Showing posts with label சாரு. Show all posts
Showing posts with label சாரு. Show all posts

Sunday, 16 January 2011

கவுண்டமணி Vs சாரு

சமீபத்திய சாரு பதிவு (http://charuonline.com/blog/?p=1697) படிக்கும்போது கீழே குடுக்கபட்டுள்ள வீடியோ ஏன் நினைவுக்கு வருகிறது என்றே தெரியவில்லை  ..

Sunday, 9 January 2011

சாரு - ஆயிரம் ரூபாய் ஆபாசம்

வெகு நாட்களாக இது மனதில் தோன்றி கொண்டே இருந்தது , சாரு தனது எழுத்தில் இப்போதெல்லாம் மிக மிக அதிக விலையில் தான் வாங்கியவற்றை குறிப்பிட்டு கொண்டே இருக்கிறார், முன்பு ஜட்டி , இப்போது பேனா! இப்போது LAMY என்ற பேனாவை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறாராம்.(சாரு எழுதுகிறார் "விலை மலிவுதான் - ஆயிரம் ரூபாய்")

இதன் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார் ? என்னால் ஆயிரம் ரூபாய் குடுத்து பேனா வாங்க முடியாது, அதற்கான வசதி இல்லை, அவரது எழுத்தை படிக்கும் முக்கால்வாசி பேர் ஆயிரம் ரூபாய் குடுத்து பேனா வாங்க மாட்டார்கள் .. பிறகு ஏனிந்த பீற்றல் , ஆபாசம்? என்னால் இரண்டாயிரம் குடுத்து ஜட்டி வாங்க முடியும், ஆயிரம் குடுத்து பேனா வாங்க முடியும் என்று? ஒன்று பணம் இல்லை என்று புலம்ப வேண்டியது, அல்லது பணம் இருக்கிறது என்று அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க வேண்டியது. Shock Values மூலமாகவே வாழ்வதில் தப்பில்லை அது ரசிக்கும்படி இருக்க வேண்டும்.


அவர் தன் புத்தகங்கள் விற்கவில்லை அல்லது விற்கிறது என்று சொல்லலாம் , அது அவரது உரிமை. இப்படி படிப்பவர்களிடம் ஆபாசமாக அலட்டிக்கொள்ள கூடாது. கலாநிதி மாறன் தன் சேனலில் ஒரு பேட்டி வைத்து, தனது வீட்டின் மதிப்பு 100 கோடி , பேனா 3000 ரூபாய் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அப்படி இருக்கிறது இது.

அய்யா , கடந்த பத்து ஆண்டுகளில் நீங்கள் அடைந்த முன்னேற்றம் அபாரமானது , அதற்கான உங்கள் திறமையை மதிக்கிறேன்! உங்களின் உழைப்பை / நீங்கள் குடுத்த விலை மதிக்கிறேன் , அதற்காக பணம் வந்தவுடன் இப்படி குடை பிடிக்கலாமா  , எந்த ஒரு "Rags to Riches" மனிதரும் இப்படி தம்பட்டம் அடிக்க மாட்டார். 

Sunday, 12 September 2010

சாரு வெளிநாட்டுக்கு போகிறார்

சாரு சீக்கிரம் வெளிநாடு போக போகிறார்! இதுவரை 2 பதிவில் அவர் புகார் கூறிவிட்டார்..இதே போல் முன்பு கையில் பணம் இல்லை என்று புலம்பி இப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார் , பிறகு நான் வசதியாக இருந்து என்ன பிரயோஜனம் ...புத்தகங்கள் விற்கவில்லையே என்று புகார் கூறினார்..இப்போது "Pyramid of needs" படி வெளிநாடு போக முடியவில்லை என்று புலம்பல்.இந்த ஜெயமோகன் வேறு எப்போ பார்த்தாலும் வெளிநாடு போய் வயத்தெரிச்சல் கொட்டிகொள்கிறார்..

ஆகவே மகாஜனங்களே தலைவர் சீக்கிரம் அமெரிக்கவோ , மலேசியாவோ , ஐரோப்பவோ பறக்க போகிறார்.. பல ஜில்பான்ஸ் பதிவுகளை சாருவிடமிருந்து எதிர்பாருங்கள்...(இங்கேதான் இதுக்கு பேரு பஸ்சு ,
அமெரிக்காவில இதுக்கு பேரு குப்பை லாரி..)

Sunday, 19 April 2009

சாருவும் தேர்தலும்.

அன்புள்ள சாருவிற்கு,

49-O குறித்து உங்களின் எதிர்வினை மிகவும் மிகவும் தவறான நிலைப்பாடு.நீங்கள் உங்கள் பதிலில் அரசியல்வாதியை பற்றி கொலைகாரர்கள் , கொள்ளைகாரர்கள் , பயங்கரவாதிகள் என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தீர்கள் , எதையும் யாரும் மறுக்க முடியாது, ஆனால் ஜனநாயகத்திற்கு மேலான ஒரு அமைப்பை உலகம் இன்னும் காணவில்லை.

ஒரு அமைப்பை (system) எதிர்ப்பவர் அதனினும் மேலான ஒரு அமைப்பை காட்டியே இப்போதுள்ள அமைப்பை எதிர்க்க வேண்டும், அது இல்லாமல் மிக விரக்தியான மன நிலையில் வோட்டு போடாமல் இருப்பது நீங்கள் சொன்ன அதே அரசியல்வாதிகளுக்கு துணை போவது போல் இல்லையா?

இதனை மற்றவர் யாரவது சொல்லலாம் ஆனால் எழுத்தாளராகிய நீங்கள் சொல்லக்கூடாது.

உங்களை போன்றவர் ஜனநாயகத்திற்கு மேல் நம்பிக்கை இழக்க கூடாது.இந்த சிஸ்டத்தை உள்ள கெட்டவைகளை களைவதை பற்றியே நீங்கள் எழுதவேண்டுமே (நீங்கள் மாயாவதியை பற்றி எழுதியதை போன்று..best among the worst) தவிர வோட்டு போட மாட்டேன் என்று கூறுவது மிகவும் தவறு.

நீங்கள் இருக்கும் மைலாப்பூர் தென்சென்னை தொகுதி.தென்சென்னை தொகுதியில் சரத்பாபு என்ற ஒருவர் இந்த நாடளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக நிற்கிறார் , இவர் யார் என்றால் IIM-இல் MBA படித்துவிட்டு மிகப்பெரிய MNC வேலைகளை விட்டுவிட்டு சொந்தமாக உணவு தயாரித்து விநியோகிக்கும் தொழிலை செய்கிறார், அதனை வெற்றிகரமாகவும் செய்கிறார், இவர் மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் இருந்து வாழ்ந்து வந்தவர்.தென்சென்னை தொகுதியில் நிற்கும்

சரத்பாபு பற்றி மேலும் அறிய,
http://idlyvadai.blogspot.com/2009/04/2009_15.html
http://sarathbabu.co.in/in/

எனக்கு தெரிந்து இவர் ஒருவர், தெரியாமல் எத்தனையோ பேர் ராமர் பாலத்தின் அணிலை போல செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இவர் எந்த நம்பிக்கையில் தேர்தலில் நிற்கிறார்? நம்மை போன்றவர்களை நம்பித்தான். இந்த நேரத்தில் இவர் தேர்தலில்

ஜெயிப்பார் என சொல்வது ஒரு joke ஆனால் நம்பிக்கை இழக்காமல் இவரை இவரை போன்றவர்களை ஆதரிக்க வேண்டும், இன்று, இல்லாவிட்டால் நாளை இல்லை மற்றொரு நாள் விடிந்தே தீரும், ஆனால் அதற்கு நாம் எல்லோரும் வோட்டு போட வேண்டும்.

நீங்கள் ஒரு நக்சலைடாக இருக்க கூடாது, என் என்றால், என்னை பொறுத்தவரை தனி மனித உரிமைகள்தான் எல்லாவற்றிலும் முக்கியமானது , கம்யுனிசத்தில் அதற்கான உத்தரவாதம் மிகவும் குறைவு, நீங்கள் சொல்லும் நக்சல்பாரிகள் ஆட்சி செய்தால் charuonline-இல் நீங்கள் எழுதுவதை கூட எழுத முடியுமா என்பதே சந்தேகம்தான்.

ஆகையால் 49-O பற்றி ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுங்கள் தயவு செய்து ignore செய்துவிடாதீர்கள். அதே போல் அதை விட மேலான ஒரு tool இருந்தால் அதனை பற்றி எழுதுங்கள், இதனால் மாற்றம் வந்துவிடுமா என்பதை பற்றியெல்லாம் நினைக்காமல் எழுதுங்கள்.ஏன் என்றால் எந்த நிலையிலும் நம்பிக்கையை கைவிடக்கூடாது, போராட்டத்தை கைவிட கூடாது.

