சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு கர்நாடக பார்டரில் உள்ள ஹோகேனக்கல் என்ற water resource தொடர்பாக சில பிரச்சனைகள் ஏற்பட்டது.தமிழர்களின் சொத்துக்கள், தமிழ் திரைப்படங்கள் பெங்களூரில் தாக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் ஒரு கூட்டம் போட்டனர் அதில் சிலர் ஆவேசமாக பேசினர்.
சினிமாவில் இருப்பவர்களே இப்படி என்றால் தமிழ் தமிழ் என்று கட்சி நடத்துபவர்கள் இன்னும் ஆவேசமாக பேசுவர், பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
உதாரணம் : திருமாவளவன், பழ. நெடுமாறன்,ராமதாஸ் போன்றவர்கள்.
எனது கட்சி என்னவென்றால்
கர்நாடகா தமிழகத்தை விட 50-60 வருடங்கள் பின் தங்கி இருக்கிறது.எப்படி,
தமிழகத்தில் 1930-களில் ஆரம்பித்த இந்து மத துவேஷமும், நாத்திகவாதமும், பிராமண துவேஷமும் தமிழ், தமிழர் என்ற கோஷமும் 1960-ல்/ 70-ல் உச்சகட்டத்தில் இருந்ததோ அதே போல அதே போல் கர்நாடகாவில் 1980-களில் ஆரம்பித்து ஆரம்பித்த தமிழர் துவேஷம் இப்போது உச்சகட்டத்திற்கு சென்று உள்ளது.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள், ஒரு தெலுங்கருக்கோ அல்லது ஒரு மலையாளிக்கோ இந்த நிலைமை பெங்களூரில் இல்லை, தமிழர்க்கு மட்டுமே உண்டு. ஏன் என்றால் தமிழருக்கு மட்டுமே தாய்மொழி தவிர்த்து மற்ற மொழி பேச வராது.அதாவது "தமிழுக்கு அமுதென்று பேர் மற்ற எல்லா மொழிக்கரர்களும் தமிழ் மொழியை கற்று அதன் பழமையை போற்றி நம்முடன் உறவாட வேண்டும்" என்ற கோரிக்கையை சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த ஊரிலும் வைப்பதற்கு தமிழன் தயக்கபடவே மாட்டான். இதில் சந்தேகமே வேண்டாம்.
ஆனால் இந்த சந்தர்ப்பம் அவனுக்கு சில ஊர்களில் தான் அமைகிறது. அவற்றில் பிரதானமானது பெங்களூர்.
கன்னடரின் பிரதான குற்றச்சாட்டே "இங்கே வந்து இத்தனை வருடம் ஆகியும் கன்னடம் கற்றுக்கொள்ள வில்லையே" என்பதுதான். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது விளிம்பு நிலை மக்களையே!
தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்து கன்னடர்களுக்கும் தமிழ் தெரியும்ஆனால் கர்நாடகவிளுருக்கும் 75% சதவித தமிழர்களுக்கு கன்னடம் தெரியாது, (அதாவது கன்னடம் பேசும்போதே இவர்கள் தமிழர் என மற்ற கன்னடர் தெரிந்து கொள்ளலாம் - அந்த அளவில்தான் இருக்கும்).அவர்கள் தனித்து தெரிவதால் அவர்களை அடையாளமும் கண்டு கொள்வது மிகவும் எளிது.இதுதான் இங்கே பிராதன பிரச்சினை, ஆனால் இங்கே ஊதும் தமிழ் என்ற சங்கில் எல்லோரும் செவிடர் ஆகிவிட்டனர்.
எனவே கன்னடர்களை தமிழ் நாட்டில் அடையாளமும் கண்டு கொள்வது மிகவும் கடினம். கன்னடர்களை ஒரு நிறுவனமாகவே அடையாளமும் காண முடியும். அதனால் வன்முறையும் மிக அதிக அளவில் இருக்காது, போலீசாருக்கும் அதை கட்டுப்படுத்துவது மிகவும் எளிது.
60 வருட திராவிட அரசியல் நமக்கு தந்து இருக்கும் சொத்து இது, அதாவது ஹிந்தியை படிக்கவேட்டாமல் செய்து தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழர்களை விலக செய்து, துய தமிழ், தனித்தமிழ் என்றெல்லாம் கூறி கூறி தமிழர்களுக்கு ஒருவிதமான superiority complex வளரச்செய்து அதன் மூலம் அவர்களை மற்ற மொழி கற்கும் ஆற்றலை அல்லது ஆவலை நிறுத்தியதால் வந்த வினை இது.
-
No comments:
Post a Comment