Monday, 27 April 2009

அக்ஷய திருத்தியை

இன்று அக்ஷய திருத்தியை. முதல் முதலில் இந்த வார்த்தையை ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன் கேட்டதாக நினைவு. உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிட நினைத்த எவனோ தான் இதை ஆரம்பித்து இருக்க வேண்டும். ஆனால், கடந்த சில வருடங்களில் மிக அருமையாக marketing செய்யப்பட்ட நாள் இது தான். என்ன தான் காதலர் நாள்(Valentines Day), அப்பா நாள்(Fathers Day), அம்மா நாள் (Mothers Day) என்று மக்களை உசுப்பேத்தி விட்டாலும், வியாபாரிகளால் பெரிதாக லாபம் பார்க்க முடிவதில்லை. ஆனால், இந்த நாள் அப்படி இல்லை. இந்த நாளில் எது வாங்கினாலும் அது மேலும் மேலும் சேரும் என்கிறார்கள். போதாகுறைக்கு, அக்ஷய திருத்தியை அன்று தங்கம் வாங்குவது தான் சாலச் சிறந்தது என்கிறார்கள். கேட்கவா வேண்டும். பின்னங்கால் பிடரியில் அடிக்க மக்கள் நகை கடையை தேடி ஓடுகிறார்கள். கடந்த இரண்டு வாரமாக ஹிண்டு பேப்பரில் மெயின் பக்கத்திற்கு இணையாக அக்ஷய திருத்தியை விளம்பரங்களை நகை கடைகள் கொடுத்து இருந்தன.

சரி திருமணமான/வயதான பெண்களை நகை வாங்க வைத்தாயிற்று. இளைய தலைமுறை சும்மா இருக்கிறதே? அவர்களை எப்படி இந்த நாளில் செலவு செய்ய வைப்பது? அதற்கு யாரோ புண்ணியவான் இந்த வருடம் ஒரு புது யுத்தியை கொண்டு வந்திருக்கிறார்.இன்று காலை தான் படித்தேன். இந்த நாளில் பெண்ணோ ஆணோ தன் மனதுக்கு பிடித்தவருக்கு காதலை தெரிவித்தால் அது கை கூடுமாம். ஏற்கனவே தமிழ் சினிமா பார்த்து காதல் பைத்தியம் பிடித்து அலைந்து கொண்டு இருக்கும் இளைஞர்கள்(கவனிக்கவும், நான் இளைஞிகளை பற்றி எதுவும் கூறவில்லை) இனி இந்த நாளில் அப்பன் காசை கரியாக்கி விட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள். வாழ்க அக்ஷய திருத்தியை.

7 comments:

Gokul said...

வாசு,
இது அநியாயம், "சினிமா பார்த்து கெட்டு போன இளைஞர்கள்" என்று சொல்லும் அளவிற்கா உனக்கு வயசாயிடுச்சு?எந்த வயசிலையும் இது சொல்லவே கூடாது (அதாவது நம்ம பொண்ணுங்க love பண்ணாதவரைக்கும்!)

Vasu. said...

கோகுல்,

இதை சொல்ல வயது ஒரு தகுதி என்று நான் நினைக்கவில்லை. நான் கடந்து வந்ததை நினைவு கூர்ந்ததால் உதிர்த்த வார்த்தைகள் இவை. :-))

Zahoor said...

இளைஞிகள் அப்பாவிகள் என்று நினைகின்றிகளா, வாசு?

Zahoor said...

தமிழை +12 தேர்வில் கடைசியா எழுதியதாக நினைவு... தவறுகளுக்கு மனிக்கவும். :)

Vasu. said...

Zahoor,

நீங்க இவ்வளோ அப்பாவியா? பொண்ணுங்க இந்த மாதிரி விஷயத்துல உஷாரா இருப்பாங்க அப்படின்னு கொஞ்சம் நக்கலா சொன்னேன் பாஸ்.

Mahalakshmi Swaminathan said...

Sir, Not at girls are that smart....

Vasu. said...

Maha,

Exceptions should not be taken as examples. I am making a generic statement.