Sunday, 21 September 2008

வரமா சாபமா!

ஜெயமோகனின் பயணக்கட்டுரையை படித்த பின்பு மத்திய பிரதேசத்தின் மீதும் பொதுவாக ஆங்கிலத்தில் கிண்டலாக சொல்லப்படும் "BIMARU" எனப்படும் Bihar,Madhya pradesh, Rajasthan, Uttarpradesh மாநிலங்களின் பற்றிய பார்வை மேலும் உறுதி ஆகியிருக்கின்றது.

உலகின் மிகப்பெரிய Delta கங்கை டெல்டா, ஆண்டு முழுவதும் நீர் நிறைந்து இருக்கும் ஆறுகள் (perennial rivers) ஓடும் மாநிலங்கள் இவை. இந்திய மிகப்பெரிய விவசாய நாடு , விவசாயத்திற்கு இன்றி அமையாதது நீர், எனவே இங்கே உள்ள விவசாயிகளும் மற்ற மக்களும் செல்வா செழிப்புடந்தானே வாழ வேண்டும்? Atleast தண்ணீர் இல்லாத மற்ற மாநிலங்களின் வாழ்க்கை தரத்தை விட (சிறந்த உதாரணங்கள் தமிழ்நாடு, ஆந்திராவின் ஒரு பகுதி) இங்கே வாழ்க்கை தரம் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா?

பின் எப்படி எவ்வளவு வறுமை? இவ்வளவு மோசமான வாழ்க்கை தரம்?
பொதுவாகவே எனக்கு சரித்திரம் பிடிக்கும் என்பதால் இந்த பகுதிகளின் சரித்திரத்தை பார்க்க தோன்றுகிறது!
சுமார் ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகளில் சுமார் நானூறு ஆண்டுகள்தான் இங்கே நிலையான ஆட்சி நடைப்பெற்று இருக்கிறது. (அக்பர் தொடங்கி அவுரங்கசீப் வரையிலான முகலாய ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் ஆட்சி) மற்றபடி காலம் காலமாக இங்கே தடி எடுத்தவன் தண்டல்காரன்!

சட்டம் ஒழுங்கு கிடையாது, மிக மோசமான வரி வசூல், மிக மிக மோசமான படை எடுப்புக்கள், எளியோரை வலியோர் வாட்டல், வாழ்க்கை நிச்சயமின்மை, படுகொலைகள், இனப்படுகொலைகள் (genocide) என வரலாற்றின் பக்கங்கள் யாவும் ரத்த கறை படிந்து இருக்கின்றது. இது எல்லா இடங்களிலும் இருப்பதுதானே எனலாம், ஆனால் வட இந்திய அளவிற்கு படுகொலைகளை சந்தித்த பிரதேசங்கள் மிக குறைவு.

மேலும் இங்கே பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். சுய அதிகாரம் இல்லாமல் அந்நிய ஆட்சியில் சுமார் 1000 ஆண்டுகள் வாழ்ந்தாயிற்று! தலைமுறை தலைமுறையாக இந்த அடிமைத்தனமான வாழ்க்கை, பயம் மற்றும் நிலத்தின் மீது உரிமை இல்லாத கூலி தொழிலாளி வாழ்க்கை இந்த மக்களின் ஜீன்களில் படிந்து விட்டதோ, அதனால்தான் இந்த படு மோசமான வாழ்க்கை நிலையோ என்று எண்ண தோன்றுகிறது.

மேலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிச்சயம் என்றால் விவசாயம் செய்யும் பெரும்பான்மையான மக்களுக்கு சோம்பல் நிச்சயம். வரமே சாபமாகி போன பிரதேசங்களாக BIMARU மாநிலங்கள் இருக்கின்றன.

நம் தஞ்சை விவசாயியை விட கடலூர் விவசாயி 4 மடங்கு உழைக்க வேண்டி இருக்கிறது.(நான் சொல்வது காவேரி பிரச்சினை இல்லா விட்டால்! ).

மிக தொன்மையான நாகரிங்கள் கொண்ட பிரதேசங்கள் பெரும்பான்மையானவை இவ்வாறு இருப்பதை பார்க்க முடிகின்றது

.a. தென்னமெரிக்காவின் மாயன் நாகரிகம் படர்ந்த இடங்கள்.

b. கிரேக்க நாகரிகத்தின் முக்கிய கேந்திரங்கள்.

c. இந்திய நாகரிகத்தின் முக்கிய பகுதிகளான இன்றைய பாகிஸ்தான்
இந்திய நாகரிகத்தின் பிறப்பிடமான இன்றைய உத்திர பிரதேசம் ஹரியான மற்றும் பிகார்

d. மெசபடோமிய நாகரிகத்தின் முக்கிய பகுதியான இராக்.

e. சீனா பற்றி தெரியவில்லை (இருக்கிறார்களா செத்தார்களா என்றே தெரியாத கம்யூனிஸ்ட் சொர்க்கம்)

கால சக்கரம் என்று சும்மாவா சொன்னார்கள்!

No comments: