"சல்மான் ருஷ்டி அவ்வளவு பெரிய எழுத்தாளர் எல்லாம் இல்லை, He is a poor and substandard writer, தேம்ஸ் நதிக்கரையில் வசிப்பதால் இந்த புகழ் அவருக்கு" என்று கூறியிருக்கிறார் முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதியும் இந்நாள் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு.ருஷ்டியின் புத்தகங்களை தான் படித்துள்ளதாகவும் அவற்றின் தரம் மிகக் குறைவே என்று குறிப்பிட்டுள்ள அவர், The Satanic Verses புத்தகம் பிரபலம் அடைந்திருக்கவிட்டால் ருஷ்டி பற்றி யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், படித்த இந்தியர்கள் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய எழுத்தாளர்களே சிறந்தவர்கள் என்று நினைக்கும் தாழ்வு மனப்பான்மையால் வரும் நிலை இது என்று குற்றம் சாட்டியுள்ளார்
ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவை கடுமையாக சாடியுள்ள அவர் கபீர், காலிப், பிரேம்சந்த், ஷரத் சந்திரா போன்றோர் குறித்து பேசப்படவேண்டிய விழா "இரண்டு சினிமா பாடலாசிரியர்களை (குல்சார் மற்றும் ஜாவேத் அக்தர்) இந்தியாவின் சிறந்த இலக்கியவாதிகள் போல சித்தரித்திருப்பது ஜெய்பூர் இலக்கிய விழாவின் தரத்தை காட்டுகிறது என்று கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை அவர்களின் ஆக்கங்கள் கீழ்த் தரமானவை என்று கூறி முடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன் இதே கட்ஜு, "பாரதி போன்ற கவிஞர்களுக்கு தரப்பட வேண்டிய பாரத ரத்னா விருது கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு வழங்க பட வேண்டும் என்கிற அவல நிலையில் இந்த தேசம் உள்ளது" என்று கூறியிருந்தார்.
இதைப் பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை. ஆனால், கட்ஜு அவர்களின் சில முடிவுகள் எனக்கு உவப்பானவையே. உதாரணமாக Euthanasia எனப்படும் கருணைக் கொலையை சென்ற வருடம் சட்டமாக்கினார் கட்ஜு.அவர் சொல்பவை சரியே என்று நம்புவோமாக.
2 comments:
ஹன்ட்ரட் பர்சென்ட் நீங்க சொல்றது ரைட் அப்படித்தான் தோன்றது.
வேணுமின்னே ஒரு கான்ட்ரவர்ஸியை கிளப்பி விட்டுட்டா , அது புத்தகமோ சினிமா படமோ பாடலோ
ஏகத்துக்கு விக்கறது, விக்கும் அப்படிங்க்ர பிலீஃப் ல பல சனங்க இருக்காக.
அதுக்காகவே எழுதவும் செய்யராக அப்படின்னும் தோண்ரது.
சுப்பு தாத்தா.
http://Sury-healthiswealth.blogspot.com
இந்தியாவின் 90% மக்கள் முட்டாள்கள் என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் கட்ஜு. அதற்காக அவர் மீது இரண்டு இந்திய இளைஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Post a Comment