-பிரபாகரன் எனது நண்பர். நான் தீவிரவாதி இல்லை.
-பிரபாகரன் குழுவை சேர்ந்தவர்கள் தீவிரவாதத்தை நம்புபவர்கள். ஆனால், அது பிரபாகரனின் குற்றம் இல்லை.
-பிரபாகரனை நான் தீவிரவாதியாக பார்க்கவில்லை.
-பிரபாகரன் மரணமடைந்தால் நான் வருத்தப்படுவேன்
-புலிகளின் இலக்கு சரியே ஆனால் அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி தவறு.
இதையெல்லாம் சொன்னது நெடுமாறனோ, வைகோவோ அல்லது நார்வே அமைதி பேச்சுவார்த்தை குழுவோ இல்லை. நம் மாநில முதல்வர், தமிழினத் தலைவர் கருணாநிதி NDTV தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டி இது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் "அது கருணாநிதியின் சொந்த கருத்து என்று கூறியிருக்கிறார்". வைகோ, சீமான் போன்றவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்த தி.மு.க அரசு தன் கட்சியின் தலைவர் பேசியதை எந்த வகையில் சேர்க்கும்?
மேலும், புலிகளை ஆதரித்த திருமாவை காங்கிரஸ் கூட்டணியில் சேர்க்கவே யோசித்தது. ஆனால், பிரபாகரன் எனது நண்பர் என்று சொல்லும் ஒரு மாநில முதல்வருடன் வெட்கமே இன்றி கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறது. மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் இவர்கள்? இவர்களிடம் இருந்து எப்போது விடிவுகாலம் நமக்கு?
No comments:
Post a Comment