Friday, 3 April 2009

நரகம்

Zimbabwe கேள்விப்பட்டு இருப்பீர்கள், அங்கே கடுமையான உணவுப்பஞ்சம். அரசியல் நிலைமை - குடுமி பிடி சண்டை. நாட்டின் குடிமக்களுக்கு உணவு இல்லை, இந்நிலையில் சிறைகளின் நிலை?

ஒரு நாளைக்கு 20 சிறைவாசிகள் ஜிம்பாப்வே சிறைகளில் பசியினால் இறக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு அதுவும் மக்காசோள கஞ்சி. சத்துணவு இல்லாமல் கைதிகள் நகரக்கூட முடியாமல் இருக்கிறார்கள். சில பேருக்கு வாயை திறந்து சாப்பிட சத்து இல்லை (எலும்பு முட்டுகிறது...).


நூற்றுக்கணக்கான பேருக்கு காசநோய் (TB) , AIDS. இருப்பதிலே கொடுமை அங்கே உள்ள தனிமை சிறை, அங்கே உள்ள பல கைதிகள் பசியிலும் தனிமையில் வந்த மனச்சிதைவினாலும் மரணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சர்வதேச உதவிகள் கிடைக்குமா கிடைத்தாலும் அது சிறைக்கைதிகளை சென்று அடையுமா என்று தெரியவில்லை.

அடுத்த முறை உணவை வீணாக்கும் முன் யோசியுங்கள்.
படத்தில் ஜிம்பாப்வே சிறை கைதி ஒருவர்.

No comments: