முன்னுரை:
குமுதத்தில் முன்பெல்லாம் ஒரு பக்க கதை என்று வெளிவரும். இப்போது வருகிறதா என்று தெரியாது. இது அந்த வகை முயற்சி.
இப்படி ஒரு பேரழகியை கைப்பிடிப்போம் என்று கார்த்திக் நினைக்கவே இல்லை. "ஏன்டா, ஐ.டி கம்பெனில வேலை செய்யற பசங்க எல்லாம் என்னமா பிகர் கரெக்ட் பண்றாங்க, நீ ஏன் இப்படி தத்தியா இருக்க" என்று ஸ்வேதா சகட்டுமேனிக்கு கிண்டல் செய்வாள். ஸ்வேதா அவன் தங்கை. இந்த நிமிடம் அவளை பார்த்து "எப்படி பிடிச்சேன் பாத்தியா?" என்று கேட்கத் தோன்றியது. ஆனால், யாரோ "நாழியாச்சு நாழியாச்சு" என்று கத்திக்கொண்டே இருந்தார்கள். குரலின் சொந்தக்காரரை தேட விழைய, அம்மா எதிரே வந்தாள். "ஆபீஸ் போக வேண்டாம், நாழியாச்சு எழுந்திருடா" என்றாள்.
இன்னிக்கு என்ன ஆபீஸ்மா என்று கைவீசி அவளிடம் சொல்ல, அருகில் இருந்த மடிக்கணினி மீது கைபட்டு அது Hibernate நிலையில் இருந்து உயிர்ப்பெற்று முனகியது. அடச்சே, அத்தனையும் கனவு. ஐயோ, கேளம்பாக்கம் செல்லும் எட்டு மணி 19B ஏ.சி பேருந்தை பிடிக்க வேண்டுமே, மணி என்னவோ என்றெண்ணி கைபேசியை எடுக்க வால்பேப்பர் அசின் சிரித்துக்கொண்டே ஏழேகால் என்றாள். இந்த பேருந்தை விட்டால் அவ்வளவுதான், மத்ய கைலாஷ் ஆரம்பித்து சோளிங்கநல்லூர் வரை டிராபிக் இருக்கும் என்ற நினைப்பே கவலை தர, கனவில் வந்த அழகியின் முகத்தை மீண்டும் நினைவு கொண்டு வர யத்தனித்தபடி கார்த்திக் தன் காலையை துவங்கினான்.
ஒரு வழியாக கார்த்திக் தி.நகர் டெர்மினஸ் வரவும் பேருந்தை ஓட்டுனர் அங்கிருந்து வெளியே எடுத்து வரவும் சரியாக இருந்தது. உள்ளே இரண்டொரு இருக்கை காலியாக இருக்க, ஒன்றில் தன்னை பொருத்திக் கொண்டான். பேருந்து சைதை தாண்டி மத்ய கைலாஷை அடைந்தது. நின்று கொண்டிருந்த ஓரிருவர் அங்கு இடம் கிடைத்து அமர, தன் இருக்கைக்கு நாலைந்து வரிசை முன் அவனை நோக்கி உட்கார்ந்தபடி இருந்த அந்த பெண்ணின் முகம் தெரிந்தது.கல்லூரி மாணவி போல் இருந்தாள். ஜன்னலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கனவில் பார்த்த பெண் போல் அசரடிக்கும் அழகில்லை என்றாலும் நன்றாகவே இருந்தாள். அவள் குணாதிசயங்கள் பல இவளுக்கு பொருந்துவது போல் கார்த்திக்கிற்கு தோன்றியது.
மயில் பச்சை நிற சுடிதார், அழகான கழுத்தில் ஒரு ஒற்றைச் செயின், ஐ-லைனர் உபயத்தில் நெற்றியில் இருந்த பாம்பு வடிவ பொட்டு என்று அனைத்தும் அவனுக்கு பிடித்த விஷயங்கள். ஆள் ஆர்வமே இல்லாத ஒரு ஏரி அருகில் மெல்லிய மழை சாரல் வீசும் மாலையில் அவளுடன் நடப்பது போல் மனக் காமிராவை ஓட்டத் துவங்கினான். "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்று யேசுதாசின் குரல் கேட்டது.
