Saturday, 19 April 2008

தமிழ் புத்தாண்டு

சில காலம் முன்பே இந்த செய்தியை படித்தேன் ஆனால் ஏனோ இதை விட்டு விட்டேன். கருணாநிதி தைப்பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்து இருப்பதை பற்றியே இந்த கட்டுரை.

இந்த அறிவிப்பால் மக்களுக்கு என்ன நன்மை வரப்போகிறது என்று பலர் கேட்கலாம், ஆனால் அந்த கேள்வி கேட்கும் நேரத்தை,வீரத்தை,உரிமையை இழந்து விட்டோம் என்பதுதான் உண்மை.

சில பேர் இந்த மாற்றத்தினால் தமிழர்க்கு வாழ்வில் எந்த மற்றம் வரப்போகிறது என கேட்கிறார்கள் (உ.தா.விஜயகாந்த்), இது ஒரு வகையில் பரவலாக கேட்கப்படும் கேள்வி, ஆனால் மேம்போக்கான கேள்வி.

சில பேர் இதை திராவிட அரசியலாக பார்த்து கருணாநிதியை துக்ளக் ஆகவும் ஆவுரங்கசீப் ஆகவும் சொல்கிறார்கள், இது சற்று நுட்பமான கேள்வி.கேட்க வேண்டிய கேள்வி.சிலர் (ஜடாயு, சோ போன்றவர்கள்) இதனை எதிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் , இது மிக அவசியமான வாதம், அர்த்தமுள்ள வாதம்.நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய வாதம்.

ஆனால் இதனை எல்லாம் தவிர்த்து மிகவும் ஆழமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பிரச்சினையின் bigger picture.

ஒரு மாநிலத்தை இந்தியாவிலிருந்து எப்படி பிரிக்கலாம்? நடைமுறையில் இது சாத்தியம் இல்லை அல்லவா? அப்படி பிரிப்பது என்று நினைத்தால் இந்திய அரசாங்கமும் ராணுவமும் என்ன செய்யும்? முதலில் சாலைகளை துண்டிக்கும், ரயில் போக்குவரத்தை துண்டிக்கும், விமான சேவையை துண்டிக்கும், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களை திரும்ப அழைத்து கொள்ளும். மத்திய அரசு அலுவலங்களை மூடும்... இப்படி பட்டியல் நீளும்.

கருணாநிதிக்கு இப்படி தமிழகத்தை அரசியல் ரீதியாக ராணுவ ரீதியாக பிரிப்பதற்கு துணிச்சல் இல்லை . அதனால்தான் ஒரு சுதந்திர நாட்டை ஆளும் அதிர்ஷ்டத்தை விட்டு விட்ட ஆத்திரத்தில் தமிழ்நாட்டை கலாச்சார ரீதியாக பண்பாட்டு ரீதியாக இந்தியாவில் இருந்து பிரித்து விட நினைக்கிறார்.

தமிழ்நாடு இந்தியாவில் எப்படி இணைந்து இருக்கலாம் என பார்த்தால்,

மொழியால் இணையலாம் (எல்லோரும் ஹிந்தி கற்று கொண்டால்!).
எனவே மொழி எதிர்ப்பு போர்.


மதத்தால் இணையலாம் (பெரும்பான்மை ஹிந்துக்கள் அல்லவா?)
எனவே நாத்திக வாதம்.ஹிந்து மத எதிர்ப்பு .


மதம் சார்ந்த கலாச்சாரத்தால் இணையலாம் (தீபாவளி, தமிழ் வருட பிறப்பு (யுகாதி) போன்றவற்றால்).

எனவே தீபாவளி கொண்டாடுவதை நிறுத்துங்கள் பொங்கலை கொண்டாடுங்கள், தமிழ் புத்தாண்டை மாற்றுங்கள்.

நல்ல காலம் தமிழர்கள் எல்லோரும் முறுக்கிய மீசை வைத்து இருக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டார் அதை நினைத்து சந்தோஷப்பட வேண்டியதுதான்.

ஆனால் இந்திய அரசின் எல்லா அதிகாரங்களை அனுபவித்துக்கொண்டு ஆனாலும் ஒரு சுதந்திர நாட்டை ஆளும் ஆசை பேராசை, அது இந்தியாவில் வகிக்கும் எந்த கட்சிக்கும் வராத பேராசை.வட கிழக்கில் வந்தது புறக்கனிக்கப்பட்டதால் வந்த ஆவேசம். தமிழ்நாட்டையும் வடகிழக்கையும் ஒப்பிடவே முடியாது.

கருணாநிதியின் மாற்றங்கள் எவ்வளவு மேம்போக்காக உள்ளது என்பது தமிழ்நாட்டில் சில விஷயங்களை பார்த்தாலே தெரியும்.
தமிழக கிராமங்களில் மிகப்பரவலாக இரட்டை டம்ளர் முறை உள்ளது.திண்ணியத்தில் தலித் ஒருவரை மலம் தின்ற வைத்த கொடுமையும் சமீபத்தில்தான் நடைபெற்றது.இது கருணாநிதி உட்பட அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் அதனை ஒழிப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்க மாட்டார். இது எவ்வளவு பெரிய paradox? ஒரு பக்கம் ஹிந்து மதத்தை கலாச்சார ரீதியாக தமிழகத்தில் கடுமையாக ஒடுக்க நினைக்கும் இவர், மறுபக்கம் இரட்டை டம்ளர் முறையை ஆதரிக்கிறார், அதனை மாற்ற மிக மிக லேசான நடவடிக்கைகளை மட்டுமே எடுப்பார். இல்லையென்றால் இவ்வளவு மோசமான ஹிந்து மத எதிர்ப்பு வாதம் இருக்கும் மாநிலத்தில் இரட்டை டம்ளர் முறை இருக்குமா? மலம் தின்ற வைத்த கொடுமை நடக்குமா?


கருணாநிதியும் திராவிட கொள்கைகளும் எவ்வளவு போலியானவை என்று இதனை பார்த்தாலே தெரிந்து விடும்.மக்களை திசை திருப்ப அவ்வப்போது ஹிந்து மத எதிர்ப்பு வாதத்தில் இறங்கும் கருணாநிதி அந்த எதிர்ப்பை தனது வேட்பாளர் விஷயத்தில் காட்டியதே இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை ஜாதி வேட்பாளருக்கே வாய்ப்பு அளிப்பார். இதனை ஒருபோதும் வெளியே சொன்னதும் இல்லை. அப்போது எங்கே போனது இந்த ஹிந்து மத எதிர்ப்பு?

1 comment:

Vasu. said...

தாத்தாவின் கொள்கைகள் நமக்கு புதுசா என்ன? பார்ப்பனீய எதிர்ப்பு கொள்கை ஆனால் தேவைப்படும் போது பாஜகவுடன் கூட்டணி. புலிகள் ஆதரவு ஆனால் மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி. நாத்திகவாதி ஆனால் சாய்பாபாவிடம் ஆசி பெறுவார். கலைஞர் பாஷையில் இதற்கு பெயர் "ராஜதந்திரம்".