முகவை குமார் 1973 ஆம் ஆண்டு சிறிலங்காவின் கண்டி நகரில் பிறந்தார். அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு அவர் குடும்பம் புலம் பெயர்ந்தது. சிறு வயதிலேயே அரசியல் ஈடுபாடு கொண்ட குமார் தன் தாத்தா சுப.தங்கவேலன் பொதுமக்களுக்கு செய்த நற்பணிகளை கண்டு தானும் அது போல் செய்ய உறுதி கொண்டார்.
இதற்கு முதல்படியாக திரைப்பட துறையில் சேர்ந்த அவர், நாயகன்,தளபதி போன்ற படங்களின் மூலமாக மக்களை நல்வழிப்படுத்தினார். 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட்ட அவர், மக்கள் காவலன் மு.க.அழகிரி துணையோடு அங்கு பெரும் வெற்றி பெற்றார்.முகவை குமார், சிவகுமார் மற்றும் ரித்தீஷ் என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.
முகவை குமாரின் புகழ் பெற்ற தத்துவ பாடல் "இருந்தாக்க அள்ளிக்கொடு இல்லாட்டி சொல்லிக்கொடு நம்ம வழி நல்ல வழி தான்" அன்றைய இளைஞர்களை தூங்கவிடாமல் செய்ததை நீங்கள் உங்கள் தாத்தாக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
பின்குறிப்பு: இப்போது நீங்கள் படித்தது 2075 ஆம் ஆண்டு S.S.L.C பொதுத்தேர்வில் கேட்கப்படவுள்ள J.K.Ritheesh பற்றிய கேள்விக்கான பதில்
3 comments:
Good one Vasu
வாசு,
ஜே.கே. ரீதிஷ், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் பொதுமக்களின் கிண்டலுக்கு ஆளானாலும் தங்களை வளர்த்துக்கொண்டு பொதுமக்களை கிண்டல் செய்பவர்கள். அதாவது "நீங்க (பொதுஜனம்) மிஞ்சி போனா என்ன செய்வீங்க பத்திரிக்கைகளில் Blog-களில் கிண்டல் பண்ணுவீங்க நீங்க யாரும் வோட்டு போட போடறதில்லை அதனால நான் என் வேலையை செய்துகிட்டுதான் இருப்பேன் " .
இனிமேல் ஜே.கே.ரீதிஷ் லாலு பிரசாத் போன்றவர்களை கிண்டல் செய்வதை நாம் எல்லோரும் நிறுத்த வேண்டும் ஏன் என்றால் இது நம்மை நாமே கிண்டல் செய்வது போல. இப்போ ரீதிஷ் எம்.பி ஆகி ஒரு மத்திய அமைச்சர் ஆகிட்டாருன்னு வெச்சுப்போம் , ஒரு spectrum ஊழல் மாதிரி ஏதாவது வந்துச்சுன்னா சும்மா பின்னிட மாட்டாரு?
அப்போ கிண்டல் பண்ணின 'அறிவாளிகள்' 'திறைமைசாலிகள்' 'மேதைகள்' எல்லோரும் தங்களோட சம்பள பணத்தில மாசா மாசம் ரீதிஷுக்கு ஒரு பங்கை கொடுத்துக்கிட்டு இருப்போம் tax மூலமா..
இந்த பத்திரிக்கைகாரங்க,சும்மா இருக்கிற டைமுல 'மச்சான் அவனை பாரேன்' அப்படின்னு கிண்டல் பன்றவனுங்க, Blog-ல நக்கல் நையாண்டி பன்றவனுங்க எல்லோருக்கும் ரீதிஷின் எம்.பி டிக்கெட் ஒரு செய்திதான் சொல்லி இருக்கு, "போடாங்கொய்யா"
Gokul,
Well said but edavadhu form la namma frustration velila varanume..
Post a Comment