அவன் வீடற்றவனா வெளியில் அலைந்து கொண்டிருக்கின்றான் ஊரற்றவனா தேசாந்தரியாய்த் திறந்து கொண்டிருக்கின்றான் பசிமிகுந்தவனா கண்டதுகடியதையெல்லாம் தின்று கொண்டிருக்கிறான் தாகம் நிரம்பியவனா கிடைத்ததையெல்லாம் குடித்துக் கொண்டிருக்கிறான் தூக்கமற்றவனா நீண்ட இரவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறான் காமம் செறிந்தவனா நீச்சஸ்திரீகளைத் தேடிக்கொண்டிருக்கிறான் வாழ்வற்றவனா மாயமான் வேட்டையாடிக் கொண்டிருக்கிறான் சுகமற்றவனா துக்கத்திடம் ஒப்படைத்திருக்கிறான் நம்பிக்கையற்றவனா அவநம்பிக்கையிடம் சரணடைந்திருக்கிறான் தன்நினைவிலிருந்து போதைக்கும் போதத்திலிருந்து அபோதத்துக்கும் சாந்தியிலிருந்து அசாந்திக்கும் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும் அற்பஜீவனை என்னவென்று சொல்வீர்கள்......
--கவிஞர் விக்ரமாதித்யன்
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=522
1 comment:
Nice one.
Post a Comment