ஜன்னல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தவள் பேருந்திற்குள் பார்வையை துழாவி கார்த்திக்கிடம் நிறுத்தினாள். அவள் தன்னை பார்த்து புன்னகைப்பது போல் பட்டது கார்த்திக்கிற்கு. கற்பனையை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு மீண்டும் அவளை பார்க்க, அட, நிஜம் தான். நம்மை பார்த்து தான் சிரிக்கிறாள். பேருந்து சிறுசேரியை நெருங்கிக் கொண்டிருந்தது. கார்த்திக் இறங்க ஆயுத்தமானான். மயில் பச்சை சுடிதாரும் இறங்க தயாராவதை கண்டான். அவள் இறங்கியவுடன் அவளிடம் சென்று ஏன் தன்னை பார்த்து சிரித்தாள் என்று கேட்க வேண்டும். இங்கே எங்கு படிக்கிறாள் அல்லது பணி செய்கிறாள் என்று தெரிந்தால் பேசி பழக வசதியாய் இருக்கும்.
இவனை தொடர்ந்து அவளும் இறங்கினாள். அவளே முன்னே வந்து, "நீங்க கார்த்திக் தானே? என்றாள். தொடர்ந்து, "என்ன அண்ணா பார்கறீங்க? நான் ஸ்வேதா பிரண்டு காயத்ரி. உங்க வீட்டுக்கு கூட வந்திருக்கேனே. ஸ்வேதா எப்படி இருக்கா? ரொம்ப நாள் ஆச்சுண்ணா அவளோட பேசி. எனக்கு இங்க ஜாப் கிடைச்சு இருக்கு. இன்னிக்கு தான் ஜாயின் பண்றேன். வீட்ல ஆன்ட்டி, அங்கிள் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்கண்ணா" என்று பொரிந்து விட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டாள். கார்த்திக் காதில் "அண்ணா" என்ற வார்த்தை மட்டும் வெகு நேரம் கேட்டுக் கொண்டிருந்தது.
9 comments:
எனகென்னவோ இது ஒரு Post modernist Auto fiction அப்படின்னு தோணுது ..சென்னையிலேயே ரெண்டு பேருதான் இப்படி எழுதறாங்க ..
-கோகுல்
Gokul,
Onakku endha vishayama irundhalum andha aala kondu varama irukka mudiyala..
உண்மையிலேயே கதை நல்ல இருந்துச்சு .. ஆனா இப்பவும் சொல்றேன் இது ஒரு Auto-fiction எப்படின்னா இது ஒரு சுய சரிதை மாதிரி இருக்குது ..பஸ் ரூட் எல்லாம் கொஞ்சம் 'இந்த காலத்துக்கு' எத்த மாதிரி மாறி இருக்குது ..அப்பா கேரக்டர் அம்மா காரெக்டரா மாறி இருக்குது ..Thats all your honour..
Nala kadhai Vasu. Indha ponnunga eppovumae ipdi dhan "Anna" nu kuptu pavam pasanga manasa suku noora odachadranga.
oru pakka kadhai kumudham la eppo varadhila... romba varusham kazhichu, oru varam munnadi oru kumudham book eduthu puratinaen, mudhala thaedinadhu endha oru pakka kadhai thaan... missing...
ippo unga kadhaiku varuvom... romba romba azhaga irukku style, delivery, concept and kutti suspense at the end of the story... oru varthai la sollanum na "அமரிக்கை" you should write more stories, it comes to you easily...
Krithi,
"Anna" word maximum neenga dhaan Aspire la use panreenga.. :)
Viji,
Thanks. Naan enna yezhudhinaalum neenga nalla irukku nu solreenga..bayama irukku..:)
I comment posts which I like.. :) adhaan vishayam....inimael ellathukum comment panraen :P
ஒரு பக்கக் கதை நன்று. அடுத்த ஒரு பக்கக் கதையிலாவது காதலர் தினத்துக்குள்ள ஒரு காதலிய செட் பண்ணுங்க
Post a Comment