சில வாரங்களுக்கு முன்பு தான் தமிழ் நூறாண்டு வாழுமா என்ற சுஜாதா சந்தேகித்தது உண்மையாகி விடுமோ என்று எழுதி இருந்தேன்.அந்த கருத்தை இத்தனை விரைவாக மாற்றிக்கொள்ள வைத்த தமிழர்களுக்கு நன்றி.ஒரு காலத்தில் சென்னையை தாண்டி இந்தியாவில் எங்காவது சென்றால் தமிழ் கேட்பது, தோசை/இட்லி கிடைப்பது, இதெல்லாம் கடினம் என்பார்கள். அதெல்லாம் இப்போது ஒரு பிரச்சனையே இல்லை.
கடந்த ஒரு வாரமாக டெல்லியில்(குறிப்பாக குர்கோனில்) இருக்கிறேன். இங்குள்ள சாதாரண சாலையோர உணவகங்களில் சாப்பிட சென்றால் கூட "செந்தமிழ் தேன் வந்து பாயுது காதினிலே". சரி, டெல்லியில் தான் தமிழ் சங்கம் போன்றவை பல ஆண்டுகளாக உள்ளதே அதனால் இங்கே தமிழ் பேசப்படுவது என்ன ஆச்சர்யம் என்று நினைத்தால், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த மதுரா,ஆக்ரா போன்ற ஊர்களில் கூட பல இடங்களில் தோசை/இட்லி விற்கப்படுவதும், தமிழ் பேசப்படுவதை கேட்பதும் மனதிற்கு மகிழ்ச்சியளித்தது.
ஆனால் ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. இங்கும் தமிழர்கள் தங்கள் சுற்றம் மற்றும் நட்பிடம் தான் தமிழில் கதைக்கிறார்கள். நான் உணவருந்த சென்ற ஒரு இடத்தில் ஒரு தமிழர் தனது நண்பரிடம் பேசுவதை கேட்டு வலிய சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். இருவரும் என்னிடம் ஐந்து நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணி திருநாடு
வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்
1 comment:
Vasu,
You are happy because of tamil or because of idly/dosai?
:-)
Post a Comment