சனிக்கிழமை மதியம் கே டிவியில் சம்சாரம் அது மின்சாரம் படத்தை பார்த்த போது விசு ஏன் திரைப்படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டார் என்று தோன்றியது. குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைபடங்களை கொடுத்த சிறந்த இயக்குனர். விசுவால் வாழ்ந்த நடிகர்/நடிகைகள் பலர். உடனே நினைவுக்கு வருபவர்கள் கமலா காமேஷ், இளவரசி, மாதுரி, கிஷ்மூ, S.Ve.சேகர் ஆகியோர் . ஹீரோக்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை காப்பற்ற விசு போன்றவர்கள் மீண்டும் படங்களை இயக்க வேண்டும்.
பின்குறிப்பு: இறுதிக்காட்சியில் லக்ஷ்மியின் நடிப்பை எத்தனையோ முறை பார்த்தாயிற்று. இருந்தும் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்ததை தவிர்க்க முடியவில்லை.நம்மவரில் கமல் சொல்வது போல் "கண்ணீர் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்".
1 comment:
Very true! I happened to watch this film that day as well. I just love way Lakshmi carries her role with elan and ease! Superb!!
Post a Comment