Wednesday, 25 February 2009

ரேசுல் பூக்குட்டி

ரஹ்மான் ஆஸ்கார் வாங்கிய சந்தோஷத்தில் ரேசுல் பூக்குட்டியின் சாதனையை இந்திய பத்திரிகைகள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ரேசுல் Slumdog Millionaire படத்தின் "Best Sound Mixing" தரப்பில் ஆஸ்கார் வென்றுள்ளார்.

ரேசுல் பூக்குட்டி 1971 ஆண்டு கேரளாவில் விளக்குபற என்ற ஊரில் பிறந்தார். அவர் தந்தை ஒரு தனியார் பேருந்து நிறுவனத்தில் கண்டக்டர் வேலையில் இருந்தார். மிக ஏழ்மையான குடும்பம் அவருடையது. அவர் உடன் பிறந்தவர்கள் ஏழு பேர். ரேசுல் தான் இளையவர். அவர் கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கில் படித்தார் ரேசுல். மேலும் அவரது பள்ளி அவர் வீட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவு. பள்ளிக்கு தினமும் நடந்து செல்வார் ரேசுல். ரேசுல் 1995 ஆண்டு புனே திரைப்பட கல்லூரியில் இருந்து பட்டதாரியாக வெளிவந்தார். அதன் பிறகு மும்பைக்கு சென்ற ரேசுல் நிறைய படங்களுக்கு Sound Engineer ஆக பணி புரிந்தார். குறிப்பிட்டு சொல்லக்கூடிய அவரது படங்கள்:

Musafir(2004)
Black(2005)
Traffic Signal(2007)
Gandhi My Father(2007)
Saawariya(2007)
Ghajini(2008)

அவர் பணி புரிந்த முதல் சர்வதேச திரைப்படம் Slumdog Millionaire. அந்த படத்திற்கு அவர் ஆஸ்கார் விருதை பெற்றுள்ளார்.

No comments: