பதால் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜாக்கி சான் சம்மதித்தார். கமல் நிச்சயமாக ஜாக்கி சான் என்னும் நடிப்பே தெரியாத ஒருவரை அழைக்க சம்மதிக்க மாட்டார் என்பது என் எண்ணம்.
மேலும் கமலை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நிச்சயமாக கமலை பற்றியும் அவர் தனது படங்களின் அனைத்து துறையிலும் தலையிடுவார் என்பதையும் நன்கு உணர்ந்தவர்கள். அப்படி இருக்க ஏன் கமலை நம்பி பணத்தை இறைத்து விட்டு பின்பு புலம்ப வேண்டும்? ஆளவந்தான் பட பூஜை இன்விடேஷன் மட்டுமே ஏறக்குறைய பத்தாயிரம் ரூபாய். கமல் தாணுவை இப்படி செலவு பண்ண வேண்டாம் என்று கூறியதை தாணுவே பத்திரிகைகளில் ஒப்பு கொண்டுள்ளார்.
சராசரி திரைபடங்களை பக்கா கமர்ஷியல் திரைப்படம் என்று நீ கூறுவது வேதனையளிக்கிறது. கமல் போக்கிரி அல்லது சிவாஜி போல ஒரு படம் செய்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் நினைத்து பார். அதே சமயத்தில் கமலும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் formatai தாண்டி வந்தவர் தான். குரு, சங்கர்லால், அலாவுதீன், வாழ்வே மாயம், மகராசன், சிம்லா ஸ்பெஷல் போன்றவை சில உதாரணங்கள். இத்தருணத்தில் சினிமாவை மக்கள் பார்க்கும் விதத்திலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கமலின் பெரும்பாலான திரை சோதனைகள் தனது சொந்த செலவில் செய்யப்பட்டவை. விருமாண்டி, ஹே ராம், ராஜபார்வை போன்றவை சில உதாரணங்கள். ஹேராமின் தோல்வி எனக்கு புரிகிறது ஆனால் அன்பே சிவத்தின் தோல்வி எனக்கு வருத்தமளிக்கிறது. ஒரு நல்ல சினிமாவை புரிந்து கொள்ள முடியாத தமிழ் சமூகத்தை எண்ணி வேதனை தான் உண்டாகிறது.
3 comments:
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Pen Drive, I hope you enjoy. The address is http://pen-drive-brasil.blogspot.com. A hug.
Vasu,
I know kamal alone is not responsible for this extravaganza.
But without much political and muscle power kamal is too soft target for blaming.
As a kamal fan, I just dont want kamal to fail and dont like others accusing kamal.
Anyway the perfect reply for our discussion is 'Dasavatharam's' box office verdict and after effects.
-gokul
ஆனால் இதில் கமலின் தப்பு என்ன என்று புரியவில்லை. முதலிலேயே இவ்வளவு செலவு ஆகும் என்று குறிப்பிட்டு அதற்க்கேற்ற தயாரிப்பளரை தேடியதாகத்தான் கூறப்பட்டு வந்தது..
ஆனால் ஜாக்கிசான் எதற்கு என்று புரியவில்லை.. அவர் ஒரு திறமையான ஸ்டண்ட் மாஸ்டர் அவ்வளவுதான் அவருக்கு கமலின் திறமைகள் புரிய வாய்ப்பேஇல்லை இதை படியுங்கள் அவரே இதை உணர்த்தியுள்ளார்
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/april/250408b.asp
ஒரு இளவரசன் கால்பந்தாட்டம் பார்த்துக்கொண்டு இருந்தானாம், போட்டி முடிவில் மந்திரியை பார்த்து நன்றாகாகத்தான் இருந்தது, இருந்தாலும் ஏன் ஒரு பந்துக்கு இவ்வளவு போட்டி அப்பாவிடம் சொல்லி அனைவருக்கும் ஒர் பந்து வங்கித்தரச்சொல்லுங்கள் என்றானாம் .. அது தான் நினைவிற்கு வந்தது
Post a Comment