சாருவின் zero degree படித்து கொண்டு இருக்கிறேன். நான் இது வரையில் தமிழில் erotic literature படித்து இல்லை, இந்த புத்தகத்தை முழுவதுமாக erotic literature வகையிராவில் சேர்த்துவிட முடியாது.
பல விவரங்கள் உள்ளது, இந்த விவரங்கள் எல்லாம் ஒரு தொடர்ச்சியான நேர்த்தியான கதையமைப்பில் இருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும், ஆனால் ஒரு தனி மனிதனின் டைரி குறிப்பு போல உள்ளதால், இந்த புத்தகத்தை ஒரு கதை என்று சொல்வதை விட , பலவகைப்பட்ட தகவல்களை படித்த , உலக இலக்கியம் படித்த ஒரு மனிதரின் டைரி குறிப்பு என்றே சொல்ல தோன்றுகிறது.
பல ஆண் பெண் உறவுகள் பச்சையாக கூறப்பட்டுள்ளது, அதில் தவறில்லை ஆனால் அதற்கான கதைக்களம் வேண்டுமல்லவா? என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் ஒரு மஞ்சள் புத்தகத்தின் கிழிந்த பக்கங்களை படிப்பது போன்று ஒட்டிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி சில பக்கங்கள் மிகுந்த ஒழுங்கோடு இருக்கின்றது.
ஒழுங்கின்மையையே தனது ஒழுங்காக கொண்டுள்ளது இந்த நாவல்.
பொதுவாக ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்பனை ஆகக்கூடிய ஆங்கில புத்தக சந்தையில் இந்த புத்தகங்கள் சில நூறு விற்கலாம், சாரு இதனை தமிழில் எழுதியதன் நோக்கம் தெரியவில்லை.
இந்த opinion பிறகு மாறலாம் , தெரியவில்லை.
-Gokul
2 comments:
சாரு எது எழுதினாலும் எப்படி நீ பாராட்டற? இப்படி தனக்கு ஒரு வாசகன் இருக்கான் அப்படின்னு தெரிஞ்சா சாரு ரொம்ப சந்தோஷப்படுவார்.தேடி தேடி அவர் புக் மட்டும் தான் வாங்கி படிக்கறேன்னு நினைக்கிறேன்.
ஹீ ஹீ....
Post a Comment