Tuesday, 11 November 2008

இலங்கை தமிழர்களுக்கு திரட்டிய நிதி எங்கே?

இலங்கை தமிழர்களுக்கு நிதி தந்து உதவுமாறு தமிழக மக்களை கலைஞர் கேட்டுக்கொள்ள, திரைப்பட கலைஞர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் என்று பலரும் அள்ளி கொடுத்தனர். கலைஞர் டிவி ஒரு நாளைக்கு பத்து முறையாவது பலரும் கலைஞரிடம் காசோலைகள் வழங்குவதை ஒளிபரப்பியது. மாண்புமிகு முதலமைச்சர் அந்த நிதியை யாரிடம் கொடுத்தார்? இலங்கை தமிழர்களுக்கு அது போய் சேர்ந்ததா? ஒன்றும் தெரியவில்லை. கோடிக்கணக்கில் திரட்டிய பணம் உரியவர்களுக்கு போய் சேர்ந்தது என்று அரசு தரப்பில் சாட்சிகளுடன் ஒரு செய்தி வெளியிட்டால் கொடுத்தவர்கள் திருப்தி அடைவார்கள். செய்யுமா அரசு?

No comments: