Monday, 17 August 2009

காத்தாடி

சென்னையில் இப்போதெல்லாம் காத்தாடி தென்படுவதே இல்லை. சென்னையில் மட்டும் தான் இந்த நிலையா அல்லது தென் மாவட்ட சிறுவர்கள் கூட இப்போது Jetix, Power Rangers என்று மூழ்கி காத்தாடி, கில்லி போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மறந்துவிட்டார்களா என்று தெரியவில்லை.

என் சிறு வயதில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு விளையாட்டு உண்டு. காத்தாடி விட ஏப்ரல்/மே மாதங்கள். எப்படி மென்பொருள் துறையில் ஒரு திட்டத்தை செயல்படுத்த SDLC உள்ளதோ அதே போல காத்தாடி உருவாக KDLC(Kaaththaadi Development Lifecycle) ஒன்று உண்டு. Requirements Gathering, Design, Development, Testing and Maintenance காத்தாடிக்கும் பொருந்தும்.

Requirements Gathering என்பது காத்தாடி உருவாவதில் இன்றியமையாத பகுதி. இதை நல்ல காத்தாடி செய்பவரிடம் outsource செய்து வாங்கிக்கொள்ளும் சிறுவர்கள் உண்டு. இல்லை நேராக கடையில் சென்று வாங்குபவர்களும் உண்டு. ஆனால், பலர் in house development செய்வதையே விரும்புவார்கள். தங்கள் அளவுக்கு யாரும் requirement என்னவென்று புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பது இவர்கள் கருத்து.

காத்தாடியின் Design என்பது அதன் சூஸ்திரமே. சரியான இடத்தில் துளையிடப்பட்டால் தான் காத்தாடி நாம் நினைப்பது போல் பறக்கும். Design கோளாறு ஏற்பட்டால் காத்தாடி காலி. சூஸ்திரம் போடுவதற்கு முன் சாமிக்கு தேங்காய் உடைப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள்.

காத்தாடியின் development என்பது குச்சி வைத்து ஒட்டப்படும் பகுதி. மிக கவனத்துடன் கையாளப்பட வேண்டிய விஷயம் இது. Development பிசகினாலும் கஷ்டம் தான் ஆனால் முதலுக்கு மோசமில்லை. அப்படி இப்படி எதாவது செய்து சமாளிக்கலாம்.

Test செய்யாமல் பொதுவாக காத்தாடி கோதாவில் இறங்காது. இரண்டு அல்லது மூன்று முறை பறக்கவிட்டு ஓனர் திருப்தி ஆன பின்பு தான் "லைவ்" போகும்.

காத்தாடியின் maintenance என்பது, பல வெற்றி வாகைகளை சூடிய காத்தாடியை சில ஆண்டுகள் பராமரிப்பதை பற்றியது. எதாவது பீரோவின் அடியிலோ அல்லது வீட்டிலுள்ள வேறு யாரும் வந்து போகாத ஒரு இடத்திலோ இந்த காத்தாடி பராமரிக்கப்படும்.

காத்தாடி என்ன தான் நன்றாக இருந்தாலும் மாஞ்சா இல்லாமல் அது சோபிக்காது. காத்தாடியும் மாஞ்ஜாவும் சக்தியும் சிவனும் போல. சக்தியின்றி சிவன் இல்லை, அது போல் நல்ல மாஞ்சா இன்றி காத்தாடி இல்லை. நல்ல மாஞ்சா உருவாக கடும் உழைப்பு தேவை. வெட்கம்,மானம் இதையெல்லாம் துறந்து, வீட்டில் உள்ளவர்களின் திட்டு,அடி தாங்கும் சக்தியுள்ள ஒருவானால் தான் நல்ல மாஞ்சா உருவாக்க முடியும். உடைந்த பாட்டில், பிளேடு துண்டுகள், வஞ்சிரம், நாய் பீ என்று தெருத்தெருவாக சுற்றி எடுத்து வந்து அடுப்பில் போட்டு காய்ச்சி அதில் நூல்கண்டை போட்டு மாஞ்சா செய்ய வேண்டும்.

ஒரு வேளை, இந்த உழைப்புக்கெல்லாம் அஞ்சி தான் சிறுவர்கள் இப்போது காத்தாடி விடுவதில்லையோ?

3 comments:

இராகவன் நைஜிரியா said...

அது ஒரு காலம்ங்க. காத்தாடி, பம்பரம், கோலிகுண்டு, கிட்டிப் புள்...

இப்ப இதையெல்லாம் எங்குப் பார்க்க முடிகின்றது. டிவியே கதியென பிள்ளைங்க அடிமையாகிட்டாங்க.

Gokul said...

எங்கேயோ ஒரு பதிவில் படித்து, 1980-1990 வரையிலான காலகட்டம் சிறுவர்கள் வளர்வதற்கான ஒரு சிறந்த காலம் (தமிழ்நாட்டில்) என்று , அதை எழுதியவர் அந்த பத்தாண்டுகளில் வளர்ந்தவராக இருப்பார், அதனால்தான் அப்படி எழுதுகிறார் என்று தோன்றினாலும், நானும் அப்போது வளர்ந்தவன் ஆகையால் அது ஒரு வகையில் உண்மை என்று தோன்றியது.

இப்போது இருப்பது போல டி.வீ அதிகம் இல்லாத காலம். மேலும் வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், இன்டர்நெட் என்று எலக்ட்ரானிக்ஸ் பொட்டிகள் அதிகம் இல்லாத காலம் அதனால் விளையாட தோன்றியதோ என்னவோ....

இப்போ எல்லாம் நிறைய பெயிண்ட் அடிக்கறாங்க, பேப்பெர்ல, கார்ட்ல அப்படின்னு எப்போவும் கிறுக்கிட்டு இருக்காங்க , அப்புறம் இருக்கவே இருக்கு கார்ட்டூன் சானல் ..எல்லாத்துக்கும் மேலே அப்பா அம்மாவோட முழு கவனம், நேரம் எல்லாம் பிள்ளைங்க மேலே இருக்குது, பசங்களோட ஒவ்வொரு நிமிஷத்தையும் பெரியவங்க கவனிச்சுகறாங்க.வெறுப்பு வர வைக்கிற அளவுக்கு அக்கறை.

நைகீரிய ராகவன் சொன்னது போல கிட்டிபுள், பம்பரம் எல்லாமும் போச்சு. இதில் இழந்த முக்கியமான சந்தோஷம் sprit of friendship

Zahoor said...

வாசு,
காத்தாடி & "Software Development Lifecycle" நல்ல கற்பனை :-)

காத்தாடியை பற்றி அணைத்து விவரங்களையும் சொல்ல சொல்ல பள்ளி நாட்கள் கண்முன்னே விரிகின்றது.

பாணா காத்தாடியை பற்றி சொல்லாமல் விட்டுவிடீர்கள். பாணா காத்தாடியை எல்லோராலும் விட முடியாது, its a specialist job. :-)

காத்தாடி என்றதும் "KiteRunner" படம் தான் நினைவுக்கு வருகிறது. (நாங்களும் உலக சினிமா எல்லாம் பாப்போம்ல :-) )