இந்தியாவில் உள்ள Human Rights activist-கள், RTI-activits-கள் எந்த நம்பிக்கையில் உள்ளனரோ , அதே நம்பிக்கையில் நாமும் இருப்போம்.

Thursday, 22 January 2009

அன்புள்ள சாருவிற்கு

அன்புள்ள சாருவிற்கு,

நீங்கள் சங்கமம் விழாவில் என்னை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் தந்தை பெரியாரை பற்றி பேசி உள்ளீர்கள்.. சங்கமம் விழாவில் கனிமொழி முன்னிலையில் (அல்லது கனிமொழி இல்லாமலும்) நீங்கள் வேளுக்குடி பற்றியோ பாலோ கோய்லோ அல்லது நிகோஸ் கசான்சாகிஸ் பற்றி அல்லவா பேசி இருக்க வேண்டும்.! சூபிக்கள் பற்றிய புத்தகங்களை அல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

சங்கமம் விழாவில் பெரியார் பற்றி பேசியது "கொல்லன் பட்டறையில் ஊசி விற்ற கதையாக " ஆகிவிடும் அல்லவா?

இப்படிக்கு
தங்கள் வாசகன்

Wednesday, 7 January 2009

கமல் நிகழ மறுத்த அற்புதம்.. தோன்றியவை..

வாசு,

உன்னுடைய கோபம் தெரிகிறது..ஆனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால்..

1. கமலை சாரு தன் நெருங்கிய சகாவாகவே கருதுகிறார்.கமலை ஸஹஃருதய்ராகவே பாவிக்கிறார். கொள்கையிலும், வாழ்வியல் கொள்கைகளை தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிக்கும் சில பிரபலங்களில் கமழும் ஒருவர் என்பது எல்லோரும் / சாருவும் அறிந்த உண்மை. சாரு இதுவரை விஜயகாந்த் / சரத்குமார் / சத்யராஜ் போன்றவர்களை பற்றி 2 - 3 வரிகளுக்கு மேல் எழுதுவதே இல்லை. Chaaru is just ignoring them. மற்ற நடிகர்களை பற்றி சாரு கவலை படவே இல்லை.

2. சாருவின் ரசிகத்தன்மையே அக்கட்டுரையில் பிரதிபலிக்கிறது.

3. விருமாண்டி "பருத்தி வீரனின்" தோல்வி அடைந்த version என்றே சாரு கூறுகிறார். இருக்கட்டுமே , விருமாண்டி கமலின் பலப்பல அவதாரங்களில் ஒன்று. அந்த அவதாரத்தில் அவர் வெற்றி அடைய வில்லை. ஆமிர்

4. எனக்கு தெரிந்த வரை சாரு சொல்லுவது
1. "கமல் ஒரு சிறந்த நடிகர்"
2."ஆமிர் , பாலா, சுப்பிரமணியபுரம் சசிகுமார்" போன்றவர்கள் சிறந்த இயக்குனர்கள்.
3. கமல் இந்த இயக்குனர்கள் படங்களில் நடிக்க வேண்டும்.

மேற்கூறிய மூன்று வரிகளை சாரு ரஜினிகாந்த், விஜயகாந்த், முரளி, அஜித், விஜய் ,பிரசாந்த், அருண் பாண்டியன், j.k.ரித்தீஷ், பிரபு போன்றவர்களை நோக்கி சொல்ல முடியாது என்பதால் அவர் கமலுக்கு ' மட்டும் ' சொல்கிறார்.

Thursday, 10 April 2008

சுஜாதா பற்றி சாரு நிவேதிதா

சுஜாதா பற்றி சாருவின் கட்டுரை

இந்த கட்டுரையை நான் சாருவிடமிருந்து எதிர்பார்த்தேன்/எதிர்ப்பார்க்கவில்லை.ஆம் இரண்டும்தான்.

எனக்கு எட்டிய வரை சாரு சுஜாதாவுடன் உடன்படுவார் என்றே எண்ணவில்லை. ஏன் என்றால் சாரு விளிம்பு நிலை மனிதர்களை பற்றி எழுதவேண்டும் எனச் சொல்பவர், ஆனால் சுஜாதா விளிம்பு நிலை வாழ்க்கை பற்றி எழுதாதவர், அப்படியே எழுதினாலும் ஒரு அதிகாரி தன் பியுனின் வாழ்வை சில நொடிகள் நினைப்பதை போலவே எழுதுவார்,எனவே சாரு சுஜாதாவை தாக்குவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து இருந்தேன்.

