Thursday, 9 July 2009

ஓரின சேர்க்கை - சட்ட திருத்தம்

இது அவரவர் சொந்த விஷயம், இதில் பிறர் தலையிட கூடாது என்றெல்லாம் சொல்லி இதை சட்டபூர்வமாக அனுமதிப்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு திருமண சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? இதற்கென்று தனியாக அரசு ஒன்றை உருவாக்குமா? இவர்கள் பிரிய நினைத்தால் எந்த காரணத்தின் பேரில் டைவர்ஸ் தரப்படும்? இவர்களுக்கென்று தனி நீதிமன்றமா அல்லது இவர்களும் குடும்ப நல நீதிமன்றத்தை நாடலாமா? ஆனால், இவர்களை எப்படி குடும்பம் என்ற வகையில் சேர்ப்பது?

அமெரிக்கா இதை அனுமதிக்கிறது, இங்கிலாந்தில் இது அமலில் உள்ளது என்றெல்லாம் சொல்பவர்கள் அவர்களை எல்லா விதத்திலும் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, அங்கே மனைவி வேறொருவருடன் இருந்துவிட்டு வந்து மன்னிப்பு கேட்டால் கணவன் மன்னித்து ஏற்றுக்கொள்வான். ஏற்றுக்கொள்கிறானோ இல்லையோ,நம்மூர் மாதிரி கொலை செய்யமாட்டான். எஸ்கிமோக்கள் குளிரின் காரணமாக ஐந்து பேர் ஒருவரின் மனைவியை பங்கிட்டு கொள்வார்கள் என்கிறது National Geographic. இங்கே நடக்குமா? (உடனே மகாபாரதத்தை மேற்க்கோள் காட்டக்கூடாது. அது கதை. நிஜத்தில் நடந்தால் உதைப்பார்கள்.)

அதெல்லாம் விடுங்கள். இதை சட்டம் ஆதரித்தாலும் இவர்களால் இந்தியாவில் வாழ முடியாது. இவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காது, ரேஷன் கார்டு கிடைக்காது(அதில் குடும்ப தலைவர் பெயர் என்னவாக இருக்கும்?), சேர்ந்து கை கோர்த்துக்கொண்டு போனால் கல்லால் அடிப்பார்கள். மொத்தத்தில் இதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு இவர்கள் அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ தான் வாழ முடியும்.

எல்லாத்துக்கும் மேல, "I am a gay" என்று Sir Elton John போல இவர்களால் இந்தியாவில் பிரகடனம் செய்ய முடியுமா?

No comments: