Sunday, 24 June 2012
சாரு என்ற கழுகார்
சற்று நாளைக்கு முன் சாரு தன் வலைத்தளத்தில் அராத்து எழுதிய அமெரிக்காவில் கழுகார் படித்தேன். வழக்கப்படி அராத்து சூப்பர்.
இப்போ சாரு சென்னையிலேயே கழுகாராக வேலை பார்த்தால் எப்படி இருக்கும் ..பார்க்கலாமா ...
" கழுகாருக்காக அரை மணி நேரமாக காத்திருந்தோம், பொறுமை இழக்கும் நேரத்தில் சோர்வாக பறந்து வந்தார். பொதுவாக மிகவும் புத்திளமை உணர்ச்சியோடு வருபவர் , இப்போது களைத்திருப்பதை கண்டு மனம் திக் என்று ஆனது , என்ன விஷயம் என்று மெதுவாக கேட்டோம், அவ்வளவுதான் பொரிய தொடங்கினார்!
உங்களுக்கு கொஞ்சமாவது சூடு சுரணை இருக்கா, ஒரு கழுகை நடத்தும் விதமா இது என்ற கேள்வியோடு ஆரம்பித்தார். நாம் ஒன்றும் தோன்றாமல் பார்க்க , சுமார் ஆறு கிலோமீட்டர் பறந்து வந்து இருக்கிறேன், இந்த சனியன் பிடித்த சென்னை வெய்யிலில் ரோட்டில் நடப்பதே கஷ்டம் எனும்போது வானில் பறப்பது எவ்வளவு கடினம் என்று உங்களுக்கு தெரியாதா என்றவரை கூல் படுத்த ஜில்லென்ற ஐஸ் மோரை நீட்டினோம். ஒரு மடக்கு குடித்தவர் , கண்களில் கோபத்தின் தீப்பொறிகள் ..இது எங்கே வாங்கியது என்று கேட்க பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் பெயரை சொன்னோம், அவ்வளவுதான் அந்த ஜூஸ் கடை மட்டுமில்லாமல் , சென்னையில் எந்த எந்த ஜூஸ் கடைகளில் மட்டமான ஐஸ் மோர் கிடைக்கும் என்று லெச்சரே குடுத்து விட்டார். அது மட்டுமில்லாமல் மைலாப்பூரில் உள்ள லே இடலி (இட்லி அல்ல ) அல்லது ஜூஸ் ஷாப் அட் கிரீம்ஸ் ரோடு (இது கிரீம்ஸ் ரோட்டில் ஆரம்பித்தது , ஆனால் சென்னையில் பல்வேறு இடங்களில் இருக்கிறது, எல்லா இடங்களிலும் இதே பெயர்தான், இதே போல் வடக்கு அல்ஜீரியாவில் உள்ள ஷக்சோக (ShakShouka ) என்ற பணியாரம் விற்கும் கடையும் ஒரே இடத்தின் பெயரை பல்வேறு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள்) போன்ற இடங்களில்தான் உண்மையான ஐஸ் மோர் கிடைக்கிறது என்றும் பொரிந்தார்.
தலையை தொங்க போட்ட நாம், சரி கூலான ஐஸ் மோர் வேண்டாம் , சூடான அரசியல் செய்திகளுக்கு செல்வோமே என்று நாம் நினைவுபடுத்த , "போடா பெஹன் சூத்" என்று கர்ஜித்தார், விதிர்விதிர்த்து போய் நின்ற நம் அருகில் இருந்த இளம் நிருபரை ஆசுவாசபடுத்தி உட்காரபடுத்தி காரணம் கேட்டோம், நான் எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து அரசியல் செய்திகளை சொல்லி இருக்கிறேன் , இது வரை எந்த வாரமாவது அரசியல் செய்தி இல்லாமல் , என்னுடைய இரை பற்றியோ , இறைக்கைகள் பற்றியோ , நிறத்தை பற்றியோ யாருக்கும் கவலை இல்லை , ஒரு கழுகு எவ்வளவு நாள்தான் இந்த சனியன் பிடித்த தமிழக அரசியலை பற்றி சொல்வது , வேறு ஏதாவது கேள் என்றார். நாம் இதுவரை கழுகாரிடம் தமிழக அரசியல் தவிர வேறெதுவும் கேட்டதில்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் "ங்கே " என்று விழித்தோம்.
சற்று கூலாகி அவரே சொல்ல தொடங்கினார் இதோ பாருங்கள் இனிமேல் நான் மூன்று விஷயங்களை பற்றிதான் பேசப்போகிறேன் செக்ஸ்,ருசியான உணவு வகைகள், பிற நாட்டு சரக்குகள் , இவை மூன்றும் போரடிக்கும்போது நடுவே என் சோகங்களை சொல்வேன், என் சோகங்கள் போரடிக்கும்போது எனது 'கழுகு ரசிகர் மன்றத்தினர் என்னுடைய அகல உயர நீளத்தினை பற்றி சொல்லுவார்கள், இவையெல்லாம் போக நேரமிருந்தால் அரசியல் பற்றி சொல்லுவேன் என்றார்.
கழுகின் திடீர் மாற்றத்தினை சற்றும் எதிர்பாராத நாம் அடுத்து என்ன கேட்பது என்று யோசிக்கும் வேளையில் , கழுகார் நான் தென்னமெரிக்கா போக வேண்டும் டிக்கெட் போடு என்றார், நாம் புரியாமல் விழிக்க , எவ்வளவு நாள் தான் நான் தமிழ அரசியல் கிசுகிசுக்களை சொல்வது, நான் அடுத்து பறக்க போவது பொலிவிய தலைமை செயலகம் அருகில், அங்கிருந்தே நான் உங்களுக்கு அந்நாட்டு அரசியல் கிசுகிசுக்களை fax செய்கிறேன் என்று சொல்லி புயல் வேகத்தில் அங்கே இருந்த மோரை காலி செய்து விட்டு பறந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Most hilarious...
Continue your work
Hi Temple Jersey,
Thanks! :-)
-Gokul
Very Nice gokul..
Loved it..I think you were running out of time..Otherwise, indha maadhiri topic ku ivvlo chinna posta podu va nee..:)
Thanks Vasu,
In a way, yes :-)
-Gokul
Thanks Partha...
Post a Comment