சுஜாதா பற்றி சாருவின் கட்டுரை
இந்த கட்டுரையை நான் சாருவிடமிருந்து எதிர்பார்த்தேன்/எதிர்ப்பார்க்கவில்லை.ஆம் இரண்டும்தான்.
எனக்கு எட்டிய வரை சாரு சுஜாதாவுடன் உடன்படுவார் என்றே எண்ணவில்லை. ஏன் என்றால் சாரு விளிம்பு நிலை மனிதர்களை பற்றி எழுதவேண்டும் எனச் சொல்பவர், ஆனால் சுஜாதா விளிம்பு நிலை வாழ்க்கை பற்றி எழுதாதவர், அப்படியே எழுதினாலும் ஒரு அதிகாரி தன் பியுனின் வாழ்வை சில நொடிகள் நினைப்பதை போலவே எழுதுவார்,எனவே சாரு சுஜாதாவை தாக்குவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து இருந்தேன்.
சாரு ஏமாற்றி விட்டார். ஆனால் ஒரு விசேஷம் பாருங்கள், சுஜாதா என்ற magnet எல்லோரையும் தன்பால் இழுத்து கொள்ளும், சாரு போன்றவர்களே
மாட்டும்போழுது, என்னை போன்ற சாதாரண வாசகனா மாட்டாமல் விடுவான்?, நானும் சுஜாதா புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க மாட்டேன்.அதனால் சுஜாதா பற்றி சாரு எழுதியதும் எனக்கு இருந்த முக்கியமான அலுவலக வேலையை விட்டு விட்டு இதை படிக்க தொடங்கினேன்.
இதை படிக்கும்போது 'பாலோடு தேன் கலந்தாற்போல' என்று டயலாக் விட்டால் நான் சுஜாதா மற்றும் சாருவின் வாசகன் என்ற தகுதியை இழக்கிறேன்.
சாருவின் இந்த கட்டுரையை படிக்கும்போது நான் அடைந்த உணர்ச்சியை விவரித்தால் அதற்கு பெயர் ecstasy. ஏறக்குறைய "அம்மாவிடம்" பேசிய அ.தி.மு.க தொண்டனின் மனநிலையில் இருந்தேன்.ஒரு புரட்சியாளன் ஒரு சாம்ராஜ்யதிபதிக்கு கொடுத்த மரியாதையாக இதை என்னால் பார்க்க முடிகிறது (Gokul...control yourself).
சுஜாதாவின் "multi facet personality" நம் எல்லோருக்கும் தெரியும், ஆனால் சாருவின் area-விலும் நுழைந்து இருக்கிறார் என்று தெரியாது.
ஆனாலும் சாரு சுஜாதாவின் ஆணாதிக்க எழுத்தை பற்றி குறிப்பிடாதது எனக்கு வருத்தமே.
மற்றபடி அமெரிக்க பீட் எழுத்தாளரை சுஜாதா குறிப்பிட்டதும் அதை சாருவும் ரசித்து இருப்பதும், என்னை பொறுத்தவரை "சித்தப்பாவும் தாத்தாவும் ஏதோ சீரியசா பேசிட்டு இருக்காங்க, அதனால அந்த ரூம் பக்கமா போய் விளையாடுவோம், எதுனா காதில விழுந்தா friends கிட்ட பேசும்போது உதவும்" மன நிலையையே அடைகிறேன.்
ஒன்றை கவனிக்க வேண்டும் ஜெயமோகனும் சரி , சாரு நிவேதிதாவும் சரி சுஜாதாவை பாராட்டி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் எந்த இலக்கியவாதிகளாலும் செய்ய முடியாத சாதனை இது. ஏன் என்றால் சாரு நிவேதிதாவின் எழுத்தின் மூலம் வேறு , ஜெயமோகனின் எழுத்தின் மூலம் வேறு என்று சாருவே சொல்லி இருக்கிறார். இருவரும் சேர்ந்து பாராட்டி இருக்கிறார்கள் என்றால், ஏறக்குறைய சாருவின் வார்த்தையில் சொல்வதானால் "நகுலன் பள்ளியும்", "சுந்தர ராமசாமி பள்ளியும்" சேர்ந்து பாராட்டியதற்கு சமம்.இதன் வரிசையில் இன்னொருவருக்கு
பாராட்டு என்பது கி.பி. 2080-க்கு பிறகே சாத்தியம் என்று தோன்றுகிறது.
