Monday, 16 March 2009

இரவு

ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும் இரவில் தான் பணி புரிவாராம். ஏனென்று, ஒரு இரவு விழித்திருந்து பார்த்தால் தான் தெரிகிறது. இசை, படிப்பு போன்ற விஷயங்களில் ஈடுபட சுற்றுப்புறம் அமைதியாக இருக்க வேண்டும். இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் இரவில் மட்டும் தான் அமைதி. பகல் முழுதும் ஓயாத ஒரு இரைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. நம் மக்களுக்கு அமைதி என்றாலே ஒரு பயம் வந்து விடுகிறது.பயத்தை போக்க எப்போதும் யாரோடாவது எதாவது பேசிக்கொண்டு இருக்க வேண்டும்.

இப்போது அதிகாலை மணி 3:00. என் படுக்கையறை ஜன்னல் வழியே சாலையை பார்க்கிறேன். மூன்று சக்கர வண்டி ஒன்றை தள்ளிக்கொண்டு ஒரு கிழவன் எங்கோ செல்கிறான். அங்கங்கே ஓடி கொண்டு இருக்கும் பைரவர்கள். இதை தவிர சாலையில் எந்த நடமாட்டமும் இல்லை. இதே சாலை இன்னும் ஐந்து மணி நேரத்தில் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன். ஐபாடில் இளையராஜாவும் ஜானகியும் "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா?" என்று ஹம்சநாதத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

4 comments:

Gokul said...

வாசு உன்னோட எழுத்துக்களை படிக்கும்போது அதில சுஜாதா பாலகுமாரன் போன்ற சான்றோர்களை தரிசிக்க முடியுது.. என்னால இதுக்கு மேல பேச i mean எழுத முடியலை...

-Gokul

Vasu. said...

unn lolukku oru alave illaya..copy adikarenu neradiya sollalaam illa..

Vijai said...

Vasu,

அதிகாலை மூணு மணி வரைக்கும் தூக்கம் வராமல்/தூங்க முடியாமல் இருக்க காரணம் என்ன? யார் உங்கள் தூக்கத்தை கெடுக்கிறார்கள்?

Vasu. said...

மின்வெட்டு மற்றும் கொசுத்தொல்லை