திராவிட இயக்கத்தினரின் மனோ நிலையை இங்கலிஷில் "Euphoria" என்று கூறுவார்கள்.இன்று சக்தி என்பது வாள்முனையில் அல்ல பணப்பெட்டியில் உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கு சந்தை தேவைப்படுகிறது, சந்தை எவ்வளவு பெரியதோ அவ்வளவு பணம். நாம் நம்முடைய வறட்டு ஜம்பத்தால், ஒரு போதையால் கற்பனையால் இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை கோட்டையை விட்டு விட்டோம்.
நான் ஒரு சமயம் தெலுங்கு சேனலில் news பார்க்க நேரிட்டது, அங்கே சட்டசபை நிகழ்ச்சிகளை காணும் போது முதல் அமைச்சரில் இருந்து MLA வரை எல்லோரும் தெலுங்கு பேசினர் நடுவே நடுவே english-உம் இருந்தது. அது ஆந்திராவில் ஒரு சாதாரண நடுத்தர வாழ்க்கை நடுத்தும் மக்கள் பேசும் மொழியாக இருந்தது.
அதை பார்த்த போதுதான் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எவ்வளவு தூரம் சாதாரண மக்களிடம் இருந்து விலகி உள்ளனர் என்பது தெரிந்தது.
கடந்த 40-50 வருடங்களில் செய்த இடைவிடாத திராவிட பிரச்சாரத்தின் விளைவே தமிழர் கர்நாடகாவில் வாங்கும் அடி.
வினை விதைத்தவன் வினையை அறுத்தே தீர வேண்டும்.
நம் தமிழ்நாட்டில் எல்லோரும் கண்ணிருந்தும் குருடராய் காது இருந்தும் செவிடறாய் இருக்கின்றனர்.
நான் சொல்லும் கருத்துக்கள் சில பெரியோர்களுக்கு தோன்றியே இருக்கும் ஆனால் அவை வெளியே சொல்ல முடியாத அளவிற்கு இங்கே ஒரு கொடூரமான கருத்து அடக்குமுறை உள்ளது.கர்நாடகாவில் இருக்கும் பல கற்றறிந்த தமிழர்களும் இந்த கருத்தினை பிரதிபலிப்பர்.
இங்கே இருக்கும் பல தீவிர தமிழ் அபிமானிகளுக்கு தமிழ்நாட்டை இலங்கையின் யாழ்ப்பாணம் போல ஆக்குவதில் மிகுந்த விருப்பம் உள்ளது.
இதே போல இந்தியாவின் வட கிழக்கிலும் நிலைமை உள்ளது, ஆனால் வித்தியாசம் என்னவென்றால் அங்கே உள்ளவர்களின் கோபம் நியாயமானது இங்கே உள்ளவர்களின் கோபம் அநியாயமானது.
தமிழர்களுக்கு மத்திய அமைச்சரவையில் மிகுந்த இடம் உள்ளது, செல்வாக்கும் இருக்கிறது. அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு நிறைய விஷயங்களை செய்ய முடிகிறது. ஆனாலும் இவர்கள் தமிழகத்தை இந்தியாவில் இருந்து பண்பாட்டு ரீதியாக பிரிப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.
இப்போது கர்நாடகாவில் அடி வாங்கியவுடன் இந்திய ஒருமைப்பாடு பற்றியும் இந்திய இறையாண்மை பற்றியும் வாய் கிழிய பேசும் இவர்கள் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் பண்பாட்டு தளத்தில் செய்தது என்ன? தமிழ் புத்தாண்டை சித்திரையில் இருந்து தைக்கு மாற்றியதே இவர்கள் பண்பாட்டு தளத்தில் செய்த்தது.
அரசியல் தளத்தில் தனி நாடு கேட்கும் அளவிலும், நமது பாரத பிரதமரை கொலை செய்தவர்களை ஆதரிக்கும் அளவிலும் அது இருக்கிறது.
கர்நாடக என்னும் அமைதியான பூமியை கலவர பூமி ஆக்கியதில் தமிழர்க்கு மிகப்பெரும் பங்கு உண்டு, இதை யாரும் மறுக்க முடியாது.
கர்நாடக தனி நாடா என்று இப்போது கேள்வி கேட்பவர்கள் விடுதலை புலிகளை ஆதரிப்பது எதனால்? தமிழ்நாடு தனி நாடா?
மொழி, இனம், பிராமண துவேஷம், தென்னிந்திய மற்றும் இந்திய பண்பாட்டுக்கும், கலாச்சரதிற்கும் எதிரே எடுத்த "எதிர் கலாச்சார" நிலை ஆகியவற்றின் நீண்ட கால விளைவே இந்த கர்நாடக பிரச்சினை.
இது ஹோகேனக்கள் பிரச்சினையே அல்ல , இது கர்நாடகாவில் தமிழர் மேல் உள்ள வெறுப்பை காட்டும் ஒரு வாய்ப்பு. இந்த பிரச்சினை இல்லை என்றால் வேறு பிரச்சினை, ஆனால் தமிழர்களும் அதன் தலைவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆனால் தெரியப்போவதே இல்லை என்ற கேள்வி என்னவென்றால்
"பெங்களூரில் தெலுங்கர்களும் மலையாளிகளும் அமைதியாக வசிக்கும்போது தமிழர்கள் மட்டும் ஏன் தாக்கப்படுகிறார்கள்?"
இதற்கான பதிலை மனசாட்சிக்கு உண்மையாக, நேர்மையாக எந்த வித அரசியல் நோக்கின்றி உண்மையிலேயே தமிழ் அழிந்தாலும் தமிழர் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்தித்தால் தமிழரால் வருங்காலத்தில் வாழ முடியும். இல்லை என்றால் இதே போல் சென்ற இடமெல்லாம் அடி என்று வாழ வேண்டியதுதான்.
No comments:
Post a Comment