Showing posts with label தசாவதாரம். Show all posts
Showing posts with label தசாவதாரம். Show all posts

Saturday, 12 July 2008

தசாவதாரத்தின் கதை

தசாவதாரத்தின் கதை புரியவில்லை என்று பல பேர் சொல்கிறார்கள், எனவே அவர்களுக்காகவும் அப்படி சொல்லாத மற்றவர்காகவும் தசாவதாரத்தின் climax மட்டும் இங்கே கதையாக தருகிறேன், அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்,

கமல் அந்த பயோ ஆயுதத்தை எடுத்து கொண்டு கடலில் போட முயற்சிக்கும்போது கமல் வந்துவிடுகிறார்.அந்த ஆயுதத்தை எடுத்து போக கமல் முயற்சிக்கும்போது அதை கமலால் தடுக்க முடியவில்லை இந்த நிலையில் தன் தங்கையை கொன்றவர் கமலில்லை என்ற உண்மை கமலுக்கு தெரிய கமலும் அங்கு வருகிறார், உடனே கமலுக்கும் கமலுக்கும் சண்டை ஆரம்பிக்கிறது கமல் "you know hiroshima?" என்று கேட்க அதற்க்கு கமல் "you know pearl harbour?" என்று கேட்கிறார், இருவருக்கும் சண்டை மூள்கிறது அதை கமல் வேடிக்கை பார்க்கிறார். அப்போது ஹெலிகாப்டரில் கமல் வருகிறார் அவர் சண்டை போடும் கமலிடம் சரணடைந்து விடுமாறு கேட்கிறார் , அதை கவனிக்காது சண்டை போடும் கமலுக்கு கமல் எச்சரிக்கை விடுக்கிறார்.

அப்போது கமல் சண்டையில் ஜெயித்து விடுகிறார்.தோற்றுப்போன கமல் அந்த vial-இல் இருக்கும் மருந்தை குடித்து விடுகிறார், அதனை கமல் கமல் மற்றும் கமல் ஆகியோர் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர், கமலின் முகம் அழுக தொடங்குகிறது , அப்போது சுனாமி வர கமலும் கமலும் பயந்து ஒரு படகுக்குள் ஏறி விடுகின்றனர், கமல் ஹெலிகாப்டரில் தப்பித்து செல்கிறார்,கமல் மேல் இந்தியக்கொடி இறங்கி கமல் இறந்து விடுகிறார்,


இதற்கிடையே குழந்தைகளை காப்பற்றும் கமல் சுனாமியில் இறந்து விடுகிறார், அதனை பார்த்து கமல் அழுகிறார், அதனை கமல் வேதனை போங்க பார்க்கிறார்.

இவ்வளுவுதாங்க climax. முழு படத்தோட கதையை கூடிய சீக்கிரம் சொல்றேன். bye bye...

Wednesday, 25 June 2008

தசாவதாரம் - கடைசி விமர்சனம்

ஏற்கனவே பல விமர்சனங்கள் வந்த நிலையில் இந்த விமர்சனம் மிக மிக தாமதம் என்று தெரிகிறது, அதற்காகவே இந்த title!

படம் வருவதற்கு முன்பே படத்தை பற்றி சொல்லி 'கமல் ரசிகர்களிடம்' இருந்து சில கமெண்டுகளை பெற்று கொண்டேன்.படத்தை பார்த்தேன்.
ஆனால் விமர்சனம் எழுத முடியவில்லை.இந்த கட்டுரை படத்தின் கதையையோ கமலின் மேக்கப் பற்றியோ அல்ல.குறிப்பாக கமலின் நடிப்பை
பற்றியே அல்ல, நெட்டில் வந்த நூற்றுக்கணக்கான விமர்சனங்களில் கமலின் நடிப்பை பற்றியே பல பேர் சொல்லவில்லை, எனக்கும் சொல்வதற்கு
வார்த்தை இல்லை.


தசாவதாரம் நிச்சயம் "ஆளவந்தான்" அல்ல, அதே சமயம் "மைக்கேல் மதன காம ராஜனும்" அல்ல.

'palimpsest' என்ற உத்தியை கேள்விப்பட்டு இருப்பீர்கள், (அதாவது பேப்பரிலோ அல்லது தோலிலோ எழுதி பின்பு எழுதியதை முழுவதுமாக அழிக்காமலே அதன் மேலேயே எழுதுவது) அதைப்போல இந்த படம் பல பரிணாமங்களை கொண்டு இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் சில படிவங்களை கொண்டு இருக்கிறது.உரித்து பார்க்க வேண்டும் (நிச்சயம் இது வெங்காயம் அல்ல).

சில வருடங்களுக்கு முன்பு k.s.ரவிக்குமார் ஒரு பேட்டியில் சொன்னார் "வேலைக்கு போகாத அல்லது உடலுழைப்பை மட்டுமே கொண்ட வேலைக்கு போகும் lower middle class இளைஞர்களை குறி வைத்தே இன்று கமர்ஷியல் படங்கள் எடுக்கப்படுகின்றது" என்று.

