Monday, 12 May 2008

சதி லீலாவதி

வயதாகி ரசனை மாறிவிட்டதா என்று தெரியவில்லை. நான்கு வருடத்திற்கு முன் பிடித்த "காக்க காக்க" திரைப்படம் இப்போது தொடர்ந்து 15 நிமிடம் கூட பார்க்க முடியவில்லை. இதே வரிசையில் கில்லி, பிதாமகன் போன்ற படங்களும் அடக்கம். மதன் சொல்வது போல காலத்தை தாண்டி நிற்கும் படங்களை அதனால் தான் "க்ளாசிக்" என்று அழைக்கிறோம். "தில்லான மோகனாம்பாள்", "காதலிக்க நேரமில்லை", "சலங்கை ஒலி" போன்றவை சில உதாரணங்கள்.

அப்படிப்பட்ட ஒரு க்ளாசிக் திரைப்படம் என்று நான் நினைக்கும் "சதி லீலாவதி" படத்தை சனிக்கிழமையன்று மீண்டும் ஒரு முறை பார்த்தேன். தமிழ் திரை உலகத்தின் சில திறமையான கலைஞர்கள் பங்கேற்பில் உருவான படம்.

நடிப்பு - கமல், கல்பனா
கதை - அனந்து
திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் - பாலு மகேந்திரா
வசனம் - கிரேசி மோகன்

ஆங்கில திரைப்படங்களின் three act structure வடிவத்தை இத்திரைப்படத்தில் தெளிவாக காணலாம். Three act structure என்பது,

"To tell a story, you have to setup your characters, introduce the dramatic premise (what is the story about) and the dramatic situation (the circumstances surrounding the action), create obstacles for your characters to confront and overcome, then resolve the story."

படத்தில் பார்க்க வேண்டிய தருணங்கள்
1. ரமேஷ் அரவிந்த் - கமல் - ஹீராவின் ஏர்போர்ட் காட்சிகள்
2. ரமேஷ் அரவிந்த் - கமல் - கோவை சரளா - ஹீராவின் பெங்களூர் ஹோட்டல் காட்சிகள்
3. Travel agent தோழியோடு ரமேஷ் அரவிந்த் பேசும் காட்சிகள்
4. கல்பனா ரமேஷ் அரவிந்த் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று தெரிந்து வீட்டு வாசலில் வைத்து வாங்குவது
5.கிளைமாக்ஸ்

குறைகள்:
=========
1. தேவை இல்லாத கல்பனாவின் பெற்றோர் கதாபாத்திரங்கள்
2. ரமேஷ் அரவிந்த் தவறு செய்தார் என்று நிருபிக்க எதற்கு மதன்பாப்?
3. நெருங்கிய நண்பர்களான கமலும் ரமேஷ் அரவிந்தும் சென்னையில் இருந்தும் பனிரெண்டு வருடம் பார்க்காமல் இருப்பது ஆனால் அதே சமயத்தில் சக்திவேல் ப்ளூ பிலிம் பார்க்க கூப்டதாக ரமேஷ் கல்பனாவிடம் கூறுவது நெருடல்.

எது எப்படியோ, ஒரு அற்புதமான நகைச்சுவை திரைப்படம்.

1 comment:

Heyma Sindhu said...

I completely agree with you vasu.... I never change the channel if i come across movies like Sadhi leelavathy, Pancha Thanthiram etc...