இது ஒரு நம்ப முடியாத சாதனை.ஆங்கிலத்தில் சொல்வதனால் Astounding feat என்று சொல்லலாம்.
ஒரு மனிதன் அதி தீவிர காம்ரேடுககளை தவிர்த்து மற்ற எல்லோரையும் கவர்ந்து இருக்கிறார்.
நிறைவாழ்வு - வேறு ஏதும் சொல்வதற்கு இல்லை.
சாருவின் கட்டுரைக்கு வருவோம்.
நான் charuonline படிக்க ஆரம்பித்தது 2004 என்று ஞாபகம். அன்று பார்த்த சாருவிற்கும் இன்று பார்த்த சாருவிற்கும் வித்தியாசம் ஏராளம்.
வைணவ இலக்கியம், வேளுக்குடி கிருஷ்ணன்,உபன்யாசம்,மாதவ பெருமாள்-sir , நான் உங்கள் வாசகன், இன்னொரு பாலகுமாரன் ஆகிவிடுவிர்களோ என பயமாய் இருக்கிறது.(நீங்களோ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று சொல்கிறீர்கள், உங்கள் பயம் உங்களுக்கு எங்கள் பயம் எங்களுக்கு!).இங்கே ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும், அது சாருவின் நேர்மை! பொதுவாக நாத்திகத்தில் இருந்து ஆத்திகத்திற்கு மாறியவர்கள் அதை வெளியே சொல்ல வெட்கபடுவர்கள் ஆனால் சாரு தன் மனதிற்கு உண்மையாக அதனை ஒத்துகொள்கிறார், இதை பாராட்டியே ஆக வேண்டும்.
இதில் சாரு சுஜாதாவின் "காந்தளூர் வசந்த குமாரன் கதை" பற்றி சொல்லி இருக்கிறார். எனக்கென்னவோ அது மிகச்சிறந்த சரித்திர கதையாக தெரியவில்லை, சுஜாதாவின் கணேஷ் கணேச பட்டராகவும் வசந்த் வசந்த குமாரனாகவும் வேறு ஒரு தளத்தில் வந்து இருந்தார்கள், அவ்வளவுதான்.
அதே போல் சுஜாதா அக்காலத்தில் சினிமா பற்றி எழுதியதை சாரு மிக அற்புதமாக மேற்கோளிட்டு இருக்கிறார் அவருக்கே உரிய ஸ்டைலில்.
சாரு என்றாலே எனக்கு நினைவிற்கு வரும் சொல் "எதிர் கலாச்சாரம்". charuonline-ல் முதலில் நான் படித்த மது வகைகள்,வாத்து கறி,குரங்கு கறி, தாய்லாந்து பெண்களின் யோனி, கஞ்சா, மலம், மலத்தை கழிக்க படும் சிரமங்கள், மலத்தின் நாற்றம், வியர்வை மற்றும் விந்து (Ref: மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்!), செக்ஸ் (X-இடம் sex - கிணற்றில் பக்கெட் போட்ட மாதிரி!) கலந்த எழுத்து,சாருவை மற்றவரிடமிருந்து வித்தியாசப்பட வைத்தது/வைக்கிறது.
ஆனால் அவரது சமீபத்திய ஆன்மிக போக்கு அவரது எதிர் கலாச்சாரத்தையே மாற்றுகிறது. ஒரு வேளை, தமிழகத்தில் தி.க பிரச்சாரம் செய்த எதிர் கலாச்சாரமே, மக்களின் கலாச்சாரமாகி போய், அதனை எதிர்த்து எதிருக்கு எதிர் கலாச்சாரம் என்று சாரு ஆன்மிகத்தில் மூழ்கிவிட்டாரோ என்று எண்ண தோன்றுகிறது (இதுவும் சாருவிடம் இருந்து கற்றதுதான்). இதனை சாரு படித்தால் குழந்தைத்தனமான பேச்சு என்று கூட சொல்வார், ஒரு ரசிகனுக்கு
தோன்றியதை சொல்ல கூடாதா சார்?
