இதை அனுராக் நம்ம மீடியா மக்கள் கிட்ட சொல்ல, இப்போ இது தான் ஹாட் நியூஸ். கமல் இதுக்கு நன்றி சொல்லி, "நான் அந்த காமிக்க ஆளவந்தான்ல அறிமுகப்படுத்தினப்போ இந்தியால வரவேற்பு இல்லை. ஆனா, இப்போ உலகப் புகழ் பெற்ற இயக்குனர் ஒருத்தர் இப்படி சொல்றது சந்தோஷமா இருக்கு" அப்படின்னு சொல்லியிருக்காரு.
என்னோட சந்தேகம் என்ன அப்படின, ரெண்டு நாள் முன்னாடி தான் சாரு அனுராக் கஷ்யப் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பினாரு அப்படின்னு தன் வலைமனைல சொல்லியிருந்தாரு. ஒரு வேளை இதை தான் அனுராக் கஷ்யப் அனுப்பி வச்சாரோ? அடுத்த பதிவு என்னவா இருக்கும் சாரு வலைதளத்துல அப்படின்னு நினைச்சா இப்போவே த்ரில்லிங்கா இருக்கு. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்படி எழுதுவாரு..
"Quentin Tarantino இயக்கிய படங்களுக்கும் கமல்ஹாசன் இயக்கம் படங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. "குஜ்லிக்கா ஒக்கமக்க", "மட்டேரிக்க மக்கரோனி" போன்ற பிரெஞ்சு இயக்குனர் படங்களை Quentin Tarantino பார்த்ததில்லை. பார்த்தா, படம் எப்படி எடுக்கறதுன்னு கத்துகிட்டிருப்பாரு.உலகநாயகன் பட்டத்தை கமல்ஹாசன் உதறாத வரைக்கும் இந்த மாதிரி வீணாப்போன இயக்குனர்கள் புகழ்ந்துட்டு தான் இருப்பாங்க.."
2 comments:
"குஜ்லிக்கா ஒக்கமக்க", "மட்டேரிக்க மக்கரோனி"-
அப்படின்னு சொன்ன உடனே ஞாபகம் வருது , நான் இந்த படங்களை திருவனந்தபுரம் பிலிம் பெஸ்டிவலில் பார்த்து இருக்கிறேன், இரண்டுமே கிளாசிக், குறிப்பாக குஜ்லிக்கா ஒக்கமக்க படத்தின் பின்னணி இசை ஒரு பொக்கிஷம் , அதில் கதாநாயகன் (அப்டிகா போடு என்ற இத்தாலிய நடிகர்) நாயகியை கட்டிபிடிக்கும்போது , வரும் பியானோ இசைக்கு உயிரையே தரலாம்.
மற்றபடி இந்த படங்கள் பற்றி தமிழில் வேறு யாரும் விவாதிக்கவில்லை , இப்போது அந்த குறை தீர்ந்தது..
LOL :-))
Post a Comment