Wednesday, 5 August 2009
The Godfather-I
இந்த படத்தை குறைந்தது ஐம்பது முறையாவது பார்த்திருப்பேன். ஆனால், எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. தமிழில் நாயகன், ஹிந்தியில் சர்க்கார் போன்ற படங்களுக்கு இன்ஸ்பிரேஷன் காட்பாதர் தான். அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த ஒரு இத்தாலிய குடும்பத்தின் கதை. காட்பாதராக மர்லன் பிராண்டோ. நிழல் உலக தாதாவான இவர் தவறான விஷயங்களுக்கு உதவ மறுக்க அமெரிக்காவில் உள்ள மற்ற நிழல் உலகத்தை சேர்ந்த குடும்பங்களின் பகைக்கு ஆளாகிறார். ஒரு கட்டத்தில் இவர் சுடப்பட, நிறைய முன்கோபம் உள்ள இவர் மூத்த மகன் குடும்பத் தலைவனாகிறான். தன் அவசர புத்தி மற்றும் முன்கோபத்தால் அவனும் கொல்லப்பட, இந்த தொழிலே பிடிக்காத இவர் கடைசி மகன் அல் பசினோ, சந்தர்ப்பவசத்தால் குடும்ப தலைமையை ஏற்கிறான். தன் தந்தை மற்றும் அண்ணனை கொன்றவர்களை பழி வாங்குகிறான்(இதில் அவன் தங்கை கணவனும் அடக்கம்).
இந்த படத்தின் பாதிப்பு எந்த அளவுக்கு என் மீது இருந்தது என்றால் அலுவல் காரணமாக இத்தாலியில் இருந்து என் நிறுவனத்திற்கு வந்த இரண்டு பேரிடம், அவர்கள் Sicily சென்றிருக்கிறார்களா, Corleone ஊர் எப்படி இருக்கும் என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்க அவர்கள் கொஞ்சம் பயந்தபடி அங்கெல்லாம் செல்வது ஆபத்து என்றும் அது நிழல் உலக ஆசாமிகளின் ஊர் என்றும் சொன்னார்கள். ஆனால், என் வாழ்நாளில் ஒரு முறையாவது Corleone சென்று பார்க்க வேண்டும் என்றும் ஆசை.
படத்தில் சில சுவாரசியமான வசனங்கள்:
Michael Coreleone to his sister's husband in the climax: "only don't tell me you are innocent. It insults my intelligence. It makes me very angry"
Don Corleone to Virgil Sollozo: I have a sentimental weakness for my children and I spoil them, as you can see. They talk when they should listen. Anyway, Signor Sollozzo, my no to you is final. I want to congratulate you on your new business and I'm sure you'll do very well and good luck to you. Especially since your interests don't conflict with mine. Thank you.
[Sollozzo leaves]
Michael to his girlfriend Kay: My father is no different than any powerful man, any man with power, like a president or senator.
Kay Adams: Do you know how naive you sound, Michael? Presidents and senators don't have men killed.
Michael: Oh. Who's being naive, Kay?
Tom Hagen(Don Corleone's lawyer): Mr Corleone is Johnny Fontane's godfather. Now Italians regard that as a very close, a very sacred religious relationship.
Jack Woltz: Tell your boss he can ask for anything else, but this is one favour I can't grant him.
Tom Hagen: Mr. Corleone never asks a second favor once he's refused the first, understood?
Don Corleone: [to his son Michael] Listen, whoever comes to you with this Barzini meeting, he's the traitor. Don't forget that.
Don Corleone: [to his son Michael] So, Barzini will move against you first. He'll set up a meeting with someone that you absolutely trust, guaranteeing your safety. And at that meeting, you'll be assassinated.
Labels:
Al Pacino,
Corleone,
Godfather,
Marlon Brando,
Sicily
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Beautiful but virtuous பெண்களை பார்ப்பதற்காக Corleone செல்ல வேண்டுமா? :-)
ஹிந்தி, தமிழ் மட்டுமில்லை உலகில் எங்கு "Don", "Underworld" படங்களை எடுத்தாலும், அதற்கு "Godfather" தான் benchmark.
எனகென்னமோ அல் பசினோ தான் வழியில் பார்க்கும் பெண்ணைப் பற்றி அவளுடைய அப்பாவிடமே விசாரிக்கும் காட்சி தான் பிடித்தமானது :-)
(Sorry posted this comment in wrong story)
Post a Comment