இதற்கு அவரது private life-ல் நேர்ந்த சில சம்பவங்களும் காரணமாக இருக்கலாம், எனக்கு தெரியவில்லை.
மொத்தத்தில் சுஜாதா பற்றிய சாருவின் கட்டுரை மிக நீண்ட காலம் நினைவில் நிற்கும்.
ஏன் எனில் சுஜாதா ஒரு mammooth figure , அவரின் தமிழ் இலக்கிய அறிவைப்பற்றி பல பேர் எழுதி விட்டார்கள், அவரின் மேற்கத்திய படைப்புக்கள் பற்றிய புலமையும் ஆளுமையும் பற்றி எவருமே எழுதவில்லை , காரணம் simple யாருக்கும் அதைப்பற்றி தெரியாது, இந்த சூழ்நிலையில் சாரு போன்ற ஒருவர் சுஜாதாவின் நன்றாக அறியாத முகத்தை விளக்கி எழுதி இருக்கிறார். செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய மனிதருக்கு செய்ய வேண்டியவர் செய்த மரியாதை. நன்றி என்பது ஒரு சிறு சொல்.
7 comments:
http://yemkaykumar.blogspot.com/2005_03_01_archive.html
சுஜாதாவின் வெகுஜன எழுத்து எனக்குப்பிடிக்கும், ஆனால் அதை வைத்து அவர் எதையும் சாதிக்கவில்லை. ஆரம்பத்திலேயே அவர் நின்றுகொண்டிருந்தார். அதைவிட்டு அவர் நகராததில் எனக்கு வருத்தம். உண்மையில் சொன்னால், கமல், வெகுஜன ஊடகமான சினிமாவில் செய்துபார்த்த நவீனத்துவம் எதையும் இவர்களில் யாரும் எழுத்தில் செய்யவில்லை!"--சாரு.
எம்.கே.குமார்.
http://yemkaykumar.blogspot.com/2005/02/blog-post_110821670715794045.html
சாருவின் எழுத்துக்கள் எனக்கும் பிடித்தமானவையே கோகுல். சமிபத்தில் இங்கு (வாசகர் வட்டம் சந்திப்பில்) சுப்பிரமணியன் எனும் நண்பர் பின்நவினத்துவம் பற்றி உரைநிகழ்த்தினார். அப்பபொழுது ஜெயகாந்தனால் ஏன் தற்பொழுது தீவிரமாக எழுதமுடியவில்லை அப்படியே அவர் எழுதினாலும் அவரது படைப்புகள் தோற்றுப்போனதாகவோ அல்லது நீர்த்துப்போனதாகவோதான் இருக்கும் என்று அவர் ஆத்திகனான மாறியதை சொல்லி குறிப்பிட்டார். சாருவின் இணையவழி உங்களின் கட்டுரையை படித்ததும் எனக்கு என்னவோ இந்த ஞாபகத் வந்தது தட்டிவிட்டேன் . சுப்பிரமணியனின் உரையை முழுமையாக எழுதவேண்டும் என்று நினைத்து நினைத்து மாதங்கள் ஆகிவிட்டன.
தோழமையுடன்
பாண்டித்துரை
http://pandiidurai.wordpress.com/
நன்றி பாண்டித்துரை,
கருத்துக்கு மிகவும் நன்றி. எனது கட்டுரைக்கான சாருவின் பதிலை அவரது charuonline-ல் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Regards
Gokul
dear gokul...excellent post....after reading charu's post in charuonline i had the same feeling...!!!...somewhere somebody is expressing fine thoughts on behalf of a unknown group.this is that kind of post.
seriously thanx for the thoughts and post.
Hi nanda,
Thanks for your comments. Keep reading the blog :-)
-gokul
நன்றி என்பது ஒரு சிறு சொல்
நன்றி என்பது ஒரு சிறு சொல் -- very good writeup
Post a Comment