Monday, 15 September 2008

கலைஞர் கையில் தமிழகம்.....

Blog-ஐ தொட்டு ரொம்ப நாள் ஆச்சு! சென்னைக்கும் பெங்களுருக்கும் shuttle service பண்றதுக்கே நேரம் சரியா இருக்கு, என்ன பண்றது..

ஆனாலும் நம்ம கருணாநிதி திரும்பி பார்க்கதவர்களையும் பார்க்கவைக்கும் சாமர்த்தியசாலி. இந்த துக்ளக் ஆட்சியை பார்த்த யாருக்கும் கொஞ்சமாவது திட்ட தோணும்.

செப்- 15 அண்ணா பிறந்த நாள், நூறாவது பிறந்த நாள், சரி நினைவு கூற வேண்டும் இல்லை என்று சொல்ல வில்லை, அதனால் எது செய்யக்கூடாதோ அதை செய்வதே எங்கள் கொள்கை என்று சொன்னால் என்ன செய்வது.

இறந்து போன ஒரு மனிதரின் பிறந்த நாளிற்கு பொது விடுமுறையா? அதுவும் முன்னாள் மாலை அறிவிப்பதா? மறுநாள் செய்ய வேண்டியது என்று எத்தனை பேர், எத்தனை நிறுவனங்கள் எத்தனை திட்டங்கள் போட்டு இருக்கும்? ஒரு யோசனை வேண்டாமா? மக்களை நிறுவனங்களை ஆடு மாடுகளாக நினைத்து கொள்வதா?

பொது விடுமுறையை விட மோசமானது ஆயுள் கைதிகளை விடுவிப்பதுஅவர்களை உள்ளே தள்ள எத்தனை பேர் உழைப்பு பயன்பட்டிருக்கும், எத்தனை arguements, counter arguements, எத்தனை judgements reserved, எத்தனை சாட்சிகள் உடைக்கப்பட்டு, திரும்ப ஒட்டப்பட்டு... அதையெல்லாம் இடது காலால் எட்டி உதைக்கப்பட்டு விட்டது.

இதற்கு பதில் சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை குறைக்க நடவடிக்கை எடுத்து இருக்கலாம், சிறைக்குள்ளே, எத்தனை கொள்ளை, கொலை, கற்பழிப்பு, ஹோமோசெக்ஸ் , எத்தனை அடக்குமுறை, சுகாதார சீர்கேடு, சித்ரவதை, வலி வேதனை ... எல்லாவற்றையும் அண்ணாவின் நூற்றாண்டு பேரிலேயே களைய பெரிய நடவடிக்கை எடுத்து இருக்கலாம்.

இப்போது சுப்பிரமணிய சுவாமி கேஸ் போட்டு இருக்கிறார், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் , கைதிகள் மீண்டும் சிறையில் அடைக்கபடுவர்.
இது போலிசுக்கு எவ்வளவு கஷ்டமான பணி? அதை விட கைதிகளுக்கு எவ்வளவு பெரிய வலி. சில நாள் விடுதலை எவ்வளவு பெரிய கொடுமை, உள்ளே இருக்கும் ரணத்தை கீறி விடுவதாகதா?


இதைத்தான் நமது துக்ளக் விரும்புகிறாரா? சில கட்சிக்கார குண்டர்களை வெளியே எடுக்க மற்றவர் உணர்வுடன் விளையாடுவதா? 85 வயது ஒரு மனிதருக்கு இந்த முதிர்ச்சியை கூட கொடுக்கவில்லையா?

இவ்வளவு முட்டாள்தனமாக, உணர்ச்சி வசப்படும் நிலையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் இருக்கலாமா? இப்படிப்பட்ட மனிதர்களை ஆள விட்டுவிட்டு தமிழர்கள் தனது வாழ்க்கை, தனது ஆசை என்று வாழலாமா?
சிந்திக்க தெரிந்த நடுத்தர வர்க்கம் தன்னை ஒரு வோட்டு வங்கியாக மாற்றிக்கொள்ளவில்லை என்றால் இந்த மாநிலத்தை நாட்டை கடவுள் கூட காப்பாற்ற முடியாது.

ரேஷன் கடையில் மளிகை சாமான், ....
அப்போ ரேஷன் கடையில் வாங்காதவர்கள் ..? வேண்டாம் கேள்விகள் எழுந்து கொண்டே போகிறது....

No comments: