Tuesday, 19 May 2009

அஞ்சலி


எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு உறுதியான தலைவன் , ஒரு கண்டிப்பான organizer- ஒரு வீரமான ராணுவ தளபதி இழந்தது தமிழ் இனத்தின் நிரப்ப முடியாத வெளி.

4 comments:

Vasu. said...

கோகுல்,

உனக்கே இது கொஞ்சம் அதிகமாக தோன்றவில்லையா? எனக்கு இலங்கை பிரச்சனை பற்றி அதிகம் தெரியாது. ஆனால், மொரார்ஜி தேசாய் சொன்னது போல "பிழைக்க போன இடத்தில் சொந்த நாடு வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்தால் அடி தான் விழும். அப்படி விழுந்தால் வாங்கிக்கொள்ள தான் வேண்டும்." தமிழகத்திலும் இப்படி ஒன்றை ஆரம்பித்தார்கள். "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என்று. நல்லவேளை, அந்த கோஷத்தை ஆரம்பத்திலேயே அடக்கிவிட்டார்கள்.

அப்பாவி தமிழர்களை பணயம் வைத்து வாழ்ந்த வீரர் இவர். தன் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, அந்தஸ்தெல்லாம் கொடுத்து அதே சமயத்தில் பல தமிழர்களின் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக போர்முனைக்கு அனுப்பியவர். இவருக்கு அஞ்சலி செலுத்தினால், உலக வரலாற்றில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த பலருக்கு நாம் அஞ்சலி செலுத்த வேண்டி வரும். இது தவறான முன்னோடி என்பது என் கருத்து. தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

Gokul said...

வாசு,

நீ சொல்வது அனைத்தும் உண்மைதான் , அதனால்தான் 'எவ்வளவு விமர்சனம் இருந்தாலும்' என்று எழுதினேன்.

நீ சொல்லும் எல்லாம் உண்மைதான் என்றபோதும் நான் அஞ்சலி செலுத்தியது இரண்டு காரணங்களுக்காக

ஒன்று . ஒரு தனி ராணுவத்தையும் , இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை நிர்வாகம் செய்ததற்காக. பெரிதாக கல்வி இல்லாமல் இதை சாதித்து கட்டியதற்காக.

இரண்டு. உறுதி, செய்தது தவறாக இருந்தாலும் அதனை செய்து முடிப்பதில் காட்டிய உறுதி, இந்த உறுதி இல்லாமல் இன்று தமிழகத்தில் , இந்தியாவில் எத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன என்று உனக்கே தெரியும்.

மேலும் மரணம் எல்லோருக்கும் பொது, அதனால் அஞ்சலி செலுத்துவது வாழ்ந்த போது இருந்த கொள்கைகைகளுக்கு அப்பாற்பட்டது இல்லையா?


♥♣♥கேசவமூர்த்தி♥♣♥
said...

லூசு வாசு,

தமிழனா இலங்கையில் பிழைக்க சென்றவன்? சிங்களர்களின் வரலாறு கூறும் 'மகாவம்சம்' என்ற நூலை நன்றாக ஒன்றுக்கு நான்கு முறை படித்துவிட்டு அதன்பின் பின்னூட்டம் இடு என்ன..............!

Vasu. said...

அன்புள்ள கேசவமுர்த்தி அவர்களுக்கு,

எதற்கு இவ்வளவு எமோஷன்? நான் தான் எனக்கு சிறிலங்காவின் வரலாறு பற்றி தெரியாது என்று சொல்லியிருந்தேனே? மகாவம்சம் பற்றிய குறிப்புக்கு நன்றி. அந்த நூலை பற்றி அறிய கொஞ்சம் வலையை துழாவினேன். முதலில் அது புத்தகம் அல்ல பாலி மொழியில் எழுதப்பட்ட பாடல் என்கிறது விக்கிபீடியா. மேலும், அதில் தமிழர்கள் தான் இலங்கையின் முதல் குடிமக்கள் என்று எந்த செய்தியும் இருப்பதாக தெரியவில்லை. சிங்களர்களின் நாடு தான் இலங்கை என்றே அது கூறியதாகவும் அதை எதிர்த்து பொன்னம்பலம் என்பவர் 1930 ஆம் ஆண்டு போர்க்கொடி உயர்த்தியதாகவும் கூறுகிறது விக்கி.

To Quote Wikipedia Verbatim:

"The Mahavamsa ("Great Chronicle") is a historical poem written in the Pali language, of the kings of Sri Lanka. It covers the period from the coming of King Vijaya of Kalinga (ancient Orissa) in 543 BCE to the reign of King Mahasena (334–361)."

"The Mahavamsa has, especially in modern Sri Lanka, acquired a significance as a document with a political message. The Sinhalese majority often use Mahavamsa as a proof of their claim that Sri Lanka is a Buddhist nation from historical time. The British historian Jane Russell has recounted how a process of "Mahavamsa bashing" began in the 1930s, especially from within the Tamil Nationalist movement. The Mahavamsa, being a history of the Sinhala Buddhists, presented itself to the Tamil Nationalists and the Sinhala Nationalists as the hegemonic epic of the Sinhala people. This view was attacked by G.G. Ponnambalam, the leader of the Nationalist Tamils in the 1930s. He claimed that most of the Sinhala kings, including Vijaya, Kasyapa, and Parakramabahu, were Tamils. Ponnambalam's 1939 speech in Navalpitiya, attacking the claim that Sri Lanka is a Sinhalese, Buddhist nation was seen as a act against the notion of creating a Buddhist only nation. The Sinhala majority responded with a mob riot, which engulfed Navalapitiya, Passara, Maskeliya, and even Jaffna. The riots were rapidly put down by the British colonial government, but later this turned through various movements into the current civil war in Sri Lanka."

இதை தான் பிழைக்க போன இடத்தில சும்மா இல்லாவிட்டால் உதை விழும் என்று சொன்னேன். நீங்கள் சொல்வது போல் நான்கு முறை மகாவம்சத்தை படித்துவிட்டு பின்னூட்டம் போட்டாலும் இதே கருத்து தான் தோன்றும். உடனே விக்கிபீடியா படித்து பின்னூட்டம் போடுகிற நீ எல்லாம் "@#%%^&^&*&" என்று திட்டி பதில் அனுப்பாதீர்கள். நான் பிறர் மனைவி, அம்மா, தங்கை எல்லாம் திட்டுவதை நிறுத்தி கொஞ்ச காலம் ஆகிறது.