Thursday, 12 August 2010
நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா?
நம்மில் எத்தனை பேர் தலைவலி ஜுரம் போன்ற சாதாரண உடல் பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுகிறோம்? நான் Dolo-650,Saridon, Resteclin 500 Mg போன்ற மருந்துகளை அந்த நோய் தீரும் வரை எடுத்துக்கொள்வேன்.அப்படி ஒரு சாதாரண மருந்தான Combiflam என்ற மருந்து எத்தனை பெரிய பின்விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை படத்தில் பாருங்கள். குணசுந்தரி என்ற இந்த பெண் வைரல் பீவர் எனப்படும் விஷ ஜுரம் ஏற்பட்டு அதற்காக நங்கநல்லூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.(இங்கு தான் என் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தாள்)
அங்கிருந்த மருத்துவர் Combiflam எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். Combiflam ஜுரம் மற்றும் உடல் வலிக்கான மருந்து. Paracetamol மற்றும் iBrufen கலவை. நானே இரண்டொரு முறை இதை உட்கொண்டிருக்கிறேன். குணசுந்தரி ஒவ்வாமை(Allergy) காரணமாக இந்த நிலையை அடைந்துள்ளார். மருந்தில் இருந்த ஏதோ ஒன்று அவருக்கு ஒற்றுக் கொள்ளவில்லை. அந்த பெண் போலீசில் புகார் செய்ய இப்போது மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கை பரிசீலித்த அகில இந்திய தலைமை மருத்துவ/மருத்துவர் குழு தலைவர் ரவிசங்கர், "மருந்தின் கலவையால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒவ்வாமை காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இதற்கு மருத்துவமனை பொறுப்பேற்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.
ஒரு நோயாளியின் முந்தைய உடல் பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்வது ஒரு மருத்துவரின் கடமை இல்லையா? நோயாளியின் இதர உடல் கோளாறுகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் எப்படி மருத்துவர் ஏதோ ஒரு மருந்தை சிபாரிசு செய்ய முடியும்? Combiflam எனப்படும் இந்த மருந்து 1997 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்கிறது கூகுள் வாயிலாக நான் பார்த்த சில வலைத்தளங்கள். அதற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் இந்த மருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இது கூட தெரியாமல் எப்படி மருத்துவர் இதை நோயாளிக்கு பரிந்துரைக்க முடியும்?
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு வயது குழந்தை உள்ளது. இத்தனை பெரிய விஷயம் டெக்கான் நாளிழதில் ஒரு ஓரத்தில் வந்துள்ளது. இதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை நமது மீடியா. என்ன பாதுகாப்பு இருக்கிறது நமக்கு இந்தியாவில்? இந்த பெண்ணிற்காக யார் போராடுவார்கள்? இந்த மருந்தை சிபாரிசு செய்த மருத்துவருக்கு குறைந்த பட்ச தண்டனையாவது கிடைக்குமா? எனக்கு நம்பிக்கையில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஒவ்வாமை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதை அவர்கள் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். மேலும் ஒன்று அல்லது இரண்டு மாத்திரை சாப்பிட்டவுடனே ஒவ்வாமை ஏற்பட்டிருக்கும். உடனே அதை கவனித்து மாற்று மருந்துகள் எடுத்திருக்கவேண்டும்.
இது நோயாளியின் அறியாமையினால் ஏற்பட்டது என்று நான் கருதுகிறேன்.
NEED PUNISHMENT
இது மெடிக்கல்ஷாப்காரர்களின் கவன்க்குறைவால் நடந்திருந்தால் கடுனையான தண்டனை தேவை
கந்தசுவாமி சார்,
நீங்க சொல்றது உண்மை ஆனா தடை செய்யப்பட்ட மருந்தை மருத்துவர் எப்படி பரிந்துரைத்தார் என்று தெரியவில்லை.
செந்தில் சார்,
இதில் மருந்துக் கடைக்காரரை குறை சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. டாக்டர் எழுதியதை அவர் கொடுத்திருப்பார்.
இதற்கு மருந்து கடைக்காரர் என்ன செய்வார்..இதற்கு முழுமுதல் பொறுப்பு அந்த மருத்துவரே...ஆனால் மருத்துவர்களுக்கு எங்களை விட்டால் யார் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பார் என்ற திமிரே இருக்கிறது....அதனால் அவர்கள் என்ன செய்தாலும் நியாயம் என்கிறார்கள்..ஒரு மருத்துவர் என்னிடம் எந்தளவிற்கு கீழறிங்கி சண்டையிட்டார் (இன்னும் சண்டையிட்டு பின்னூட்டமிட்டுக்கொண்டே இருக்கிறார்...ஆனால் புரிந்து கொள்ளாததைப் போலவே பேசுகிறார்)...என்று பாருங்கள் நண்பரே...
http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_20.html
ஒவ்வாமை குறித்த தகவல்கள் இந்த இடுகையில் உள்ளன
//ஆனால் மருத்துவர்களுக்கு எங்களை விட்டால் யார் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பார் என்ற திமிரே இருக்கிறது//
அது திமிர் அல்ல நண்பரே
//அதனால் அவர்கள் என்ன செய்தாலும் நியாயம் என்கிறார்கள்//
அப்படி எல்லாம் யாரும் சொல்வதில்லை
ஒரு சிலர் காழ்ப்புணர்வுடன் மருத்துவர் தவறு செய்யாவிட்டால் கூட மருத்துவரின் மேல் குற்றம் சுமத்துவார்கள்
நியாயம் என்றால் நியாயம் என்று தானே சொல்லவேண்டும்
//ஒரு மருத்துவர் என்னிடம் எந்தளவிற்கு கீழறிங்கி சண்டையிட்டார் (இன்னும் சண்டையிட்டு பின்னூட்டமிட்டுக்கொண்டே இருக்கிறார்...ஆனால் புரிந்து கொள்ளாததைப் போலவே பேசுகிறார்)...என்று பாருங்கள் நண்பரே...//
அந்த வலைத்தளத்தை பார்த்தால் காழ்ப்புணர்வுடன் பேசுவது யார் என்று தெள்ளத்தெளிவாகவே தெரியும்
thanks brunno
i cant able to reply as detailed as your are. i dont know wht exactly reply to this inappropriate questions.
Post a Comment