பொதுவாக ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று நினைக்கும் பலரில் நானும் ஒருவன். ஏற்கனவே அரசியல் பேசி/அரசியல்வாதிகளுடன் பழகி, காஞ்சியில் ஒருவர் என்ன கதியானார் என்று அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஸ்ரீலங்கா விஜயமும் அதன் பின்னணியில் அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சில பகுதிகளும் தேவையற்றதோ என்று தோன்றியது.
ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் அறிக்கையின் ஒரு பகுதி இது தான். "இலங்கை அரசாங்கம் ஈழ தமிழர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்துள்ள முகாம்கள் மிக நன்றாக இருக்கின்றன. காஷ்மீர் போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு இந்திய அரசாங்கம் கட்டிய முகாம்களும் தமிழகத்தை நோக்கி வரும் ஈழ தமிழர்களுக்காக தமிழக அரசு கட்டிய முகாம்களும் இலங்கை அரசின் ஏற்பாடோடு ஒப்பிட்டு பார்த்தால் சுமார் ரகமே."
இதோடு நிறுத்தினாரா? "அங்கு கஷ்டப்படும் மக்களுக்காக இங்கு உண்ணாவிரதம், தீக்குளிப்பு, பந்த் என்று போராடி என்ன பயன்? இதன் மூலம் சமூகத்தில் கோபமும் வெறுப்பும் மட்டுமே உண்டாகும் என்று கூறியுள்ளார்."
என்ன தான் உண்மை என்றாலும் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த இன்று இதை கூறியிருக்க வேண்டாம். இனி ஸ்ரீ ஸ்ரீ மதுரையை தாண்டுவது கடினம் தான். என் உள்ளுணர்வு சரி என்றால் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் அலுவலகத்தில் இருந்து நான் சொல்ல வந்தது ஊடகங்களால் வேறு மாதிரி சித்தரிக்கப்பட்டது என்று ஒரு செய்திக்குறிப்பு வெளியாகும்.பார்க்கலாம்.
2 comments:
// ஏற்கனவே அரசியல் பேசி/அரசியல்வாதிகளுடன் பழகி, காஞ்சியில் ஒருவர் என்ன கதியானார் என்று அனைவருக்கும் தெரியும். //
ஆம் அனைவரும் அறிவோம். இவருக்கும் அந்த கதி ஆகாது என்று நம்புவோமாக..
வருகைக்கு நன்றி ராகவன்.
Post a Comment