இன்டர்நெட்டால் பல நன்மைகள் உண்டு. அதே போல் கணக்கில் அடங்கா பிரச்சனைகளும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு பிரச்சனை இன்டெர்நெட்டை துழாவி குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பழக்கம். சற்றொப்ப இருபது ஆண்டுகளுக்கு முன் கூட பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்த தெய்வத்தின் பெயரையோ அல்லது தங்கள் முன்னோர்களின் பெயர்களையோ பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். ஆனால், இப்போது நிலையே வேறு.
சமீபத்தில் எனது உறவினர் ஒருவர் தன் மகனுக்கு பெயர் வைத்தார். அவரும் இந்த பதிவை படிக்கிற வாய்ப்புண்டு என்பதால் அந்த பெயரை நான் கூற விரும்பவில்லை. ஆனால் பெயர் புரியவே கொஞ்ச நேரம் ஆயிற்று. அதற்கு என்ன அர்த்தம் என்று நான் கேட்ட போது இது நான்முகனுக்கு(பிரம்மா) மற்றொரு பெயர் என்றார். அந்த பெயரை நான்முகனுக்கு யார் வைத்தார்களோ எனக்கு தெரியாது.
அதே போல், இன்னொரு குழந்தைக்கு பெயர் Tvisha. இந்த பெயரை நான்கு முறை சொன்னால் உதடுகள் குவிந்த வண்ணமே ஆகிவிடுகின்றன. மேலும், பெயரை சொல்லும்போது எச்சல் தெறிக்கும் வாய்ப்பு அதிகம். இதை சரியாக உச்சரிப்பது எப்படி என்று நமக்கு ஒரு பாடமே நடத்துகிறார்கள்.
போதாகுறைக்கு எல்லா பெயருக்கும் இண்டர்நெட்டில் விளக்கம் வேறு தருகிறார்கள். உதாரணமாக, எனக்கு தெரிந்த ஒரு நண்பரின் மகன் பெயர் "Ojas". பின் விளைவு தெரியாமல் இந்த பெயருக்கு அர்த்தம் கேட்டேன். உடனே நண்பர் விஷ்ணு ஸஹஸ்ரநாம புத்தகத்தில் இது உள்ளது. விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று. ஸ்லோகத்தில் "ஒஜஸ்தெயுதிர" என்று வரும். நாங்கள் "Ojas" மட்டும் எடுத்துக்கொண்டோம் என்றார்.இது எப்படி உங்களுக்கு தெரியும், உங்கள் வீட்டில் இவ்வளவு தெய்வ பக்தி எல்லாம் கிடையாதே என்று வினவிய போது "அதெல்லாம் இல்ல, கூகிள் சர்ச் பண்ணோம், இதை பார்த்தோம், பேரு ரொம்ப வித்தியாசமா இருந்தது, அதான் வெச்சுடோம்" என்றார்
இவ்வளவு பேசுகிறாயே, நீ என்ன ஒழுங்கு என்று இதை படிக்கும் சிலர் கேட்பது என் காதில் விழுகிறது. அவர்களுக்கு, நான் சொல்வது ஒன்று தான். என் குழந்தைகளின் பெயர்களை உச்சரிப்பதால் உதடு குவிந்து கொள்வது, நாக்கு பிரண்டு கொள்வது, நுரை தள்ளுவது போன்றவை ஏற்படாது என்று என்னால் உத்திரவாதம் கொடுக்க முடியும்.
பின்குறிப்பு: இந்த பதிவை படிப்பவர்கள் சற்றே நகைச்சுவை உணர்வுடன் இதை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
4 comments:
:):) He he he Good one
- Heyma
Any ways those who keeps name searching net or modes i think name or not create future succeed.
Eample:- Those who keep Roy,Tom,mac
Touser,shirt all this name fellow never reached to fame becoz name not only address of man it way to future.But who keep good ancient name they reached among people or desire level famous ancient names Kuzandaivel,karruppusamy,tamilkudimagan,karunanidhi,Annadurai ETC atleast they need to think good tamil instead of rubbish Engish name.
Thanks for your comments Heyma and Srinivasan
I too had this experience with one of my friend who gave birth to a girl baby recently...They have named the child as "Tysha"...seems to be some Latin word meaning "Joy"....not sure even if he is actually aware of how to pronounce it....
Post a Comment