நான் எழுத நினைத்ததை கோகுல் எழுதிவிட்டார். ஆனால், கோகுல் "சொல்ல மறந்த கதை" தமிழர்களின் "மின்சார கனவு".
தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக கொண்டு வர நாளொன்றுக்கு இருபத்திமூன்று மணி நேரம் அயராது உழைக்கும் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில் மின்துறை செய்துள்ள சாதனைகளை பட்டியலிட இந்த blog போதாது. எனினும், மின் துறையின் சில உலக தரம் வாய்ந்த சாதனைகளை இங்கே பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.
தொடர்ந்து இரண்டு மாதமாக நாளொன்றுக்கு ஐந்து மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் ஐந்து மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டும் செய்து வருகிறது அரசு. இதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள்:
1. ஏழை/நடுத்தர/பணக்கார வர்கத்தினரின் மின்சார பில் கணிசமாக குறைந்துள்ளது. "சமூக நீதி காவலர்", "சமத்துவபுர நாயகன்" போன்ற பட்டங்களுக்கு ஏற்ப ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் மின்வெட்டை அமல் செய்த கலைஞரை பாராட்டாமல் இருக்க முடியுமா?
2. மாலை மற்றும் இரவு நேரங்களில் எப்போதும் மின்சாரம் இல்லாததால், மாணவர்கள் இரவு முழுவதும் தெருவில் விளையாட வசதியாக உள்ளது.
3. வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடும் candle light டின்னரை ஏழை குடும்பங்கள் வீட்டிலேயே அனுபவிக்க வழி வகுக்கிறது.
4. கொள்ளையர்கள் காலாகாலத்தில்(ஏழு முதல் பதினோரு மணிக்குள்) கொள்ளையடித்து விட்டு வீடு போய் சேர வசதியாக உள்ளது.
5. Inverter சேல்ஸ் அதிகரித்து அரசுக்கு விற்பனை வரி கிடைக்கிறது.
தமிழக காங்கிரசார் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று அடிக்கடி கூறுவார்கள். ஆனால், இப்படியே ஒரு ஆறு மாதம் போனால் தமிழகம் காமராஜ் ஆட்சியையும் தாண்டி கற்காலத்தை நோக்கி போய்விடும்.
No comments:
Post a Comment