சாரு ஏமாற்றி விட்டார். ஆனால் ஒரு விசேஷம் பாருங்கள், சுஜாதா என்ற magnet எல்லோரையும் தன்பால் இழுத்து கொள்ளும், சாரு போன்றவர்களே
மாட்டும்போழுது, என்னை போன்ற சாதாரண வாசகனா மாட்டாமல் விடுவான்?, நானும் சுஜாதா புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க மாட்டேன்.அதனால் சுஜாதா பற்றி சாரு எழுதியதும் எனக்கு இருந்த முக்கியமான அலுவலக வேலையை விட்டு விட்டு இதை படிக்க தொடங்கினேன்.


இதை படிக்கும்போது 'பாலோடு தேன் கலந்தாற்போல' என்று டயலாக் விட்டால் நான் சுஜாதா மற்றும் சாருவின் வாசகன் என்ற தகுதியை இழக்கிறேன்.

சாருவின் இந்த கட்டுரையை படிக்கும்போது நான் அடைந்த உணர்ச்சியை விவரித்தால் அதற்கு பெயர் ecstasy. ஏறக்குறைய "அம்மாவிடம்" பேசிய அ.தி.மு.க தொண்டனின் மனநிலையில் இருந்தேன்.ஒரு புரட்சியாளன் ஒரு சாம்ராஜ்யதிபதிக்கு கொடுத்த மரியாதையாக இதை என்னால் பார்க்க முடிகிறது (Gokul...control yourself).

சுஜாதாவின் "multi facet personality" நம் எல்லோருக்கும் தெரியும், ஆனால் சாருவின் area-விலும் நுழைந்து இருக்கிறார் என்று தெரியாது.

ஆனாலும் சாரு சுஜாதாவின் ஆணாதிக்க எழுத்தை பற்றி குறிப்பிடாதது எனக்கு வருத்தமே.
மற்றபடி அமெரிக்க பீட் எழுத்தாளரை சுஜாதா குறிப்பிட்டதும் அதை சாருவும் ரசித்து இருப்பதும், என்னை பொறுத்தவரை "சித்தப்பாவும் தாத்தாவும் ஏதோ சீரியசா பேசிட்டு இருக்காங்க, அதனால அந்த ரூம் பக்கமா போய் விளையாடுவோம், எதுனா காதில விழுந்தா friends கிட்ட பேசும்போது உதவும்" மன நிலையையே அடைகிறேன.்


ஒன்றை கவனிக்க வேண்டும் ஜெயமோகனும் சரி , சாரு நிவேதிதாவும் சரி சுஜாதாவை பாராட்டி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எந்த இலக்கியவாதிகளாலும் செய்ய முடியாத சாதனை இது. ஏன் என்றால் சாரு நிவேதிதாவின் எழுத்தின் மூலம் வேறு , ஜெயமோகனின் எழுத்தின் மூலம் வேறு என்று சாருவே சொல்லி இருக்கிறார். இருவரும் சேர்ந்து பாராட்டி இருக்கிறார்கள் என்றால், ஏறக்குறைய சாருவின் வார்த்தையில் சொல்வதானால் "நகுலன் பள்ளியும்", "சுந்தர ராமசாமி பள்ளியும்" சேர்ந்து பாராட்டியதற்கு சமம்.இதன் வரிசையில் இன்னொருவருக்கு
பாராட்டு என்பது கி.பி. 2080-க்கு பிறகே சாத்தியம் என்று தோன்றுகிறது.


இது ஒரு நம்ப முடியாத சாதனை.ஆங்கிலத்தில் சொல்வதனால் Astounding feat என்று சொல்லலாம்.

ஒரு மனிதன் அதி தீவிர காம்ரேடுககளை தவிர்த்து மற்ற எல்லோரையும் கவர்ந்து இருக்கிறார்.

நிறைவாழ்வு - வேறு ஏதும் சொல்வதற்கு இல்லை.

சாருவின் கட்டுரைக்கு வருவோம்.

நான் charuonline படிக்க ஆரம்பித்தது 2004 என்று ஞாபகம். அன்று பார்த்த சாருவிற்கும் இன்று பார்த்த சாருவிற்கும் வித்தியாசம் ஏராளம்.