அது உண்மை என்று பல வெற்றி படங்கள் உணர்த்துகிறது.அதாவது 'C' சென்டர் மக்களுக்காக படம் எடுத்தால் அதை 'A' சென்டர் மக்களும் காண்பார்கள் ஆனால் 'A' சென்டர் மக்களுக்காக படம் எடுத்தால் அதை ' C ' சென்டரில் பார்க்க மாட்டார்கள்.உதாரணம் "பருத்தி வீரன்".சில விதி விலக்குகள் உண்டு "காக்க காக்க" போல.

ஆனால் அதை பற்றி கவலை சிறிதும் இன்றி "chaos theory, Butterfly effect" என்று படம் ஆரம்பிக்கிறது....ஹ்ம்ம்...

மேலும் படத்தை உன்னிப்பாக கவனித்தால்தான் படத்தின் continuity தெரியும் என்று செய்து இருக்கிறார். இது நல்ல ஸ்டைலா தெரியவில்லை.

ஒரு வேகமான உடலைசைவு, முகபாவ மாற்றம், கேமரா ஆங்கிள் மாற்றம், மிகச்சிறிய வசனம் போன்றவை படத்தில் அதன் பின்வரும் சம்பவங்களை தீர்மானிக்கின்றன.ஒரு முறை பார்த்தவுடன் படத்தின் எல்லா காட்சிகளையும் correlate செய்ய முடிபவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வார்கள்.

நான் படம் பார்த்தபோது சுமார் 40-50 college students தியட்டரில் விடாமல் கத்தி கொண்டு இருந்தனர், கூடவே ஒரு குழந்தை அழுது கொண்டு இருந்தது, இதனாலா என்று தெரியவில்லை, என்னால் சில காட்சிகளை தொடர முடியவில்லை. அரங்கம் அமைதியாக இருந்தாலும் இந்த
விஷயங்களை விட்டுவிடக்கூடிய அபாயங்கள் இருக்கின்றன.


தமிழ் சினிமாவில் ஒரு english வசனத்தை உடனடியாக தமிழ்படுத்தி சொல்வது வழக்கமாக இருந்தது. Major சுந்தர்ராஜன் இதற்காகவே கிண்டல்
செய்யப்பட்டார்.ஆனால் அதற்கான காரணம் இருந்தது, அது மக்களுக்கு புரியாமல் எந்த வசனமும் இருக்க கூடாது என்பதே.பல படங்களில்
டில்லியிலும் அமெரிக்காவிலும் எல்லோரும் தமிழ் பேசும் காமெடியும் இதற்காகவே இருந்தது. இதற்காக வரும் கிண்டல்களையும் எந்த இயக்குனரும் பொருட்படுத்த மாட்டார்.


இந்த பின்புலத்தில் தசாவதாரத்தை எப்படி எடுத்துக்கொள்வது?தெரியவில்லை.
படத்தில் வயல் (vial) என்ற சொல் பலதடவை சொல்லப்பட்டு இருக்கிறது, எனக்கு அதற்கான அர்த்தம் தெரியாது, பிறகு wordweb-ல் பார்த்தபோது அது A small bottle that contains a drug என்று அர்த்தம் சொல்லப்பட்டு இருந்தது.
உப்பை NaCl என்று சொல்லி இருக்கிறார்கள்.


வாசு சொன்னது போல கமலின் உழைப்பு அசுரத்தனமாக தெரிகிறது. பல minute details வியக்க வைக்கின்றது, பல nuances ரசிக்கும்படி இருக்கிறது,

உ.தா: "உன் பேரு என்ன?" என்ற குழந்தையின் கேள்விக்கு கமலின் பதில் 'பூவராகன்'.அதற்கு குழந்தையின் comment "பன்னி (funny) நேம்".நல்ல சிலேடை. தியேட்டரில் மயான அமைதி.

பார்போம் "தசாவதாரத்திற்கு", "கந்தசாமி" என்ன பதில் சொல்ல போகிறார் என்று? ஏற்கனவே ரஜினி தாத்தா ஜால்ரா என்று ஒருவர் சொல்லி இருக்கிறார், இப்போது விக்ரமின் ஜால்ரா என்று சொல்லாதிர்கள்.கந்தசாமி வந்த பிறகு சில comparisions வரும் , அப்போது பார்க்கலாம்.

எனகென்னவோ k.s.ரவிகுமார் ஒருவரால்தான் படம் வியாபார ரீதியாக தப்பி இருக்கிறது என தோன்றுகிறது. ஒருவேளை 'பேரரசு' இயக்கி இருந்தால் இன்னும் சுவராஸ்யமாக இருந்திருக்கலாம்.

எல்லோரும் டிசைன் டிசைனாக கோலம் போட்டு கொண்டு இருக்கும்போது கமல் சுமார் 64 புள்ளி வைத்து மிகப்பெரிய 'சிக்கு' கோலம் போட்டு
இருக்கிறார். குறைகள் இருந்தாலும் பாராட்ட வேண்டும்.


Puzzled அல்லது perplexed என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் நேராக வடபழனி கமலா தியேட்டர் செல்லவும்
அங்கு தசாவதாரம் பார்த்துவிட்டு வெளி வரும் மக்களின் கண்களை பார்க்கவும், சுருங்க சொன்னால் Butterfly effect .அதாவது கண்களில்
பட்டாம்பூச்சி பறப்பது.சத்யம் தியேட்டரில் இருந்து வெளி வரும் மக்களின் கண்களில் தெரிவது ecstasy.


சென்னை தமிழ், கோவை தமிழ், நாகர்கோவில் மாவட்ட தமிழ், தெலுங்கில் தோய்த்தெடுத்த தமிழ், செந்தமிழ், திருநெல்வேலி தமிழ், வட இந்தியர்கள்
பேசும் தமிழ், பிராமண தமிழ், இலங்கை தமிழ், மதுரை தமிழ்--- கமல் இதுவரை பேசிய வட்டார வழக்குகளின் list.Amazing.


முடிவாக கமலை பற்றி என்ன சொல்ல?

ஏற்கனவே ஒருவர் சொல்லி இருக்கிறார், இந்த link-ல் வரும் கடைசி பாராவை படியுங்கள்.
http://www.geotamil.com/pathivukal/cinema_thasavathaaram_rajes_bala.htm

Monday, 14 April 2008

தசாவதாரம் - இன்னொரு ஆளவந்தான்?

கமலின் தசாவதாரம் அளவிற்கு அதிகமான விளம்பரத்தை தேட முயற்சிக்கிறது. கமல் ரஜினியின் சிவாஜியை பார்த்து சூடு போட்டுக்கொள்ள வேண்டாம் என யாரவது கமலுக்கு எடுத்து சொல்ல கூடாதா?

கமல் ஏற்கனவே ஆளவந்தானில் கெட்ட பெயர் சம்பாதித்து இருக்கிறார். கமலுக்கு உலக சினிமா அனைத்தும் தெரிந்து இருந்தாலும் கமலால் ஒரு பக்கா தமிழ் commercial படம் எடுக்கவே முடியாது, ஒரு விஜய் படம் போலவோ அல்லது ஒரு ரஜினி படம் போலவோ ஒரு விஜயகாந்த் படம் போலவோ அவரால் எடுக்கவே முடியாது (கமல் படங்கள் வித்தியாசமானவை, தரத்தில் உயர்ந்தவை என்பதெல்லாம் வேறு), எப்படி மற்றவர்களால் கமல் போல் செய்ய முடியாதோ அதே போல் கமலாலும் மற்ற ஹீரோக்களை மாதிரி செய்ய முடியாது இதுவே நிஜம்.உதாரணம் சிங்காரவேலன்,சத்யா,கலைஞன்,காதலா காதலா போன்ற படங்கள்.

கமல் மனதளவில் hollywood-ல் இருப்பதாகவே கற்பனை செய்து கொள்கிறார், serious படம் இல்லையென்றால் படம் முழுக்க நகைச்சுவை, எல்லாம் சேர்ந்த கலவையே தமிழ் commercial அதை அவர் நினைத்து கூட பார்ப்பது இல்லை.

கமல் சொந்த ஈகோவிற்காக பணத்தை செலவழிக்கிறார். கமலால் ஒரு super duper hit (சந்திரமுகி, சிவாஜி போல) கொடுக்கவே முடியாது, தசாவதாரத்தின் பட்ஜெட் அதிகரிக்க அதிகரிக்க அது தோல்வி படம் என்பது நிச்சயம் ஆகிவிடுகின்றது, அது சுமாராக ஓடினால் கூட!

ரஜினி கூட ஷங்கர் படம் என்பதாலேயே அவ்வளவு hype கொடுக்க சம்மதித்து இருப்பார்.

கமலுக்கேன்று ஒரு பாணி இருக்கின்றது, அவர் சத்தம் போடாமல் வித்தியாசம் காட்டினால்தான் சாதனை இல்லையென்றால் ஒரு திறமையான கலைஞன் தேவையே இல்லாமல் அவமான பட வேண்டியதாக இருக்கும். மற்றவரையும் பொருளாதார ரீதியாக நஷ்டமடைய வைக்கும்.தெரிந்தே தோல்வியின் அளவை அதிகரித்து கொள்ளலாமா? இன்னும் சில மாதங்கள் கழித்து oscar v.ரவிச்சந்திரன் (தசாவதாரத்தின் தயாரிப்பாளர்) பத்திரிக்கைகளில் கமல் செய்த வீண் செலவு பற்றி பேட்டி கொடுப்பார், இது தேவையா?


கமலே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் ரஜினி ஓடுவது 100 meter race , தான் ஓடுவது marathon race , எனவே compare செய்ய வேண்டாம் என்று. எனவே Marathon race ஓடும் கமல் 100 meter race-ல் கலந்து கொள்ள வேண்டாமே!

இதையும் தாண்டி தசாவதாரம் ஒரு ஹிட் படமாக ஆனால் ஒரு கமல் ரசிகன் என்ற முறையில் எனக்கு சந்தோஷமே.