வைணவ இலக்கியம், வேளுக்குடி கிருஷ்ணன்,உபன்யாசம்,மாதவ பெருமாள்-sir , நான் உங்கள் வாசகன், இன்னொரு பாலகுமாரன் ஆகிவிடுவிர்களோ என பயமாய் இருக்கிறது.(நீங்களோ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று சொல்கிறீர்கள், உங்கள் பயம் உங்களுக்கு எங்கள் பயம் எங்களுக்கு!).இங்கே ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும், அது சாருவின் நேர்மை! பொதுவாக நாத்திகத்தில் இருந்து ஆத்திகத்திற்கு மாறியவர்கள் அதை வெளியே சொல்ல வெட்கபடுவர்கள் ஆனால் சாரு தன் மனதிற்கு உண்மையாக அதனை ஒத்துகொள்கிறார், இதை பாராட்டியே ஆக வேண்டும்.

இதில் சாரு சுஜாதாவின் "காந்தளூர் வசந்த குமாரன் கதை" பற்றி சொல்லி இருக்கிறார். எனக்கென்னவோ அது மிகச்சிறந்த சரித்திர கதையாக தெரியவில்லை, சுஜாதாவின் கணேஷ் கணேச பட்டராகவும் வசந்த் வசந்த குமாரனாகவும் வேறு ஒரு தளத்தில் வந்து இருந்தார்கள், அவ்வளவுதான்.

அதே போல் சுஜாதா அக்காலத்தில் சினிமா பற்றி எழுதியதை சாரு மிக அற்புதமாக மேற்கோளிட்டு இருக்கிறார் அவருக்கே உரிய ஸ்டைலில்.

சாரு என்றாலே எனக்கு நினைவிற்கு வரும் சொல் "எதிர் கலாச்சாரம்". charuonline-ல் முதலில் நான் படித்த மது வகைகள்,வாத்து கறி,குரங்கு கறி, தாய்லாந்து பெண்களின் யோனி, கஞ்சா, மலம், மலத்தை கழிக்க படும் சிரமங்கள், மலத்தின் நாற்றம், வியர்வை மற்றும் விந்து (Ref: மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்!), செக்ஸ் (X-இடம் sex - கிணற்றில் பக்கெட் போட்ட மாதிரி!) கலந்த எழுத்து,சாருவை மற்றவரிடமிருந்து வித்தியாசப்பட வைத்தது/வைக்கிறது.

ஆனால் அவரது சமீபத்திய ஆன்மிக போக்கு அவரது எதிர் கலாச்சாரத்தையே மாற்றுகிறது. ஒரு வேளை, தமிழகத்தில் தி.க பிரச்சாரம் செய்த எதிர் கலாச்சாரமே, மக்களின் கலாச்சாரமாகி போய், அதனை எதிர்த்து எதிருக்கு எதிர் கலாச்சாரம் என்று சாரு ஆன்மிகத்தில் மூழ்கிவிட்டாரோ என்று எண்ண தோன்றுகிறது (இதுவும் சாருவிடம் இருந்து கற்றதுதான்). இதனை சாரு படித்தால் குழந்தைத்தனமான பேச்சு என்று கூட சொல்வார், ஒரு ரசிகனுக்கு
தோன்றியதை சொல்ல கூடாதா சார்?


இதற்கு அவரது private life-ல் நேர்ந்த சில சம்பவங்களும் காரணமாக இருக்கலாம், எனக்கு தெரியவில்லை.

மொத்தத்தில் சுஜாதா பற்றிய சாருவின் கட்டுரை மிக நீண்ட காலம் நினைவில் நிற்கும்.

ஏன் எனில் சுஜாதா ஒரு mammooth figure , அவரின் தமிழ் இலக்கிய அறிவைப்பற்றி பல பேர் எழுதி விட்டார்கள், அவரின் மேற்கத்திய படைப்புக்கள் பற்றிய புலமையும் ஆளுமையும் பற்றி எவருமே எழுதவில்லை , காரணம் simple யாருக்கும் அதைப்பற்றி தெரியாது, இந்த சூழ்நிலையில் சாரு போன்ற ஒருவர் சுஜாதாவின் நன்றாக அறியாத முகத்தை விளக்கி எழுதி இருக்கிறார். செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய மனிதருக்கு செய்ய வேண்டியவர் செய்த மரியாதை. நன்றி என்பது ஒரு சிறு சொல்.